Home Blog Page 6

பேச்சுவார்த்தை நடத்த எனக்கு மட்டுமே உரிமை.. கடுப்பான பாமக நிறுவனர்..எடுத்த அதிரடி முடிவு..

0

PMK: 2026 க்கான சட்டமன்ற தேர்தல் மார்ச் மாதம் நடக்க இருக்கும் நிலையில் , இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும், கட்சி தொண்டர்களும் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் முதன்மை கட்சிகளாக அறியப்படும் அதிமுக, திமுக, போன்ற கட்சிகளில் உட்கட்சி விவகாரம் தலைதூக்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்க பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் ஏற்பட்டுள்ள தலைமை மோதலால் கட்சியின் தலைவர் யார் என்றே தெரியாத நிலை உள்ளது. இதனால் தனது மகன் என்று கூட பாராமல் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்க, தேர்தல் ஆணையமோ அன்புமணி தான் பாமகவின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் என்று தீர்ப்பளித்தது.

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றம் செல்ல, அப்போது பேசிய நீதிபதி தேர்தல் நெருங்கும் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற சிக்கல் வரும் என்பதால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுவதாகவும், அன்புமணி தான் தலைவர் என்பதை மறுக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார். இவ்வாறு பாமகவில் மோதல் போக்கு பெரிதாகி கொண்டே செல்லும் நிலையில், அன்புமணி, ராமதாசின் சம்மதம் இல்லாமல் அதிமுக-பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் பெரும் அதிருப்தியடைந்த ராமதாஸ் இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் பாமகவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முழு உரிமையும் எனக்கு மட்டுமே உள்ளது. அன்புமணிக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என கூறியுள்ளார். மேலும், அன்புமணி அதிமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது என்றும், பாமக பெயரை தவறாக பயன்படுத்துவதால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்ததை விரும்பாத ராமதாஸ் கூடிய விரைவில் திமுக அல்லது தவெக உடன் கை கோர்ப்பார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இபிஎஸ்க்கு அடுத்த சிக்கல்.. மீண்டும் வெடித்த ஜெயலலிதா வாரிசு பிரச்சனை.. மாறும் தேர்தல் களம்..

0

ADMK: இன்னும் ஒரு மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான தேர்தல் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், தொகுதி பங்கீடும், கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. அதிமுகவிலிருந்து பலரும் பிரிந்த நிலையில், தற்போது புதிதாக ஜெயலிதாவின் மகள் என கூறி கொண்டிருக்கும் ஜெயலட்சுமி என்பவர், தேர்தலையொட்டி ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக அலுவலகத்திற்க்கு விருப்பமனு அளிக்க வந்தார். அப்போது  அதிமுக நிர்வாகிகள் அவரை அலுவலகத்திற்குள் விடாமல் திருப்பி அனுப்பிய நிகழ்வு அரங்கேறி பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறையாவது வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. ஆனால் உட்கட்சி விவகாரம் காரணமாக அதிமுக இந்த முறையும் தோல்வியை தான் தழுவும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது, டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்காதது, ஓபிஎஸ், இபிஎஸ்யை கடுமையாக சாடி வருவது போன்ற பிரச்சனைகள் தற்போது வரை முடிவுக்கு வாராமல் உள்ளது. இவர்கள் அனைவரும் அதிமுகவின் முக்கிய முகம் என்பதால், இவர்களின் மோதல் போக்கு அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் அதிமுக சார்பில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள நிலையில், இவர்களுக்கான நேர்காணல் மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது ஜெயலலிதாவின் மகள் என கூறி வரும் ஜெயலட்சுமியும் விருப்ப மனு அளிக்க வந்த நிகழ்வு அதிமுகவில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. மேலும் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து விட்டு தான் இங்கு வந்திருக்கிறேன் என கூறியது எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். 

