Home Blog Page 68

கூட்டணிக்கு நோ சொல்லிய விஜய்.. தேமுதிகவிடம் கையேந்தும் இபிஎஸ்.. விரக்தியில் அதிமுக தொண்டர்கள்!!

0

ADMK DMDK: அதிமுகவின் தலைவராக இபிஎஸ் பதவி ஏற்றதிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் நடைபெறவிருக்கும்  2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென இபிஎஸ் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக தேசிய கட்சியான பாஜகவுடன் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டார். தேர்தலில் வெல்ல பாஜக கூட்டணி மட்டும் போதாது என்று நினைத்த இபிஎஸ் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

மேலும் புதிதாக உதயமாகியுள்ள கட்சியான தவெக உடனும் கூட்டணி குறித்து பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு முட்டுகட்டை போடும் விதமாக தவெகவை சேர்ந்த நிர்மல்குமார், எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று தெரிவித்தார். இவரின் இந்த பேச்சு விஜய்க்கு அதிமுக கூட்டணியில் இணையும் எண்ணம் சிறிதளவும் இல்லையென்பதை உணர்த்தியது. இதனால் அப்செட் ஆன இபிஎஸ் தன்னுடைய அடுத்த கட்ட முடிவை எடுத்து வைத்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், அடுத்ததாக இபிஎஸ் தேமுதிகவிடம் மீண்டும் பேச உள்ளதாக தகவல் வந்துள்ளது.

கூட்டணி கட்சிகள் இல்லாமல் வெற்றி பெற முடியாது என்றுணர்ந்த இபிஎஸ், திமுக கூட்டணி பலம் பெறுவதை பார்த்து, தேமுதிகவும் அந்த கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளார். ராமதாஸ் ஏற்கனவே திமுக பக்கம் சாய்வதை அறிந்த அவர் பிரேமலதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது அதிமுக தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மிக பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்ட அதிமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மூன்றாம் நிலை கட்சிகளிடம் கையேந்தும் அவல நிலைக்கு வந்து விட்டதால், அதிமுக ஆதரவாளர்கள் விரக்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இழப்பு கரூரை சேர்ந்தவர்களுக்கு எங்களுக்கென்ன.. விஜய்யை எதிர்க்க தயங்கும் காங்கிரஸ்!!

0

CONGRESS TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஆயிரக்கணக்காக தொண்டர்களை தன் வசம் ஈர்த்துள்ளார். ஆனால் கடந்த மாதம் கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் அதனை அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் விஜய்க்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இபிஎஸ் விஜய்க்கு நேரடியாகவே ஆதரவு தெரிவித்து, திமுக அரசின் மேல் உள்ள பிழைகளை சுட்டி காட்டி வந்தார். பாஜகவும் விஜய்க்கு ஆதரவாக 8 பேர் கொண்ட தனி நபர் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் காங்கிரஸ் கட்சி கரூர் சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், விஜய்யிக்கு மறைமுகமாக உதவி வருகிறது என்றும் சொல்லப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை அழைத்து வந்து சந்தித்த விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூரிடம் கேட்ட போது, பாதிக்கப்பட்டவர்கள் கரூர் மக்கள், ஆறுதல் கூறுவது விஜய், இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது என்று பதிலளித்தார்.

திமுக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி விஜய்யை நேரடியாக எதிர்க்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இவரின் இந்த பதில் திமுகவிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லும் காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதால் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவிக்க தயங்குகிறது என்று சொல்லப்படுகிறது. 

விஜய் இல்லை.. அப்போ நம்ப தான் கிங்கு.. பிரேமலதா போட்ட பிளான்!!

0

ADMK DMDK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி, எதிர்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். திமுகவிடமிருந்து மக்களை காப்பற்றி தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே அவர் அதிமுக உடன் கூட்டணி சேர்வார் என்று பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து சமீப காலமாக அதிமுக பிரச்சாரங்களில் தவெக கொடி பறந்தது அனைவரது மத்தியிலும் பேசு பொருளானது. இதுகுறித்து விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், தவெகவின் இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை வெளிப்படையாக கூறியிருந்தார். இதனால் தவெகவிற்கு அதிமுக உடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை என்பது தெளிவானது.

