வியாழக்கிழமை, செப்டம்பர் 18, 2025
Home Blog Page 7

2026 தேர்தலுக்கான சுற்றுப்பயணம் – கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் தி.மு.க!!

0

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக கட்சிகள் அனைத்தும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அதேபோல் தி.மு.க-வின் தேர்தல் நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணத்தைத் மேற்கொள்ள உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு மக்களுக்காக நிறைவேற்றிய திட்டங்களை வலியுறுத்தியும், அதே சமயம் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்ககாவும் இந்தப் பயணம் அமைகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளையும் 8 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக உள்ள கட்சி நிர்வாகிகள், அடிப்படை கிளை உறுப்பினர்கள், சமூக அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் மகளிரணி ஆகியோருடன் நேரடி தொடர்பு கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் கூறியதாவது, “2026-தேர்தலில் தி.மு.க-வை மீண்டும் வெற்றி பெறச் செய்ய, ஒவ்வொரு தி.மு.க உறுப்பினரும் பங்கு கொள்ள வேண்டும்.

மக்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் முன்னேறுவோம்”.உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் தி.மு.க-வின் சாதனைகளை கொண்டு சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்”என தெரிவித்துள்ளார். உதயநிதியின் இந்த சுற்றுப் பயணம் தி.மு.க-வின் அடித்தளத்தை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தி.மு.க-வின் மிகப்பெரிய அரசியல் ஆயுதமாகவும் இது திகழும், என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

டி.டி.வி தினகரனின் திட்டம் தான் என்ன ? அ.தி.மு.க ஒருங்கிணைப்பில் ஆர்வம் காட்டாத டி.டி.வி தினகரன்!

0

சமீபத்தில் NDA-கூட்டணியில் இருந்து விலகிய, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், அவர் விலகியதற்கு காரணம், நயினார் நாகேந்திரன் தான் என்று குற்றம் சாட்டியிருந்தார். ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து, டி.டி.வி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறியது பா.ஜ.க-விற்கு பேரிடியாக இருந்தது. இதற்க்கிடையில் டி.டி.வி தினகரன் எடப்பாடி பழனிசாமியை NDA-கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்ற வாதத்தையும் முன் வைத்துள்ளார்.

அவரை தவிர யார் வேட்பாளராக இருந்தாலும் கூட்டணியில் இணைவோம் என்று நிபந்தனை விதித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. ஈ.பி.ஸ், ஓ.பி.ஸ், டி.டி.வி தினகரன் ஆகியோரின் ஆதரவு NDA-வுக்கு தேவைப்படுவதால் அவர்களை ஒருங்கிணைக்க பா.ஜ.க தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியில் இருந்து வெளியேற்றியதற்காக அவரை பழிவாங்கும் நோக்குடன் டி.டி.வி தினகரன் செயல்பட்டுவருவதாகவும், டி.டி.வி தினகரனுக்கு அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.

அவர் எடப்பாடி பழனிசாமி மீது தான் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், உண்மையிலேயே அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டுமென்று அவர் நினைத்தால், அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்திருப்பார். அவ்வாறு அ.தி.மு.க ஒன்றிணைந்தால் டி.டி.வி தினகரன் அவருடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து, அ.தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது.

மற்றொரு புறம் டி.டி.வி தினகரனுக்கு NDA-வின் முதல்வர் வேட்பாளராக விருப்பம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் அவரின் நோக்கம் ஒன்றிணைவது அல்ல. எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவதே ஆகும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மக்களை சந்திக்க களமிறங்கும் த.வெ.க தலைவர் விஜய்.. தமிழகம் முழுவதும் முக்கிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம்!!

0

TVK: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கலே உள்ள நிலையில் த.வெ.க தலைவர் விஜய் செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கு மூன்று முறை அனுமதி கோரியும் காவல்துறையினர் தர மறுத்ததால் விஜய் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியானது.

நீண்ட நாட்களாகவே த.வெ.க தலைவர் விஜய் மக்களை நேரில் சந்திக்காமல் சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே அவருடைய கருத்தையும், அறிவிப்பையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். இதனால் அவரை பலரும் கிண்டலடித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அண்மையில் இரண்டு மாபெரும் மாநாடுகளை அவர் நடத்தினார்.