பாடாய் படுத்தும் கரூர் வழக்கும் ‘ஜனநாயகன்’ பட விவகாரமும் – மத்திய அரசிடம் சிக்கிய நடிகர் விஜய்

0
தமிழக அரசியலில் புதிய நம்பிக்கையாக சிலர் பாராட்டும் நடிகர் விஜய், அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த பின்பு எதிர்கொள்ளும் சவால்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. கரூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட துயர சம்பவமும், அதனைத் தொடர்ந்து எழுந்த தொண்டர்கள் மரண வழக்கும், அதே சமயம் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளும், விஜயின் அரசியல் பயணம் எளிதானது அல்ல என்பதைக் காட்டும் முக்கிய அடையாளங்களாக மாறியுள்ளன.
கரூர் கட்சி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்ட நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், போக்குவரத்து குழப்பம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக கட்சி தொண்டர்கள் உயிரிழந்த சம்பவம், வெறும் விபத்து என்ற கட்டத்தைக் கடந்து சட்டப் பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் குறித்த விசாரணைகள் தொடங்கியுள்ளன. அரசியல் மேடையில் புதிதாக நிற்கும் ஒரு தலைவருக்கு, இதுபோன்ற சம்பவம் அவரின் நிர்வாக திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான விவகாரங்கள் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளன. படத்தின் தலைப்பு, உள்ளடக்கம், அரசியல் குறியீடுகள் மற்றும் சமூக செய்தி ஆகியவை மத்திய அமைப்புகளின் பார்வையில் விமர்சனத்திற்குரியதாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படம் ஒரு கலைப் படைப்பாக இருந்தாலும், அரசியல் பின்னணி கொண்ட நடிகர் தயாரிக்கும் படம் என்ற காரணத்தால், அதற்கு அரசியல் அர்த்தங்கள் ஏற்றப்படுவது தவிர்க்க முடியாததாகிறது.
ஒருபுறம் கட்சி கூட்ட மரண வழக்கில் சட்ட ரீதியான அழுத்தம், மறுபுறம் திரைப்பட விவகாரத்தில் மத்திய அரசின் கண்காணிப்பு – இந்த இரண்டும் விஜயை இரட்டை சிக்கலில் நிறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. இதன் மூலம், அரசியல் களத்தில் நுழைந்த பின் ஒரு நடிகர் எதிர்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் மற்றும் அதிகார மையங்களின் அழுத்தம் எவ்வளவு கடுமையானது என்பதும் வெளிப்படையாகிறது.
இதுவரை சினிமா மேடையில் மக்கள் ஆதரவை நம்பிய விஜய், அரசியல் மேடையில் அதே ஆதரவை மட்டுமே போதுமானதாகக் கருத முடியாத சூழல் உருவாகியுள்ளது. மத்திய அரசு, மாநில நிர்வாகம், சட்ட அமைப்புகள் என பல அடுக்குகளைக் கடந்து தான் அரசியல் பயணம் நகர வேண்டும் என்ற யதார்த்தம், கரூர் சம்பவமும் ‘ஜனநாயகன்’ விவகாரமும் மூலம் தெளிவாகியுள்ளது.
இறுதியாக, இந்த சம்பவங்கள் விஜயின் அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுமா, அல்லது அவரை மேலும் எச்சரிக்கையுடன், திட்டமிட்ட அரசியலுக்கு தள்ளுமா என்பது வரும் காலத்தில் தான் தெரிய வரும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி – அரசியல் களத்தில் இறங்கியவுடன், புகழ் மட்டும் போதாது; நிர்வாக திறன், சட்ட அறிவு மற்றும் அதிகார மையங்களை சமாளிக்கும் அரசியல் அனுபவம் அவசியம் என்பதையே இந்த நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன.

ஒரே கல்லில் 3 மாங்கா.. அ.தி.மு.க–பாஜக மற்றும் அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வைக்கும் செக்

0
தமிழக அரசியலில் கூட்டணி அரசியல் வெறும் தேர்தல் கணக்காக மட்டுமல்ல, ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தும் அதிகார அரசியலாகவும் மாறியுள்ள நிலையில், பாமக கட்சிக்குள்ளேயே அப்பா மகனுக்கிடையே உருவாகி வரும் இரட்டை நிலைப்பாடு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, அ.தி.மு.க–பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாகஅறிவித்துள்ளது, அதே நேரத்தில் டாக்டர் ராமதாஸ் அணியின் நகர்வுகள் முற்றிலும் வேறு திசையில் செல்வதாகத் தெரிகிறது.
 
