Home Blog Page 69

அதிமுக-தவெக கூட்டணியா? யார் சொன்னது.. உண்மையை போட்டுடைத்த நிர்மல் குமார்!!

0

TVK ADMK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கியதிலிருந்தே அவர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்திலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. திமுகவை அரசியல்  எதிரி என்று கூறிய விஜய் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது தெரிந்த வியம். இதனால் தமிழகத்தில் மிகபெரிய திராவிட கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இபிஎஸ்யின் செயல்பாடும் அமைந்திருந்தது.

கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்தது, சட்டசபையில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது, அதிமுக பிரச்சாரத்தில் பறந்த தவெக கொடியை பார்த்து பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறியது போன்ற இபிஎஸ்யின் அனைத்து நடைமுறைகளும் விஜய்க்கு சாதகமாகவே அமைந்தது. ஆனால் விஜய், பாஜகவிலிருந்து அதிமுக விலகினால் தான் கூட்டணி வைக்கப்படும், மேலும் முதல்வரை வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்று பல நிபந்தனைகளை இபிஎஸ்யிடம் முன் வைத்துள்ளதாக தெரிகிறது.

இது மட்டுமல்லாமல் விஜய்க்கு அதிமுக உடன் கூட்டணியில் சேர விருப்பமில்லை என்றும் தவெக தொண்டர்கள் சமூக வளை தளங்களில் கூறி வந்தனர். இதற்கு  முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தவெகவின் இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்து தவெகவின் கருத்தை தெரிவித்துள்ளார். தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நிலைப்பாட்டில் தான் இப்போதும் இருக்கிறோம் என்று பதிலளித்தார். இவரின் இந்த பதில் இபிஎஸ் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மாநிலம் முழுவதும் தொடரும் திமுக இணைவு விழாக்கள்.. தேர்தல் தயாரிப்பில் திமுக தீவிரம்!!

0

DMK: தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களது ஆதரவு தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்கள் தேர்தல் தயாரிப்புகளில் மும்முரமாக உள்ள நிலையில், திமுகவும் தனது வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் முயற்சியில் முழு வேகத்தில் இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் திமுக எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்வில் திமுகவின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் பெருமளவில் பங்கேற்றனர். இணைவு விழாவில் மதியழகன் பேசுகையில், மக்கள் நலனுக்காக செயல்படும் கட்சி தான் திமுக. மக்கள் நம்பிக்கைக்கு உரிய தலைமையுடன் செயல்படுகிறோம். அடுத்த தேர்தலில் திமுக மீண்டும் வலுவாக ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்ததாவது, இந்த இணைவு நடவடிக்கை கிருஷ்ணகிரியில் திமுகவின் ஆதரவு தளத்தை மேலும் பலப்படுத்தும் என்றும், இதே போன்று பிற மாவட்டங்களிலும் இணைவு விழாக்கள் நடைபெற உள்ளன என்றும் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், வலுவான வாக்கு வங்கியையும், மக்களிடையே உறுதியான நம்பிக்கையையும் உருவாக்கும் நோக்கில் திமுக தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மேற்கு மாவட்டங்களில் திமுகவின் அரசியல் தாக்கம் கணிசமாக உயரும் என கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. தேர்தல் வரை இதுபோன்ற இணைவு விழாக்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், இது திமுகவின் வெற்றிக்கான அடித்தளமாக அமையும் என கூறப்படுகிறது.

விஜய்யை விட சீமான் தான் பெஸ்ட்.. சர்ச்சையை கிளப்பிய சேரனின் கேள்வி!!

0

TVK: இயக்குநர் சேரன் சமூக வலைதளங்களில் தன் கருத்துகளை பகிர்ந்து வருபவர். அவர் சமூக பிரச்சனைகள், திரைப்படம், அரசியல் நிலைமை போன்ற பல விஷயங்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். கடந்த காலங்களில் நடிகர் விஜய்யை பற்றியும் பல்வேறு வகையான பதிவுகளை வெளியிட்டுள்ளார் சில சமயங்களில் அவரை பாராட்டியும், சில சமயங்களில் விமர்சனங்களுடனும் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி, தனது கட்சியை தொடங்கியதை தொடர்ந்து, பலரும் அதனை பற்றி ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், சேரன் எழுப்பிய புதிய கேள்வி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அவர் விஜய் கட்சியினரிடம் நட்புடன் ஒரு கேள்வி கேட்கிறேன், கடந்த பத்து ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்களுக்கான பிரச்சனைகளை முன்வைத்து போராடி வருகிறது. அதே கருத்துக்களையும் கோட்பாடுகளையும் இப்போது விஜய் கட்சி முன்வைக்கிறது.