இந்த பிரச்சாரத்தில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை சனிக்கிழமைகளில் மட்டுமே நடத்துவதாக திட்டமிட்டு இருக்கிறார். இவரின் இந்த சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் ஏன் என்ற கேள்வி அரசியல் களத்திலும், த.வெ.க தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

இதனை பலரும் விமர்சித்து வரும் நிலையில் பா.ஜ.க-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அரசு வேலை என்பது மக்களுக்காக உழைப்பது ஆகும். அது 24 மணி நேரமும் செய்யக்கூடியது. சனிக்கிழமை மட்டும் தான் பிரச்சாரத்திற்கு வருவேன் மக்களை சந்திப்பேன் என்பது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நல்லதல்ல, தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் தான் போட்டி என்றால் அந்த வேகத்தை களத்தில் காட்ட வேண்டும் என்று தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

சிலர் இதனை, பிரச்சாரத்தை முடித்துவிட்டு மீதி இருக்கும் ஆறு நாட்கள் த.வெ.க தலைவர் விஜய்யை விமர்சிக்க அவர் அளித்திருக்கும் விடுமுறை என்றும் கேலி செய்து வருகின்றனர்.

NDA-கூட்டணியில் மீண்டும் சேர போகும் டி.டி.வி தினகரன்.. வாய்ப்பு கொடுக்குமா பாஜக!!

0

அண்மையில் ஓ பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவதாக “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்” பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்திருந்தார். இதற்கு காரணம் பா.ஜ.க-வின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாகவும், கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி எடுப்பதுதான் முடிவு என்றும், நயினார் நாகேந்திரன் அகங்காரத்துடனும், ஆணவத்துடனும் பேசுகிறார் என்றும் டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டியிருந்தார். டிசம்பரில் கூட்டணி குறித்த அறிவிப்பை டி.டி.வி தினகரன் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக சிலர் கூறி வந்த நிலையில், தற்போது புதிய செய்தியை கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

இதில் NDA-கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, “ஈ.பி.ஸ்-யை தவிர யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் சேர்வோம்” என்று நிபந்தனை விதித்திருக்கிறார். தமிழ்நாட்டை சீர்குலைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருவதாகவும், எந்த துரோகத்தை எதிர்த்து அ.ம.மு.க தோன்றியதோ அந்த துரோகத்தை மீண்டும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரசியலில் நிலவும் கருத்து என்னவென்றால் டி.டி.வி தினகரனுக்கு NDA-கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஆகுவதற்கு ஆசை வந்துவிட்டதாகவும், அவரின் கவனம் கட்சியின் மீது அல்ல எடப்பாடி பழனிசாமி மீது தான் இருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

வலுவிழக்கும் அதிமுக.. கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் தலைவர்கள்!!

0

ADMK: தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்பது பா.ஜக-விற்க்கு நீண்ட காலமாக இருந்து வரும் பெரிய ஆசையாக உள்ளது. தி.மு.க-வை வீழ்த்த வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளையும் பா.ஜ.க செய்து வருகிறது. ஆனால் அந்த செயல்பாடுகள் அனைத்தும் தவிடுபொடியாகி வருகின்றன. ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டி.டி.வி தினகரனும் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதற்கு காரணமாக அவர் கூறிவதாவது, நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுத்ததே கூட்டணியை விட்டு வெளியேற காரணம் என்றும், நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்மென்றே நயினார் நாகேந்திரன் திட்டமிட்டு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். கூட்டணியின் முடிவுகளை எடப்பாடி பழனிசாமி தான் எடுப்பார் என்று கூறும் இடத்தில் நாங்கள் எவ்வாறு இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை எங்கள் பின்னால் இல்லை, வெளியேறவேண்டுமென்பது எங்களின் முடிவு என்றும் கூறினார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க- வில் உட்கட்சி பிரச்சினைகள் எழுந்து வருவதால், அ.தி.மு.க-விலிருந்த சிலர் பா.ஜ.க-விற்கு செல்ல போவதாகவும், முக்கிய தலைவர்கள் அங்கு சென்றால் அவர்களின் முகமாக அறியப்பட்டு வரும் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும்.

இது நிகழ்ந்தால் அ.தி.மு.க- எதிர்கட்சியாக கூட உருவாக முடியாத நிலை ஏற்படுமென்றும் சொல்லப்படுகிறது. இது நடைபெறவிடாமல் தடுக்க தான் அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்று பா.ஜ.க சொல்கிறது என்ற வாதமும் வந்த வண்ணம் உள்ளன. அதுவே பா.ஜ.க அ.தி.மு.க- வுடன் முக்கிய தலைவர்களை ஒருங்கிணைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தால், தமிழகத்தில் காலூன்ற வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு அ.தி.மு.க கூட்டணி மட்டுமே போதாது. செங்கோட்டையன், சசிகலா உடன் ஓ.பி.ஸ், டி.டி.வி தினகரன், மீண்டும் இணைந்தால் தான் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியில் வெற்றி பெற முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.

