Home Blog Page 70

மீண்டும் தலைதூக்கும் தவெக.. விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0

TVK: கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்துக்குப் பின் விஜய் மூன்று நாட்கள் மவுனம் காத்து, பின்னர் வெளியிட்ட வீடியோவில் மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்தார். இதனிடையே இந்த வழக்கு சிபிஐக்கு சென்றபோது நீதி வெல்லும் என்று பதிவிட்டிருந்தார். சம்பவம் நடந்து  சரியாக ஒரு மாதம் கழித்து, நேற்று முன் தினம், விஜய் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆனால் அவர்களை நேரில் சென்று சந்திக்காமல் வரவழைத்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் இதை விமர்சித்தனர். அதே நேரத்தில் திமுக அரசை கடுமையாக கண்டித்த விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களுக்கெதிரான திமுக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு முளைத்து வளர்ந்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.

கரூர் விபத்து காரணமாக தவெக கட்சியின் செயல்பாடுகள் தளர்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயிர்ப்புடன் செயல்பட தொடங்கியுள்ளது. இதற்காக 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை விஜய் நியமித்துள்ளார். என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றுள்ளனர். கட்சியின் ஒற்றுமைக்காக அனைவரும் இணைந்து செயல்படுமாறு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். தவெகவின் இந்த புதிய எழுச்சி எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. 

தலை நிமிர்த்து நிற்கும் நம் ஆட்சியா? டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா.. ஸ்டாலின் மறைமுக விமர்சனம்!!

0

ADMK DMK: தமிழகத்தில் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது திராவிட கட்சிகளாக அறியப்படும் அதிமுகவும், திமுகவும் தான். தற்போது மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது தவெக. இதற்கு பிறகு சீமானின் நாம் தமிழர் கட்சி. இந்த 4 கட்சிகளுக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி நிலவும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவும், திமுகவும் மக்களை சந்திக்கும் பணிகளிலும், கூட்டணி வியூகங்களையும் வகுத்து வருகின்றன.

இன்று மாமல்லபுரத்தில் திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனியாது என்ற என்ற பிரச்சாரம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பேசிய முதல்வர், 6 முறை ஆட்சி அமைத்த திமுக, இந்த சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று 7 வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டுமென்று கூறினார். திமுக அரசின் திட்டங்களும், சாதனைகளும், மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் சேர்ந்திருக்கிறது.

நமது தொடர் வெற்றிகளை பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சத்தில் உள்ளன என்று கூறிய அவர், தலை நிமிர்ந்து நிற்கும் நம் ஆட்சியா? டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா என்பதை தேர்தல் தீர்மானிக்கும் என்று அதிமுகவையும், பாஜகவையும் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார். இப்போதெல்லாம் திமுக தலைமை  விஜய், அதிமுக, பாஜக போன்ற கட்சிகளை நேரடியாக விமர்சிக்காததை பார்க்க முடிகிறது. இதற்கு முன் விஜய்யை புதிய எதிரிகள்  என்று மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலினை பலரும் கிண்டலடித்து வந்தனர். இந்நிலையில் அதிமுக பற்றிய ஸ்டாலினின் மறைமுக கருத்து மேலும் விமர்சனத்திற்கு  உள்ளாகியுள்ளது. 

ராமதாஸுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் அன்புமணி.. கூட்டணி அமைக்க விட மாட்டான் போலயே.. புலம்பும் ராமதாஸ்!!

0

PMK DMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சச்சரவு நிலவி வருகிறது. ராமதாஸ் தனது மூத்த மகளின் மகனான முகுந்தனை இளைஞரணியின் தலைவராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி இன்று வரை அதனை ஏற்காமல் பிடிவாதமாக இருந்து வருகிறார். அப்போது ஆரம்பித்த சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது புதிய திருப்பமாக பாமகவின் செயல் தலைவர் பதவியை தனது மூத்த மகள் காந்திமதிக்கு வழங்கியுள்ளார் ராமதாஸ்.