ஆனால் வாக்காளராக நீங்கள் நாம் தமிழர் கட்சியை ஒதுக்கி, விஜய்யை ஆதரிக்க நினைப்பதற்கு காரணம் என்ன? தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன், என பதிவிட்டுள்ளார். சேரனின் இந்தப் பதிவு இணையத்தில் வேகமாக பரவ, பல்வேறு கோணங்களில் மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் சேரனின் கேள்வி முற்றிலும் நியாயமானது என கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மற்றொரு பக்கம், விஜய் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். மேலும், சேரன் தனது பதிவில், விஜய் பேசுவதை காட்டிலும் சீமான் பன்மடங்கு திறமையாகவும் தைரியமாகவும் மக்களுக்காக போராடி வருகிறார். அப்படிப்பட்டவரை விட்டு, அரசியலுக்கு புதியதாக வந்த விஜயை ஏன் மேலாக மதிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்வி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இதுவரை விஜய் கட்சியினரால் இதற்கான தெளிவான பதில் எதுவும் வழங்கப்படவில்லை. ரசிகர்கள் சிலர் சேரனை விமர்சித்தாலும், பெரும்பாலான பதிவுகள் வெறும் ஆரவாரத்திலேயே முடிகின்றன.

நீங்க தலை மறைவானதனால தான் இவ்வளவு பிரச்சனை.. ஆதங்கப்பட்ட விஜய்.. திணறும் புஸ்ஸி ஆனந்த்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூரில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இதன் காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள்  புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் போன்றோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை  தொடர்ந்து இவர்கள்  மூவரும் தலைமறைவாகியிருந்த நிலையில், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நிர்மல் குமார் மற்றும் புஸ்ஸு ஆனந்த்க்கு சம்மன் அனுப்பட்டது. இதனை நிர்மல்  குமார் மறுத்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று விஜய் தலைமையில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில் சட்டமன்ற  தேர்தலுக்காக 28 பேர் கொண்ட நிர்வாக குழுவை விஜய் அமைத்துள்ளார். மேலும் இந்த குழுவிற்கு நான் தான்  தலைமை தாங்குவேன் என்று விஜய் கூறயிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு  முன் வெளியிட்ட அறிக்கைகளிலெல்லாம் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்குவார் என்று கூறப்பட்ட நிலையில், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணம் என்னவென்று ஆராயும் போது தான் கரூர் சம்பவத்தால் புஸ்ஸி ஆனந்த்  தலைமறைவாக இருந்தது விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரியவந்தது.

துயர சம்பவத்தின் போது தலைவருடன் இருந்து ஆலோசனை கூற வேண்டிய நபரே தலைமறைவானதால் விஜய்க்கு ஆனந்த் மேல் இருந்த நம்பிக்கை குறைந்து வருவதாகவும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் கரூர் சம்பவத்தை  விட இவர்கள் தலைமறைவானதை பற்றி தான் அனைத்து ஊடகங்களும் பேசி வந்தது விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் மேலிருந்த  ஆத்திரத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக தவெகவிலிருந்து புஸ்ஸி ஆனந்த ஒதுக்கப்பட்டிருக்கலாம்  என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

திமுகவுடன் நெருக்கம் காட்டும் தவெக.. ஆடிப்போன விஜய்.. கூட்டத்தில் வெளிவந்த உண்மை!!

0

TVK: தவெக கரூர் சம்பவம் காரணமாக மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. கட்சியின் தலைவர் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை அனைவரும் வெளியில் தலை காட்டாமல் இருந்தனர். சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட விஜய் பாதிக்கபட்டவர்களிடம்  மன்னிப்பு கூறியதோடு கலவரத்தை  தூண்டும் வகையில் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து சந்தித்த விஜய், இதற்கு பிறகு கட்சி தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அதில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 28 பேர் கொண்ட நிர்வாக  குழுவை விஜய் நியமித்துள்ளார். நிர்வாக குழுவில் யார் யாரை நிர்வகிக்கலாம் என்பது போன்ற ஆலோசனைகள் கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தலைமையில் நடைபெற்ற போது, கரூரில் ஏற்பட்ட விபத்துகள் எதனால் ஏற்பட்டது எனவும் ஆராயப்பட்டிருக்கிறது.

அப்போது விஜய் வருவதற்கு தாமதமாகும் என்று இரண்டாம் கட்ட தலைவர்கள் மக்களிடம் அறிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் கூட்டத்தை சரியாக வழி நடத்தவில்லை என்றும், கூட்ட நெரிசலில் மக்களுக்கு தேவையான எந்த முதலுதவியும் தவெக சார்பில் செய்யப்படவில்லை என்பதையும் விஜய் அறிந்து கொண்டார். இது மட்டுமல்லாமல் விபத்து  எதனால் ஏற்பட்டது என்பதை கூறாமல், ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி வந்துள்ளனர்.