பாஜக-வில் ஒருங்கிணையும் முக்கிய தலைவர்கள்!! ஈ.பி.ஸ்-க்கு  காத்திருக்கும் அதிர்ச்சி!!

0

ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் காலகட்டத்தில், அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும், கூட்டணி அமைப்பதற்கும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக அ.தி.மு.க விலிருந்த சில முக்கிய தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது, டி.டி.வி தினகரன் டிசம்பர்-யில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிட போவது, சசிகலாவின் ஈ.பிஸ்-க்கு எதிரான வாதம்,  போன்றவை இவர்கள் மூவரும் பா.ஜ.க-கூட்டணியில் சேரப்போவதை தெளிவாக காட்டுகிறது என்று சொல்லப்படுகிறது.

மேலும் பா.ஜ.க வின் மூத்த தலைவர்களும், அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வருவதால், சசிகலா,டி.டி.வி தினகரன். ஓ.பன்னிர்செல்வம், செங்கோட்டையன் பா.ஜ.க வில் சேர்க்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். இவர்கள் பா.ஜ.க வில் இணைந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு குறைய வாய்ப்புள்ளது. நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க  எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணியில் இருந்தாலும், 2029  ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தான் குறிக்கோள் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்  எடப்பாடி பழனிச்சாமியை தனித்து இருப்பதால் அவரை  ஒதுக்கிவிட்டு அ.தி.மு.க மூத்த தலைவர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. தமிழக அரசியலில் தி.மு.க விற்கு போட்டியாக வலுவான எதிர்கட்சியாக இல்லாதது, அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பதவியிலிருந்து நீக்கியது, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க ஒத்துழைக்காமல் இருப்பது போன்றவை கட்சியின் நிலையற்ற தன்மையை காட்டுகிறது.

2026 விஜய்யுடன் களம் காணும் EPS எதிராளிகள்.. அனல் பறக்கப்போகும் தேர்தல் களம்!!

0

TVK AMMK: அதிமுகவிலிருந்து வெளியேறிய பிளவுபட்ட நிர்வாகிகள் அனைவரும் தற்சமயம் இணைந்துள்ளனர். அந்த வரிசையில் செங்கோட்டையன் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் சேர்ந்து புதிய அணி உருவாகியது. ஆனால் எடப்பாடி கட்சியிலிருந்து நீக்கியவர்களை ஒருபோதும் இணைக்க முன்வரவில்லை. அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் கட்சியை விட்டு நீக்கி தான் வருகிறார். அந்த வகையில் ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என செங்கோட்டையன் கூறி பத்து நாள் கெடு விதித்ததை அடுத்து மறுநாளே அவரையும் கட்சியிலிருந்து நீக்கினார்.

இதனால் உக்கட்சி மோதலானது தீவிரமடைந்தது. இதன் தொடர்ச்சியாக செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷாவையும் சந்தித்து வந்துள்ளார். இதனிடையே செய்திடர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், வரும் தேர்தலில் கட்டாயம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான் முத்திரை பதிக்கும், நாங்கள் எந்த கூட்டணியில் உள்ளமோ அதுதான் வெற்றியும் பெறும். எதிர்பாராத கூட்டணி அமையும் என்றெல்லாம் கூறினார்.

இவர் இவ்வாறு கூறுவதற்கு முக்கிய ஆகரணம் விஜய் தான் என்கின்றனர். புதிதாக கட்சி தொங்கினாலும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறியுள்ளார். இதனால் இவருடன் இணைய அதிக வாய்ப்புள்ளது. ஆனால் மூத்த தலைவர்கள் தற்போது உள்ள புதுமுக அரசியல் தலைவர் கீழ் செயல்படுவரார்களா என்பது சந்தேகம் தான். மாறாக இரட்டை தலைமை போல கூட்டணி பேச்சுவார்த்தை அமைந்தால் அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

த.வெ.க பொதுச்செயலளார் புஸ்ஸி ஆனந்த் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.. விஜய் எடுத்த ஆக்ஷன்!!

0

TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 2 மாபெரும் மாநாடுகளை நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அடுத்தக்கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.

இதனை வரும் 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்க திட்டமிட்டிருந்த விஜய்க்கு காவல் துறையினர் அனுமதி தர மறுத்துள்ளனர். முதலில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உரையாற்ற திட்டமிட்டிருந்தனர். இது மறுக்கப்பட்டதால் மரக்கடை பகுதியில் சுற்றுப்பயணம் தொடங்க திட்டமிட்டனர். இதுவும் மறுக்கப்பட்டது.