அன்புமணி அணியின் அரசியல், அ.தி.மு.க மற்றும் பாஜக உடனான கூட்டணி வழியாக தனக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்தும் அதிகார அரசியலை நோக்கி நகரும் நிலையில், ராமதாஸ் அணி சற்றும் சளைக்காமல் வேறு வகையில் வியூகம் வகுப்பதே தற்போதைய அரசியல் கூட்டணி குழப்பத்தின் மையமாக உள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணிக்குள் செல்லும் முயற்சிகள், நேரடி அறிவிப்புகளாக இல்லாவிட்டாலும், அதற்கான மறைமுக அரசியல் சமிக்ஞைகளாக வெளிப்படுவது, அ.தி.மு.க மற்றும் பாஜக தலைமைக்கு ஒருவித அரசியல் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலை, முதலில் அ.தி.மு.க-க்கு தான் சிக்கலை உருவாக்குகிறது. எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ள அதிமுக வலிமையான கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறது. ஆனால் ஏற்கனவே கூட்டணியில் இருந்த ஒரு முக்கிய கட்சி, உட்கட்சி பிரச்சனையால் பிளவுபட்டு இரு அணிகளாக பிரிந்துள்ளது வாக்குகள் சிதறடிக்கவே செய்யும், மேலும் இது தேர்தல் சமயத்தில் நம்பகத்தன்மை குறைவுக்கு வழிவகுக்கும். அதேபோல், பாஜக-க்கு இது இன்னும் பெரிய தலைவலியாக மாறுகிறது. தமிழகத்தில் கூட்டணி அரசியலை ஒருங்கிணைத்து வைத்திருக்க முயலும் பாஜக, பாமக உள்ளேயே உருவாகும் இந்தப் பிளவால், தனது அரசியல் கணக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறது.
 
மூன்றாவது, இந்த அரசியல் நகர்வு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவது அன்புமணி அணிக்கே. தனக்கான அதிகார அரசியலை நோக்கி பயணிக்கும் அன்புமணி, தந்தை ராமதாஸ் வகுக்கும் அரசியல் வியூகத்தால், கூட்டணியில் தனித்து நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். குறிப்பாக குறைவான சீட், மற்றும் கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவது உள்ளிட்ட விவகாரங்களில் அன்புமணிக்கு இது பின்னடைவாகவே அமையும். ராமதாஸ் தரப்பையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தரப்பில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தாலும், அதே நேரத்தில் தைலாபுர தரப்பு திமுகவுக்கு செல்லும் சாத்தியத்தை திறந்தவையாக வைத்திருப்பது, அன்புமணியின் கூட்டணி பேச்சுவார்த்தை வலிமையையே பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளது.
கட்சியை கைப்பற்றியதாக அன்புமணியும், அவர் மூலமாக பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டதாக பாஜக மற்றும் அதிமுகவும் காய் நகர்த்த இந்த அரசியல் கணக்கில், ராமதாஸ் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீழ்த்தும் முயற்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஒன்று – அ.தி.மு.க-க்கு அழுத்தம், இரண்டு – பாஜக-க்கு அரசியல் எச்சரிக்கை, மூன்று – அன்புமணியின் அதிகார அரசியலுக்கு கட்டுப்பாடு. இதன் மூலம், “பாமக என்றால் ராமதாஸ் தான்” என்ற அரசியல் செய்தியை மீண்டும் மையத்திற்கு கொண்டு வருவதும் இந்த நகர்வின் உள் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
 
அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணியில் ராமதாஸ் தரப்புக்கு அன்புமணி அணியை விட அதிக தொகுதிகளை ஒதுக்கி தருவதாக சமாதானம் செய்யலாம். இல்லையெனில் திமுக கூட்டணியில் இணைந்து வாக்குகளை பிரித்து அதிமுகவின் தோல்விக்கு வழி வகுக்கலாம். கட்சியே போனாலும் சம்பந்தப்பட்டவர்களை கதற விடுவதில் ராமதாஸ் கில்லாடி என்பதை நிரூபிக்கும் வண்ணம் செயல்பட்டு வருகிறார்.