மேலும் கரூர் சம்பவத்தில் தவெகவை சேர்ந்த பல பேர் திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு வந்தததும் தெரியவந்தது. இதன் காரணமாக தவெகவிற்கு உண்மையாக உள்ள தொண்டர்களையும், இரண்டாம் கட்ட தலைவர்களையும் மட்டும் கட்சியில் வைத்திருக்க முடிவு செய்துள்ளாராம். இதற்கான வேலைப்பாடுகள் விஜய் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

அதிமுகவை பின்னுக்கு தள்ளும் விஜய்.. இனிமே நம்ப கொடி தான் பறக்கும்.. திக்திக் மோடில் இபிஎஸ்!!

0

ADMK TVK: தமிழகத்தில் திராவிட கட்சிகளாக அறியப்படும் அதிமுகவும், திமுகவும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் திணறிப் போய்  இருக்கிறது. திமுகவை தனது அரசியல் எதிரி என்று கூறிய விஜய், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என்று  சொல்லப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில், அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்ததை கண்ட இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறினார்.

ஆனால் தற்போது புதிய திருப்பமாக அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத விஜய், மறைமுகமாக அதிமுகவை வீழ்த்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ளதை சாதமாக விஜய் பயன்படுத்த நினைக்கிறாராம். இபிஎஸ் அதிமுக தலைவராக பதவியேற்ற பிறகு, சசிகலா. ஓபிஎஸ், டிடிவி தினகரன், தற்போது புதிதாக செங்கோட்டையன், சத்தியபாமா போன்ற பல்வேறு முக்கிய அதிமுக தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இபிஎஸ் பதவி காலத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கும் விஜய் தனது அடுத்த பிரச்சாரத்தில் அதிமுகவையும் குறிவைத்து பேசப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியில் நிலவும் பிளவுகள், இரட்டை தலைமைப் பிரச்சினை, மற்றும் தலைமைக்கு எதிரான உட்கட்சி பூசல்கள் போன்றவை அதிமுகவின் பலவீனங்களாக பார்க்கப்படுகின்றன.

விஜய்யின் வருகை, கட்சியின் ஒற்றை இலக்கு வாக்குகளை மேலும் சிதறடித்து, அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தும் வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் ஒரு முறை அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும், பிரிந்த கட்சியுடனும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்ப மாட்டார்கள் என்று  கூறியது குறிப்பிடத்தக்கது. 

ராகுல் காந்தியின் சித்து விளையாட்டு.. தேசிய கட்சிகளுக்கு நோ சொன்ன விஜய்!!

0

TVK CONGRESS: கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக பாஜக விஜய்க்கு நேரடியாகவும், காங்கிரஸ் மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற முடிவு இன்னும் வெளியாகாத காரணத்தினால், விஜய்யை பகடை காயாக திமுக கூட்டணிகள் பயன்படுத்தி வருகின்றன. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் இதனை வெளிப்படையாக செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.எஸ் அழகிரி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் போன்ற பலரும், ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என திமுக தலைமையை  வலியுறுத்தி வருவது சமீப காலமாக அரங்கேறி வருகிறது. விஜய்க்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் நல்ல நட்புறவு இருப்பதால் அதிக தொகுதிகளையும், ஆட்சி பங்கையும்  தராவிட்டால் விஜய்யுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று திமுக தலைமையிடம் கூறியதாக தகவல் வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியிலிருந்து விலகும் எண்ணம் துளியும் இல்லை, நம்மை பயன்படுத்தி அதிக தொகுதிகளை பெற பார்க்கிறார்கள் என்பதை அறிந்த விஜய், காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ்- விஜய் கூட்டணி உறுதியாகும் என்று கூறப்பட்ட நிலையில், விஜய்யின் இந்த முடிவு காங்கிரஸுக்கு பேரிடியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து விஜய் பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கு.. அவருக்கு அப்படியொரு பழக்கம் இருக்கு.. விஜய் குறித்து சபாநாயகர் விளக்கம்!!

0

TVK: கரூரில் ஏற்பட்ட துயர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சென்னை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து தமிழக வெற்றிக் கழக தலைவர்  விஜய் ஆறுதல் கூறிய சம்பவம் பல்வேறு  சர்ச்சைகளை எழுப்பிய  நிலையில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அளித்த பதில் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். அவருக்கு அப்படியொரு பழக்கம் இருக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், இதனை அரசியல் நோக்கில் பெரிதாக்க வேண்டாம்.