இதனால் அன்புமணி மேலும் கோபமடைந்துள்ளதாக அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதெல்லாம் ஒரு புறம் இருக்க 2026 சட்டமன்ற தேர்தலுக்குக்காக, அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைய போவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து வரும் நிலையில், ராமதாஸின் நிலைப்பாடு என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் திமுக உடன் கூட்டணி அமைப்பிர்களா என்று நிருபர்கள் கேட்ட போது, அது குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென்று சூசகமாக பதில் கூறினார் ராமதாஸ்.

ராமதாஸ்-திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதனை கலைக்கும் விதமாக அன்புமணி பல்வேறு வியங்ககளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 30 மணல் குவாரிகளை திறப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளதை கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் ஏற்கனவே நடந்த கிட்னி திருட்டு, மணல் திருட்டு போன்றவற்றையும் பட்டியலிட்டு காட்டினார். இவரின் இந்த செயல் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைவதை தடுப்பதற்கான முயற்சியாகவே இருக்கிறது என்று ராமதாஸின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். 

தோல்வியில் முடிந்த விஜய்-காங்கிரஸ் கூட்டணி.. இனிமே அத பத்தி பேசாதிங்க.. டென்ஷன் ஆன காங்கிரஸ் காரர்கள்!!

0

TVK CONGRESS: விஜய்க்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் நல்ல நட்புறவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. கரூர் சம்பவத்தில் கூட ராகுல் காந்தி விஜய்யிடம் போனில் பேசி ஆறுதல் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வருவதால், பாஜகவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்று அனைத்து ஊடகங்களும் கூறி வந்தன. ஆனால் விஜய் கூட்டணி குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

திமுக தனது அரசியல் எதிரி என்பதில் தீர்க்கமாக இருக்கும் விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகும் அவருடைய பணியை தொடரும் நோக்கில் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். கூட்டணி வியூகங்களையும் திரைமறைவில் வகுத்து வரும் விஜய் காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளார். இந்நிலையில் புதுச்சேரி பயணத்தை முடித்த, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர், திடீரென்று நேற்று முன் தினம் சத்தியமூர்த்தி பவனில் செயற்குழு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலு, தமிழக காங்கிரஸ் பூத் கமிட்டி அமைப்பு இன்னும் நிரப்பப்படவில்லை, அதில் கவனம் செலுத்த வேண்டுமென கூறினார். விஜய்-காங்கிரஸ் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம், டெல்லி மேலிடம் சரியான முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். விஜய் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பாத காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு காங்கிரஸ்-விஜய் கூட்டணி தோல்வியில் முடிந்ததையே உணர்த்துகிறது என்று பலரும் கூறி வருகின்றனர். 

கூட்டணிக்கு வரலனா கேஸா.. விஜய்யை பயமுறுத்தும் பாஜக.. மண்டியிடும் விஜய்!!

0

TVK BJP: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததுடன், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதல் கூறினார்.

கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன்  உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், தலைமறைவாக இருந்த மதியழகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த  வழக்கு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சிபிஐ வசம் ஒப்படைக்கபட்டுள்ளது. இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இதற்கு காரணமான விஜய் மீது ஏன் இன்னும் வழக்கு பதியப்படவில்லை என்ற கேள்வியை பலரும் முன்வைத்து வரும் சூழலில், இதனை ஆராயும் போது பாஜக-விஜய் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஆனால் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதால் கூட்டணிக்கு மறுப்பு தெரிவிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது கரூர் வழக்கு மத்திய அரசிடம் உள்ளதால், விஜய் கூட்டணி வரவில்லையென்றால் விஜய் மீது வழக்கு பதியப்படும் என்று பாஜக விஜய்யிடம் கூறி வருவதாக பேசப்படுகிறது. இதனால் தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ளவும், எதிர்கால அரசியலில் பிரகாசிக்கவும் விஜய் பாஜக கூட்டணியில் சேர வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

மீண்டும் ஒர்க் ப்ரம் ஹோம் தலைவராக மாறிய விஜய்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

0

TVK DMK: கட்சி தொடங்கி பல மாதங்களாக சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்துக்களை கூறி வந்த விஜய் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார். ஒர்க் ப்ரம் ஹோம் தலைவர் என்று அனைவரும் கூறி வந்த நிலையில் தன்னுடைய பிரச்சாரத்தையும் தொடங்கினார். இந்த பிரச்சாரம் சனி மற்றும் யிற்று கிழமைகளில் மட்டும் தான் நடக்கும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் கரூரில் நடந்த விபத்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.