விஜய்யை எச்சரித்த கேப்டன் மகன்.. அனல் பறந்த தேமுதிக மாநாட்டு மேடை!!

0

TVK DMDK: தமிழக சட்டமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில் மும்முனைப் போட்டியை விலகி தற்பொழுது விஜய்யும் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் கடும் போட்டி நிலவும் வாய்ப்பு அதிகம். அந்த வகையில் விஜய்யின் கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட விபரீதத்தை அடுத்து பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. மாற்று கட்சி அரசியல்வாதிகளை தவிர்த்து தற்போது வந்த விஜய்க்கு இவ்வளவு வரவேற்பு இருப்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

இதனால் பெரும்பாலான கட்சிகளிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய தொடங்கியுள்ளனர். அதிலும் அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருந்து வந்த செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது யாரும் எதிர்பாராத ஒன்று. அவரை கௌரவிக்கும் வகையில் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. மேலும், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகம் நேற்று வெளியாக இருந்த நிலையில், அதற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் அதன் ரிலீஸ் தள்ளிப் போகியுள்ளது.

பொங்கல் என்று வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அதன் தீர்ப்பையே ஜனவரி 29 க்கு தள்ளி வைத்துள்ளனர். இந்த சமயம் பார்த்து ஆளும் கட்சி காங்கிரஸ் என பலரும் படத்தின் மூலம் அரசியல் செய்து வருகின்றனர். இது குறித்து நேற்று நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் கூட விஜய்க்கு விஜயகாந்தின் மகன் அட்வைஸ் செய்துள்ளார். அண்ணா ஒருபோதும் காங்கிரஸ் அரசியலை நம்பாதீர்கள், அவர்கள் உங்களுக்கு தூண்டில் போடுகிறார்கள் ஜாக்கிரதை மாட்டிக்கொள்ளாதீர்கள் என கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – இல்லாத பிரச்சனையை உருவாக்கியது திமுகவா? இது இந்து விரோத அரசியலின் வெளிப்பாடா?

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரம், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உருவான மிகக் கடுமையான அரசியல் மற்றும் சமூக மோதல்களில் ஒன்றாக மாறியுள்ளது. தலைமுறை தலைமுறையாக இந்துக்கள் கடைப்பிடித்து வரும் ஒரு புனிதமான ஆன்மிகச் சடங்கு, தற்போது சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடுகளால் சிக்கலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இயல்பாக உருவானதல்ல; மாறாக, திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கிய அரசியல் மோதல் என்றும், பண்டைய இந்து மரபுகளைப் புறக்கணிக்கும் ஒரு முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும் என்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளும் அரசியல் விமர்சகர்களும் கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர்.

“குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்ற தமிழர் நம்பிக்கைக்கு உயிர்ப்பான சாட்சியாக விளங்குவது திருப்பரங்குன்றம் மலை. மதுரையில் அமைந்துள்ள இந்த புனித மலை, தமிழ்ப் பண்பாட்டிலும் ஆன்மிக வரலாறிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகளாக முருகப்பெருமானை வழிபட்டு வரும் பக்தர்கள், கார்த்திகை தீபத் திருவிழாவை இங்கு மிகுந்த பக்திப் பெருக்குடன் கொண்டாடி வந்துள்ளனர். மலை உச்சியில் தீபம் ஏற்றும் இந்த மரபு, வெறும் ஒரு சடங்கு அல்ல; அது தமிழ் இந்து கலாச்சார அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகிறது.