மனிதநேய கோணத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பது தவறல்ல என்றும் கூறியுள்ளார். அப்பாவுவின் இந்த பதில், விஜய்யின் நடவடிக்கையை நேரடியாக ஆதரிக்காமலும் எதிர்க்காமலும், சமநிலை நிலைப்பாட்டில் அமைந்ததாக கருதப்படுகிறது. இதனால், அவர் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டைச் சீராக பராமரித்ததோடு, தேவையில்லாத கருத்துகளையும்  தவிர்த்துள்ளார் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது, விஜய் அரசியலுக்குள் முழுமையாக நுழைவாரா என்ற எதிர்பார்ப்பு உயர்ந்துள்ள நிலையில், அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் கவனத்தைப் பெற்று வருகிறது. அதனுடன், சபாநாயகர் அப்பாவுவின் மென்மையான பதில், விஜயை சுற்றியுள்ள அரசியல் விவாதங்களுக்கு தற்காலிக அமைதியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு எதிர்கட்சி  தலைவர்களும் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும் என்று கூறி வந்தனர். அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், விஜய் எங்களை இங்கு வந்து தான் சந்திக்க வேண்டுமென்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

திமுகவிற்கு ஆப்பு வைத்த ஊழல் வழக்கு.. சான்ஸை பயன்படுத்த போகும் விஜய்!!

0

TVK DMK: தமிழகத்தில் புதிதாக உதயமாகியுள்ள கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் இக்கட்சி உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது. திமுக தான் தனது அரசியல் எதிரி என்று கூறிய விஜய், திமுகவை வீழ்த்துவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.  இந்நிலையில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட ஊழல் காரணமாக விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

திமுக 2021யில் ஆட்சியை பிடித்ததிலிருந்து, திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு முறைகேடு வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி  தருவதாக கூறி, பல பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது  வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் நிறுவனம் தமிழக அரசிடம் உள்ள நிலையில், போலி கொள்முதல் மூலம் கணக்கில் வராத 1,000 கோடிக்கு மேல் பணத்தை ஈட்டியதாக புகார் எழுந்தது. ரயில்வே மற்றும் டெண்டர் ஒப்பந்தங்களில் 40,000 கோடி வரை மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து 2025இல் திமுக ஆட்சியில் குடிநீர் திட்டம் இடைநிறுத்தம் செய்யபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின . மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்தது அரசு நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது. கடந்த ஆட்சியில் ஏற்பட்ட சில அதிருப்திகள், மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை திமுகவின் பலத்தை குறைத்திருப்பதாக சர்வே தெரிவிக்கிறது. இதனால், திமுகவால் தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வர முடிவது கடினம் எனவும், இதனால் மாற்றத்தை விரும்பும் மக்கள் விஜய் பக்கம் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று சர்வே முடிவுகள் கூறுகின்றன. 

செந்தில் பாலாஜியால் திமுக தலைமைக்கு ஆபத்து.. ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த உடன் பிறப்புக்கள்!!

0

DMK: செந்தில் பாலாஜி அவருடைய அரசியல் பயணத்தை திமுகவிலிருந்து தொடங்கினார். பின்னர், அதிமுகவில் இணைந்த இவருக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டது. ஜெயலலிதா இறந்த சமயத்தில், அதிமுக ஆட்சியில் குழப்ப நிலை நிலவிய போது, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட இவர், முதல்வரை மாற்றுமாறு ஆளுநரிடம் மனு அளித்ததற்காக, சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற  உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பின்னர் 2018 அன்று திமுகவில் இணைந்தார்.

கரூரின் முகமாக அறியப்படுபவர் செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜி எந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும் அங்கு அவருடைய செல்வாக்கையும், தனித்தன்மையையும் நிலை நாட்டி விடுவார். ஆனால் கட்சி மாறி கொண்டே இருக்கும் இவர், எந்த கட்சியிலும் நிலைத்திருந்ததில்லை. இதுவே இவருக்கு பெரிய பாதகமாக அமைந்தது மட்டுமல்லாமல் இதனை வைத்து எதிர்க்கட்சிகள் இவரை விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக மண்டல வாரியாக  திமுகவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வரும் வேளையில், மேற்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜி மேற்கு மண்டலத்தில் திமுகவை வளர்ப்பதை விட, அந்த பகுதியில் தன்னை முன்னிறுத்தி கொள்ளவே முயற்சித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து திமுக தலைமையை எதிர்க்க கூட அவர் தயங்க மாட்டார் என்று உடன் பிறப்பிறப்புகள் திமுக தலைமையிடம் அறிவுறுத்தி வருவதாக தகவல் வந்துள்ளது.