ஒரு அரசியல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். இதன் காரணமாக மீண்டும் வீட்டில் அடைபட்டிருந்த விஜய் காணொளி மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். சம்பவம் நடந்து 1 மாதத்திற்கு மேலாகிய நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் டெல்டாவில் அரங்கேறிய நெல் பயிர்களின் சேதம் குறித்து தவெக சார்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் சேதமான போதே மீதமிருக்கும் நெல்மணிகளை பாதுகாக்க தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இது நடப்பாண்டு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் இது தான் நிலைமை. நானும் டெல்டா காரன் தான் என்று பெருமை பேசும் ஸ்டாலினிடம் சில கேள்விகளை முன் வைக்கிறேன் என்று குறிப்பிட்ட விஜய் 5 கேள்விகளையும் முன் வைத்தார்.

41 உயிர்கள் பலியானதற்கு 1 மாதம் கழித்து ஆறுதல் கூறும் விஜய் நெல் மணிகள் மீது கவலைப்படுவது சிரிப்பை வர வைக்கிறது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் இந்த பதிவு அவர்  மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி ஒர்க் பிரேம் ஹோம் தலைவராகவே மாறி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. 

முதல்வர் வேட்பாளராக விஜய்யும் இல்லை இபிஎஸ்யும் இல்லை.. பாஜக எடுத்த அசத்தலான முடிவு!!

0

ADMK BJP TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த போதே கூட்டணி அமைக்கப்படும், ஆனால் அந்த கூட்டணி எங்களின் தலைமையில் தான் இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் தன்னை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துக் கொண்டார். இந்த சமயத்தில் ஏற்பட்ட நிகழ்வு தான் கரூர் சம்பவம். இது நிகழ்ந்து 1 மாதம் ஆன நிலையில், விஜய் இன்னும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

ஆனாலும் விஜய்யின் குரலாக ஒளித்து வருகிறது அதிமுக-பாஜக. அதிமுக பிரச்சாரத்தில் தவெக கொடி பறந்ததை பார்த்த இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறி அதிமுக-விஜய் கூட்டணியை உறுதிப்படுத்தி இருந்தார். விஜய் முதல்வர் வேட்பாளராக விருப்பப்படும் சமயத்தில், இதனை ஏற்காத இபிஎஸ் துணை முதல்வர் பதவியை வழங்குவதாக கூறியிருக்கிறார். யார் முதல்வர் வேட்பாளர் என்று இன்னும் முடிவாகாத நிலையில், கூட்டணி இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதனால் அதிமுக கூட்டணியிலிருக்கும் பாஜக ஒரு திட்டத்தை தீட்டி இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. அதிமுக மற்றும் தவெக இரண்டு கட்சிகளின் ஆதரவும் இருந்தால் தான் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியும். இதனால் பாஜக தலைமை இபிஎஸ், விஜய் இருவருக்குமே முதல்வர் பதவியை வழங்காமல், தமிழகத்தில் நல்ல அரசியல் அனுபவம் உள்ள, மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ள ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெயக்குமார்.. மாற்றம் காணும் தேர்தல் களம்!!