பண்டைய காலங்களில் இங்கு தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அந்த நடைமுறை கைவிடப்பட்டதாகவும் இந்து அமைப்புகள் நம்புகின்றன. எனவே, அந்த பாரம்பரிய நம்பிக்கைக்கு மீண்டும் மரியாதை அளித்து, தீபம் ஏற்றும் வழக்கத்தை தொடர வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நம்பிக்கையை மதித்து பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேரடியாக தீபம் ஏற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெளிவான உத்தரவை வழங்கியது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய அந்த உத்தரவில், தீபத்தூண் சிக்கந்தர் பாதுஷா தர்காவிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருப்பதால், தீபம் ஏற்றுவது தர்காவையோ அல்லது முஸ்லிம் சமூகத்தையோ எந்த விதத்திலும் பாதிக்காது என்று தெளிவாகக் குறிப்பிட்டார். இதன் மூலம், அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் முன்வைத்த ஆட்சேபனைகளையும் நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும், கோயில் நிர்வாகம் மலைப்பகுதியில் உள்ள காலி இடங்களின் மீது தங்களது உரிமையை பாதுகாப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். 1923 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு, எந்த பகுதி யாருக்கு சொந்தம் என்பதைத் தெளிவாக நிர்ணயித்திருந்தாலும், அது கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பதில் இருந்து மசூதி நிர்வாகிகளைத் தடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாப்பதில் நிர்வாகம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தீபம் ஏற்றுவதில் எந்த தவறும் இல்லை என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.

இவ்வளவு தெளிவான சட்ட உத்தரவு இருந்தும், திமுக அரசு அதனை மதிக்காமல் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்றம் அனுமதி அளித்த இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டிருந்தால், இந்த விவகாரம் ஒரு பிரச்சனையாகவே உருவாகியிருக்காது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. ஆனால், அரசின் நடவடிக்கைகள் நீதிமன்ற அவமதிப்பாகவே பார்க்கப்படுகின்றன.

விமர்சகர்களின் பார்வையில், திமுக அரசு இந்துக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து, தன்னை மதச்சார்பற்றதாக காட்டிக்கொள்ளும் முயற்சியில், இல்லாத ஒரு பிரச்சனையை செயற்கையாக உருவாக்கியுள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் வழிபட விரும்பும் அந்த இடத்தின் மீது அரசு திடீரென உரிமை கேள்வி எழுப்புவது, திமுகவின் இந்து விரோதப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இது தேவையற்ற குழப்பங்களையும், முன்பு இல்லாத பதற்றத்தையும் சமூகத்தில் விதைத்துள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை காப்பதற்குப் பதிலாக, இந்துக்கள் மற்ற சமூகங்களின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக ஒரு தோற்றத்தை திமுக அரசு உருவாக்க முயல்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுகிறது. இது அரசியல் ஆதாயத்திற்காக மேற்கொள்ளப்படும் சிறுபான்மை திருப்தி நடவடிக்கையாகவே பலரால் பார்க்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய பின்னரும், மாநில அரசு மேல்முறையீடு செய்தது. நிர்வாக மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை காரணமாகக் காட்டி, அந்த மேல்முறையீட்டை முன்வைத்த அரசின் நடவடிக்கை, விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியது. நீதிமன்ற அனுமதி இருந்தும், அரசின் மேல்முறையீட்டை காரணம் காட்டி, பக்தர்கள் தங்கள் சடங்கை நிறைவேற்ற முடியாதபடி காவல்துறை மற்றும் அதிகாரிகள் தடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை இந்து பக்தர்கள் தங்கள் மத நடைமுறைகளில் நேரடித் தலையீடாகவே கருதினர்.

இந்த விவகாரம், நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக திமுகவுடன் தொடர்புடைய சிலர் பதவிநீக்கத் தீர்மானம் கொண்டு வர முயன்றபோது, இன்னும் தீவிரமான திருப்பத்தை எடுத்தது. இது நீதித்துறையின் சுதந்திரத்தை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவும், நீதிமன்றங்களை அரசியல் அழுத்தத்திற்கு உட்படுத்தும் ஆபத்தான முன்னுதாரணமாகவும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. சட்டபூர்வமான தீர்ப்பை வழங்கியதற்காக ஒரு நீதிபதியை நீக்க முயற்சிப்பது, நீதித்துறையை அரசியலாக்கும் முயற்சியாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.