2026 தேர்தலுக்காக அதிமுகஉடன் பாஜக கூட்டணி மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், அதனுடன் தவெகவும் இணைந்தால் ஆட்சி உறுதி என்று நினைத்திருந்த இபிஎஸ்க்கு இது பேரிடியாக இருந்தது. இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறது தேமுதிக. தேர்தல் சமயத்தில் தேமுதிக, அதிமுக, திமுக போன்ற இரண்டு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதிமுக அதிக தொகுதிகளை தர மறுத்துள்ளது, இதனால் திமுகவிடம் பேசிய தேமுதிகவுக்கு தோல்வியே மிஞ்சியது.

விஜய் அதிமுகவிற்கு நோ சொல்லியதால் தேமுதிக மீண்டும் இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிக தொகுதிகளை கேட்க  உள்ளதாகவும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டமன்ற தேர்தலில் இபிஎஸ் வெற்றி பெற வேண்டியது  மிகவும் அவசியம் என்பதால் பிரேமலதாவின் நிபந்தனைகளுக்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

SIR குறித்து எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள்.. ஷாக்கில் பிஜேபி!!

0

ADMK DMK BJP: தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு  திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து நேற்று இதற்கான பணிகள் தொடங்கின. இதனை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் நோக்கம் வாக்காளர் பட்டியலில் காணப்படும் தவறுகள், இரட்டை வாக்கு பதிவு, இறந்தவர்களின் பெயர்கள், முகவரி இல்லாத வாக்குகள் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதாகும். வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு பட்டியலை துல்லியமாகவும், வெளிப்படையாகவும் தயாரிப்பதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மழைக்காலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடங்குவது தேவையற்றது. இது தேர்தல் ஆணையத்தின் உள்நோக்கத்துடன் கூடிய முடிவு போல தெரிகிறது.

ஏற்கனவே சரியான பட்டியல் உருவாக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது, என்று விமர்சித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் தொகுதியில் இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் பட்டியலில் உள்ளன. இரட்டை வாக்கு பதிவு, முகவரி தவறுகள் போன்றவை சரி செய்யப்பட வேண்டியது அவசியம். அதிமுக இந்த நடவடிக்கையை முழுமையாக வரவேற்கிறது, என்றார். பாஜக மாநில தலைவர் கரு. நாகராஜனும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மிகவும் அவசியமானது. இதனால் தேர்தலின் வெளிப்படைத்தன்மை உயரும். அனைத்து கட்சிகளும் இணைந்து இதை வெற்றிகரமாக்க வேண்டும் என கூறினார். இந்த கூட்டம், வரவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சி அதிகாரத்தை குறி வைத்த விசிக.. பின்னணியில் பாஜகவா.. எங்கள சாதாரணமா நினைக்க வேண்டாம்.. திமுகவிடம் சவால்!!

0

DMK VSK BJP: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் அயராது உழைத்து வருகிறது. ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும் அதன் பணிகளை செய்து வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுகவிற்கு எதிரான பலமான கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெகவை சமாளிப்பதே திமுகவிற்கு பெரும்பாடாக உள்ள நிலையில் தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற பல்வேறு நிபந்தனைகளை முன் வைப்பதை தொடர்ந்து பார்க்க முடிகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் அதிக தொகுதிகளை கேட்பது மட்டுமல்லாமல், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தற்போது ஆட்சியில் பங்கை வெளிப்படையாக கேட்டு வருகிறது. விசிகவின் தலைவர் திருமாவளவன், எங்களுக்கு கூட்டணியில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கபட்டிருப்பதாக கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது புதிதாக விசிகவின் நிர்வாகி சங்கத்தமிழன், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எந்த சதி வேலைகளையும் செய்வோம், சென்ற தேர்தலில் 6 சீட்டுகள் கொடுத்தோம் இந்த தேர்தலிலும், அதையே கொடுத்து விடலாம் என்று கனவு காணாதீர்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கடைசி தொண்டன் இருக்கும் வரை ஆட்சி அதிகாரத்தை நோக்கி ஓடுவோம் என்று தெரிவித்திருக்கிறார். இவரின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வேளையில், இவர்களின் இந்த தொடர் வலியுறுத்தலுக்கு பின்னால் பாஜகவின் சதி திட்டம்  இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் பாஜகவின் மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஸ்டாலின் சமூக நீதியை பின்பற்றுபவராக இருந்தால், நீண்ட காலமாக திமுக கூட்டணியிலிருக்கும் திருமாவளவனுக்கு மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அது மட்டுமல்லாமல்,  நயினார் நாகேந்திரன் சமூக நீதியை பின்பற்றாத கட்சியுடன் திருமாவளவன் ஏன் தொடர்கிறார் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இவர்களின் தூண்டுதல் காரணமாக தான் விசிக இவ்வாறான கோரிக்கையை முன் வைக்கிறது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பேரம் பேசும் கட்சியிடம் திமுக கறார்.. நீங்க கூட்டணிக்கு வந்தால் இவ்வளவு தொகுதிகள் தான்!!