0

ADMK BJP: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக-பாஜக கூட்டணி உருவனதிலிருந்தே அதிமுகவின் அனைத்து கூட்டங்களிலிருந்தும் விலகியே இருந்தார். மேலும் 2020 சட்டமன்ற தேர்தலில் ஜெயக்குமார் தோல்வியடைந்ததற்கு பாஜக உடனான கூட்டணி தான் காரணம் என்று கூறியிருந்தார். இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் இவர் வேறு கட்சியுடன் கூட்டணி அமைப்பார், இல்லையென்றால் தனித்து செயல்படுவார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஒன்றிய அரசின் சிறப்பு  தீவிர வாக்காளர் பட்டியல் பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்திலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதற்கு வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியல் 100 % சரியாக இருக்கிறதா என்று கேட்டால், இல்லையென்றே சொல்ல வேண்டும்.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதால், தீவிர வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது அவசியம் என்று கூறியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம் என்று கூறினார். இதற்கு முன் பாஜகவை கடுமையாக வஞ்சித்து ஜெயக்குமார் தற்போது ஒன்றிய அரசான பாஜக மேற்கொள்ளும் திட்டத்தை வரவேற்பது அவர், பாஜகவுடன் இணக்கமாக சென்று விட்டார் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. 

தனித்து விடப்பட்ட சசிகலா.. அரசியலிலிருந்து விலகுவது தான் ஒரே வழி!!

0

ADMK: எம்.ஜி.ஆர் இறந்த நேரத்தில் ஜெயலலிதா-ஜானகி என இரு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு துணையாக நின்றவர் சசிகலா. அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு தற்காலிக பொதுச் செயலாளராக பதிவியேற்றார். சிறுது காலம் அந்த பதவியிலிருந்த இவர் 2017 செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் ஜெயலலிதாவுடன் இணைந்து அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் அடைக்கபட்டார். அப்போது பொதுச் செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் என அனைவரையும் கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார். இவர்கள் மூவரும் மூன்று திசையில் பயணம் செய்து வந்தனர். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி கணக்குகள் தொடங்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் திமுக கூட்டணியில் இணைய போவதாக பேசப்பட்டு வருகிறது.

அண்மை காலமாக டிடிவி தினகரன் திமுகவிற்கு சாதகமாக பேசி வருவதை பார்க்க முடிகிறது. ஓபிஎஸ்யும் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் சசிகலா திமுகவிற்கு எதிராக பேசி வருவதால் அவர் தனித்து விடப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. சசிகலா தற்போது அதிமுக கூட்டணியிலும் இல்லை, திமுக கூட்டணிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலை தொடர்ந்தால் அவர் அரசியலிலிருந்து அடியோடு அகற்றப்படுவார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

திமுக தலைமையில் தான் உறுதியான கூட்டணி உள்ளது.. திருமாவளவன் கருத்து!!

0

VSK: அரியலூரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் மற்றும் எம்.பி. திருமாவளவன், நடிகர் விஜய்யின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்தார்.  கரூர் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து நேரில் சந்தித்து பேசியது, நடிகர் விஜய்யின் தனிப்பட்ட முடிவு. பொதுவாக அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறுவது வழக்கம்.

ஆனால், விஜய் அனைவரையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து பேசுவது ஒரு புதிய அரசியல் அணுகுமுறை என்று அவர் குறிப்பிட்டார். இது குறித்து மேலும் கருத்து கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த அறிவிப்பை எதிர்த்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தீர்மானம் எடுக்கிறார் என்பதையும் அவர் பாராட்டினார். இதற்கு அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.

பீகாரில் நடந்த வாக்கு திருட்டு போல, தமிழ்நாட்டில் அத்தகைய சூழ்நிலை உருவாக கூடாது என்று எச்சரித்தார். திமுக கூட்டணியின் நிலைப்பாடு குறித்து பேசும்போது, தற்போது ஒரே உறுதியான கூட்டணி திமுக தலைமையில் தான் இருப்பதாகவும், மற்ற எதிர்க்கட்சிகள் சிதறி கிடக்கின்றன என்பதும் உண்மை எனவும் கூறினார். ஓ. பன்னீர்செல்வம் கூறிய 2026 தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்ற கருத்து அதனை உறுதிப்படுத்துகிறது என்றார். ராமதாஸ் தலைமையிலான பாமக மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்தால், விசிக தொடருமா என்ற கேள்விக்கு பார்க்கலாம் எனத் திருமாவளவன் பதிலளித்தார்.