மொத்தத்தில், இந்த திருப்பரங்குன்றம் தீப விவகாரம், திமுகவின் இந்து விரோதக் கொள்கைகளின் தொடர்ச்சியான வெளிப்பாடாகவே எதிர்க்கட்சிகளாலும் இந்து அமைப்புகளாலும் பார்க்கப்படுகிறது. பிற மதங்களின் திருவிழாக்களுக்கும் நடைமுறைகளுக்கும் அரசு சலுகைகளும் ஆதரவும் வழங்கும் நிலையில், பண்டைய இந்து மரபுச் சடங்குகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாரபட்சமான நிர்வாக செயல்பாடுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அமல்படுத்தல்கள், இந்து கலாச்சார அடையாளத்தைப் பலவீனப்படுத்தும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.

தவெகவில் இணையும் அதிமுக EX MLA.. ஓபிஎஸ்யின் ஆதரவாளருக்கு ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்..

0

ADMK TVK: தமிழக அரசியல் களம் தேர்தலையொட்டி பல்வேறு திருப்பங்களை எதிர்கொண்டு வருகிறது. அதில் முதன்மையானது தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வரும் விஜய்யின் அரசியல் வருகை தான். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே இதற்கான ஆரவாரமும், எதிர்பார்ப்பும் அதிகளவில் உள்ளது. ஆனால் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்று பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்த நிகழ்வு தான் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சேர்க்கை. இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துவிட்டார். மேலும் அதிருப்தி அமைச்சர்கள் பலரும் தவெகவுக்கு வரவுள்ளனர், அதற்கான வேலைகளை நானே செய்வேன் என்றும் சபதம் எடுத்திருந்தார்.

இவ்வாறான நிலையில் தான் ஓபிஎஸ்யின் ஆதரவாளராக இருந்த ஜே.சி.டி. பிரபாகரன், புதுச்சேரி முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பல்பாக்கி கிருஷ்ணன் போன்றோரை தவெகவில் சேர்த்த KAS அடுத்ததாக, ஓபிஎஸ்யின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகி பெரியசாமி போன்ற முக்கிய தலைகளை குறி வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஓபிஎஸ் கூடிய விரைவில் தவெகவில் இணைவார் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில், அதற்கு முன் அவருடன் இருப்பவர்கள் ஒவ்வொருவராக தவெகவில் இணைவது ஓபிஎஸ் இணைப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பியுள்ளது.

விஜய்க்காக பொங்கி எழுந்த காங்கிரஸ் எம்.பி.. ஜனநாயகனுக்கு ஆதரவு குரல்.. திமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவு..

0

TVK DMK CONGRESS: 2026 மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தல் தேதி பிப்ரவரி மாதமே அறிவிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுக என இருந்த தேர்தல் களம் தற்போது நாதக, தவெகவின் வருகையையும் எதிர்கொண்டுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை திராவிட கட்சிகளுக்கு இணையான அளவு ஆதரவு பெற்றுள்ளது. இதனால் இவருடன் கூட்டணி அமைக்க பல கட்சிகளும் முந்தியடித்தன. அதில் முதன்மையான கட்சி பாஜகவும், அதிமுகவும் தான். பாஜக, தவெகவின் கொள்கை எதிரி என்பதால் விஜய் அவர்களுடன் கூட்டணி சேர மறுத்து விட்டார். விஜய் காங்கிரசுடன் மிகவும் நெருக்கம் காட்டி வந்ததால் தவெக-காங்கிரஸ் கூட்டணி அமையுமென்று கூறப்பட்டது. காங்கிரசின் சில செயல்பாடுகளும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேசியிருந்தார். மேலும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டிய நேரம் இது என்று கூறி தவெக கூட்டணிக்கு அடித்தளமிட்டார். 19 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தொடர்ந்து வரும் காங்கிரஸ், விஜய் வருகையால் பிரியும் போக்கை காட்டி வருவது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் ஸ்டாலினுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். 2026 தேர்தலில் போட்டியிடுவதாக தவெக அறிவித்த நிலையில், விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழை மத்திய அரசு வழங்காத விவகாரம் குறித்து பேசிய  ஜோதிமணி, ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தணிக்கை வாரியம் ஜனநாயகன் திரைபடத்திற்கு தணிக்கை சான்றிதல் வழங்காததை கண்டித்த அவர், இது தமிழ் சினிமாவின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