0

DMK DMDK:  தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தொடர்ந்து 7வது முறையும் ஆட்சி கட்டிலைப் பிடித்திட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தின் மூலம் மக்களை கவரும் பணியும், திமுக அரசு  செயல்படுத்திய திட்டங்களை ஒவ்வொரு வீடுகளிலும் கொண்டு சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸும், விசிகவும் ஆட்சி பங்கையும், அதிக தொகுதிகளையும் கேட்டு வலியுறுத்து வந்தாலும், மற்றொரு புறம் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும், ஓபிஎஸ்யும் திமுக கூட்டணி உறுதியாக இருப்பதால், இந்த தேர்தலில் திமுக வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க, திமுக- தேமுதிகவுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்த பேச்சவார்த்தையில் பிரேமலதா திமுக தலைமையிடம் 20 தொகுதிகளுக்கு மேல் கேட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் திமுகவோ ஆரம்பத்திலிருந்து எங்களுடன் கூட்டணியில் பயணிக்கும் கட்சிகளான காங்கிரஸும், விசிகவும் அதிக தொகுதிகள் கேட்பதால், உங்களுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கறாராக கூறியுள்ளது. விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு அரசியலில் பின்தங்கிக் காணப்படும் தேமுதிகவுக்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், ஒற்றை இலக்க தொகுதிக்கு சம்மதம் தெரிவிக்குமா, இல்லை தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

மீண்டும் எழும் தவெக .. அரசியல் திசையை நிர்ணயிக்கும் தவெக பொதுக்குழு கூட்டம்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், தனது கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யும் வகையில் நவம்பர் 5, அன்று மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10 மணிக்கு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதன் பின்னர் தவெக எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்தது. விஜய்யின் பிரச்சாரமும் முடிவற்ற காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சம்பவத்துக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, அக்டோபர் 27ஆம் தேதி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு, சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதன்பின் வெளியிட்ட அறிவிப்பில் விஜய், சூழ்ச்சிகளும், சூதுகளும் நம்மை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டாலும், நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை காக்கும் கவசம் எனக் கூறியுள்ளார். மேலும், இனி வரும் காலத்தில் நிதானமாகவும் திட்டமிட்டும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், கரூர் விபத்துக்குப் பிறகு நின்று கொண்டிருந்த தவெக மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறது எனக் கருதப்படுகிறது. நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிறப்புக் கூட்டம் கட்சியின் எதிர்கால திசையையும் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக அமைய உள்ளது.

விஜய்யை தொடர்ந்து திமுகவை விளாசிய அருண்ராஜா.. சிக்க போகும் திமுக அமைச்சர் இவர் தான்.. பட்டென பேசிய அருண்ராஜா!!

0

TVK DMK: தமிழக வெற்றிக் கழகம் தனது கொள்கை எதிரி திமுக தான் என்று அறிவித்ததிலிருந்தே தன்னுடைய பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு என அனைத்திலும் திமுகவை சரமாரியாக வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் கரூர் சம்பவம் நடந்து 1 மாதம் கழித்து திமுக அரசின் ஆட்சியை குறை கூறிய விஜய் தவெக சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதில் டெல்டாவில் நடந்த நெல் பயிர்களின் சேதம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் 6 கேள்விகளை முன் வைத்த விஜய், இது போன்ற நிகழ்வுகள் வருட வருடம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெரும் தமிழக வெற்றிக் கழகம் 28 பேர் கொண்ட நிர்வாக குழுவையும் அமைத்துள்ளது. இந்நிலையில் விஜய்யை தொடர்ந்து தவெகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர், அருண்ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில், செந்தில் பாலாஜி வழியில் அமைச்சர் கே.என் நேருவும் சிக்கப் போகிறார் என கூறி இருக்கிறார்.

அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு திறமை வாய்ந்தவர்கள் இருக்கும் போது லஞ்சம் பெற்று, வேலை வாய்ப்பை வழங்குவது தகுதியுள்ளவர்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்குகிறது என்று கூறினார். மேலும், கே.என் நேரு குறித்து கூறிய அவர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களில் 150 பணியிடங்களுக்கு சுமார் 25 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்கபட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான ஊழல்களுக்கு முதல்வர் எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

பாஜகவிற்கு தாவிய ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள்.. ஓபிஎஸ் அணியை குறிவைத்த பாஜக.. பயத்தில் ஓபிஎஸ்!!

0

ADMK BJP: அதிமுகவில் ஜெயலலிதா தலைமை வகித்த போது, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வரான இவர், சில மாதங்களுக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, என்னை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரை தொடர்ந்து சசிகலாவின் ஆதரவால் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

இவர் இந்த பதவிக்கு வந்த பிறகு, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கினார். இதன் பின்னர் ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். அப்போது பாஜகவில் இணைந்தார். அண்மையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காத ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து இவர் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவார் என்ற விவாதங்கள் வலு பெற்று வந்தது.

ஆனால் அதில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெரும், ஏனென்றால் அந்த கூட்டணி தான் உறுதியாக உள்ளது என்று கூறிய ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு அடித்தளமிட்டார். இந்த சூழ்நிலையில் ஓபிஎஸ் அணியின் மாநில மருத்துவர் அணி செயலாளர் கிருத்திகா, நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார். ஓபிஸ் அணியிலிருக்கும் பலரும் கட்சி மாறி வருவதால் ஓபிஎஸ் தற்போது பலவீனமடைவதாக உணர்கிறார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். 

அறிவிப்பை மட்டும் வெளியிடும் திமுக அரசு.. முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் அறிக்கையை திரும்ப பெற வேண்டும்.. அன்புமணி வலியுறுத்தல்!!

0

PMK DMK: பாட்டாளி மக்கள் கட்சி தற்போது தந்தைக்கும் மகனுக்கும் நிலவி வரும் தலைமை போட்டியால் இரண்டாக பிரிந்துள்ளது. இதனால் ராமதாஸின் ஆதரவாளர்கள் அன்புமணி மீது பழி சுமத்துவது, அன்புமணியின் ஆதரவாளர்கள் ராமதாஸ் மீது பழி சுமத்துவது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர்  ராமதாஸ் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் வகையில் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரது மகனுக்கு இளைஞரணியின் தலைவர் பதவியை வழங்கினார்.

மேலும் தன்னுடைய மூத்த மகள் காந்திமதிக்கு அண்மையில் செயல் தலைவர் பதவியையும் வழங்கினார். இவ்வாறு அன்புமணிக்கு எதிரான அடுத்தடுத்த செயல்களை செய்து வரும் ராமதாஸ் தற்போது, அன்புமணி கடுமையாக எதிர்த்து வரும் கட்சியான திமுக உடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனை நடக்க விடாமல் தடுக்க அன்புமணி பல்வேறு முயற்சிகளை கையில் எடுப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவின் ஊழலையும், அதன் செயல்பாடுகளையும் கண்டித்து அன்புமணி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று அன்புமணி தலைமையில், சேலம் மாவட்டம் மேட்டரில், தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, கோட்டையூர்-தருமபுரி மாவட்டம், ஓட்டனுர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் 75 ஆண்டுகால கோரிக்கை.

45 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான அறிவிப்பை வெளியிட்ட திமுக அரசு அதை இன்னும் செயல்படுத்தாமல் கிடப்பில் வைத்துள்ளது என்று குற்றம் சாட்டினார். திமுக அரசு அறிவிப்பை மட்டும் தான் வெளியிட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 30 மணல் குவாரிகளை திறக்க  போவதாக வெளியான அறிவிப்பை தமிழக அரசு திரும்ப பெற வேண்டுமென்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் தோல்வியடையும் என்று உறுதிபட கூறினார்.