மூன்றவதாக காந்தி மார்க்கெட் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்க்கொள்ள அனுமதி கேட்டபோது 3-வது முறையும் அனுமதி மறுக்கப்பட்டதால் விஜய் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுப்பயணம் மேற்கொள்ள காவல் துறையின் அனுமதி கோரி, த.வெ.க பொதுச்செயலளார் புஸ்ஸி ஆனந்த் திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அப்போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடுதல் , காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, போன்ற 6 பிரிவுகளின் கீழ் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு த.வெ.க தலைவர் விஜய் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஆட்சியில் இருக்கும் அரசு தோல்வி பயத்தால் தேவையற்ற வழக்குகளை பதிவு செய்து வருகிறது. ஆனால் எங்களின் பயணம் மக்களிடம் நேரடியாக சென்று உண்மையை சொல்வதேயாகும். இதனால் எங்கள் கட்சி எந்த காரணம் கொண்டும் அஞ்சி நிற்காது, எதிர்த்து நிற்கும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒட்டு மொத்த இணையத்தையும் அலற விடும் சத்யன்!! யார் இந்த பின்னணி பாடகர்!!

0

Sathyan: தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர்களாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பலரும் காலப்போக்கில் இருக்கும் இடம் தெரியாமல் கூட போய்விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் இரண்டு நாட்களாக இணையத்தையே கலக்கி வருபவர்தான் பின்னனி பாடகர் சத்தியம் மகாலிங்கம். இவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவானான இளையராஜாவிற்கு கூட பாடல் பாடி கொடுத்துள்ளார். இவரின் பின்னணி பாடகருக்கான திரை பயணமானது 2004 ஆம் ஆண்டு கமலின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் “கலக்கப்போவது யாரு” என்ற பாடலிலிருந்து ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து விஜய், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் என பலரிடம் பின்னணி பாடகராக வேலை பார்த்துள்ளார். ஆனால் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு திரையுலகில் பெரும்பாலான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையை கையாள்வதற்காக ஹோட்டலில் பணிபுரிய நேர்ந்தது. அச்சமயமும் தன்னால் முடிந்த உதவியை இசைக்கலைஞர்களுக்கு அளித்தும் வந்துள்ளார்.

அந்தவகையில் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு இணையத்தில் வைரலாகியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் உன்னிகிருஷ்ணன் பாடிய ரோஜா ரோஜா என்ற பாடலை கச்சேரி ஒன்றில் இவர் பாடியுள்ளார். அந்த பாடல் தற்போது இணையமெங்கும் பகிரப்பட்டு வருவதோடு யார் இந்த பாடகர் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி பார்க்கும் போது தான் இவர், பல ஹிட் பாடல்களை கொடுத்தது தெரியவந்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் ஈ.பி.எஸ் வெற்றி பெறுவது கடினம் ; “எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க பலவீனமடைந்துள்ளது ” – கருணாஸ் விமர்சனம்!!

0

ADMK: முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 2000 கொடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம். எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்று வரை கட்சிக்காக உழைத்த “செங்கோட்டையன் மேலேயே கை வெச்சிட்டியேன்னு கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்” என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டப்படும் என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.

முன்னாள் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில் கட்சியின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இன்று குறைந்துவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தனிநபர் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மனதில் கட்சியின் பலம் குறைந்துள்ளது எனவும் இதனால் மக்கள் மத்தியில் அ.தி.மு.க நம்பிக்கையை இழந்து வருகிறது எனவும் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அ.தி.மு.க எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய இடத்தில் குழப்பத்தில் சிக்கியுள்ளது. உட்கட்சி பிரச்சினை தலைமைப்போட்டி, தெளிவற்ற கொள்கை போன்றவற்றால் கட்சியின் வலிமை குறைந்து வருகிறது. எதிர்க்கட்சியாக அ.தி.மு.க தோல்வி அடைந்துள்ளது எனவும் அ.தி.மு.க 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி செல்லும் வழி மிகவும் மோசமானதாக உள்ளது எனவும் கடுமையாக சாடி உள்ளார்.

மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாவிட்டால் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும். இந்த பின்னடைவு ஏற்படாமல் தடுக்கவும், தேர்தலில் தன்னை மீட்டெடுக்கவும் அ.தி.மு.க தெளிவான திட்டங்களையும், ஒற்றுமையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தன்னுடைய கருத்தை கூறினார். அ.தி.மு.க பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி மீது கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் கருணாஸ்-யின் பேச்சு அனைவரது மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்டமாக அ.தி.மு.க தன்னுடைய நிலையை சீரமைக்குமா அல்லது பிரச்சனைகள் தொடருமா? என்பது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் எழும் முக்கிய கேள்வியாக உள்ளது.