நூற்றுக்கணக்கானனோர் உழைப்பில் உருவான திரைபடத்தை முடக்க நினைப்பது படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார். மேலும், அரசியல் காரணங்களுக்காக படத்தை முடக்குவது ஆபத்தானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து, முழுக்க முழுக்க விஜய்க்கு ஆதரவாகவே பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே ஒரு முறை, விஜய் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் இல்லை என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இவ்வாறு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் விஜய்க்கு தொடர்ந்து தெரிவித்து வருவதால் தவெக தலைமையில் காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஸ்டாலின் பக்கம் யூ-டேர்ன் அடித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ.. கலக்கத்தில் ஓபிஎஸ்..

0

DMK ADMK: தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தமிழக அரசியல் அரங்கு வேகமேடுத்துள்ளது. 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த முறையும் ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமெனவும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறையாவது வெற்றி பெற வேண்டுமெனவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

அந்த வகையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை ஆரம்பித்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு அதனை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்று மாற்றினார். இதனால் இவர் தனி கட்சி துவங்க போவதாக பலரும் கூறி வந்தனர். இவ்வாறான நிலையில் தான், ஓபிஎஸ்யின் ஆதரவளர்களான அன்வர் ராஜா, மைத்ரேயேன், மருது அழகு ராஜ், மனோஜ் பாண்டியன் போன்றோர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது புதிதாக அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ-வும், ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளருமான சுப்புரத்தினம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் ஓபிஎஸ் தெளிவான அரசியல் முடிவை எடுக்காததால் அவரின் ஆதரவாளர்கள் பலரும் மாற்று கட்சியை நாடி வந்தனர். இதனால் அவர்களை தங்கள் கட்சியில் சேர்க்க அதிமுக, திமுக என இரண்டு கட்சியும் போராடி வந்தது. இந்த சமயத்தில் சுப்புரத்தினம் திமுகவில் சேர்ந்து அதற்கு பலத்தை கூட்டியுள்ளது இபிஎஸ்க்கும், ஓபிஎஸ்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஓபிஎஸ் தரப்பு முழுவதும் வேறு கட்சியை தேடி வருவது அவரது பலத்தை குறைத்து வருகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் மதிப்பிடுகின்றனர். 

ராமதாஸ் வெளியிட போகும் அறிவிப்பு.. அன்புமணி ஆட்டம் குளோஸ்.. செலிபிரேஷன் மோடில் திமுக..

0

PMK DMK: அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேகமேடுதுள்ள நிலையில், அதிமுக ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணி அமைத்து விட்டது. அடுத்ததாக எந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கலாம் என்று அதிமுக ஆலோசித்து வந்த சமயத்தில் இரு தினங்களுக்கு முன்பு பாமகவில் அன்புமணி தரப்பு அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறி பகீர் கிளப்பியது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் தரப்பு, தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை தற்போது வரை தீர்ந்த பாடில்லை. இதனால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. மேலும் பாமகவின் கூட்டணி உறுதியாகமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வந்தனர். பாமகவின் அதிகாரம் தம் கையில் தான் உள்ளது என்று இரு தரப்பும் கூறி வர, அன்புமணி அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதை ராமதாஸ் ஆரம்பத்திலேயே எதிர்த்து வந்தார்.

இந்நிலையில் ராமதாஸின் சம்மதம் இல்லாமல் அன்புமணி அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் விரக்தியடைந்த ராமதாஸ் தனிக்கட்சி தொடங்கி, திமுக உடன் கூட்டணி அமைக்க போவதாக தகவல் கசிந்துள்ளது. பெரும்பாலான வன்னியர் சமுதாய வாக்குகளை ராமதாஸ் தன் கையில் வைத்திருப்பதால் ராமதாசின் சேர்க்கை திமுகவிற்கு பலமாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.