Home Blog Page 71

ராமதாஸ் வருகையால் இரண்டாகும் திமுக.. கூட்டணி கட்சி எடுத்த முக்கிய முடிவு!!

0

PMK DMK VSK: சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், திமுகவும் கூட்டணி வியூகங்களை வகுத்து வருகிறது. அதிலும் பாமக,தேமுதிகவின் கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸிடம் திமுக உடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று கேட்ட போது, திமுக உடன் கூட்டணியா இல்லையா என்பது அடுத்த வருட தொடக்கத்திலோ, இந்த வருட இறுதியிலோ அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இவரின் இந்த பதில் திமுக-பாமக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தீவிரமாக நடைபெற்று வருவதை உணர்த்துகிறது. பாமக திமுக கூட்டணியில் இணைந்தால், விசிக கூட்டணியில் தொடருமா என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் பாமகவும், பாஜகவும் இருக்கும் கூட்டணியில் விசிக தொடராது என்று திருமாவளவன் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல், ராமதாஸ் திமுக கூட்டணியில்  இணைந்தால் விசிக கூட்டணியில் தொடருமா என்று திருமாவிடம் செய்தியாளர்களால் கேள்வி எழுப்பிய போது, பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் ராமதாஸ் கூட்டணியில் இணைந்தால் திருமாவளவன் வெளியேறுவார் என்பது தெளிவாகிறது. திமுகவுடன் இணைந்து பல தேர்தல்களை சந்தித்து, திமுகவின் வாக்கு வங்கியில் கணிசமான அளவு மாற்றத்தை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெற செய்த விசிக கூட்டணியிலிருந்து விலகுவது 2026 தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைமை என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விவசாயிகளுக்கு அல்ல மதுக்கடைகளுக்கே முன்னுரிமை.. நாம் தமிழர் கட்சி தலைவர் விமர்சனம்!!

0

DMK NTK: மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் நிலைமைகளை கடுமையாக விமர்சித்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்று கூறிய அவர், அரசு மதுபான குடோன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது ஆனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாக்க குடோன்கள் அமைக்கப்படவில்லை இது எந்த வகை முன்னுரிமை? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு கபடி வீரர்களுக்கு ரூ.25 லட்சம் மட்டுமே வழங்கிய நிலையில், ஆந்திர மாநிலத்தின் செஸ் வீரருக்கு ரூ.5 கோடி பரிசாக வழங்கியதை சீமான் கடுமையாக விமர்சித்தார். தமிழக அரசு தன் மக்களைப் பற்றிய மரியாதையையே இழந்து விட்டது என அவர் குற்றஞ்சாட்டினார். அவரது உரை நடந்து கொண்டிருக்கையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க வந்ததால், காவல்துறையினர் செய்தியாளர் சந்திப்பை நிறுத்துமாறு கூறினர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், சீமான் ஒரு நிமிடம் பேச்சை முடித்துவிடுகிறேன் எனக் கூறி தனது உரையைத் தொடர்ந்து முடித்தார். திரைப்படத்தினரின் அரசியல் வருகையைப் பற்றியும் சீமான் கடுமையாக பேசினார். நடிப்பு திறமை உள்ளவர்களே நாட்டை ஆள வேண்டும் என்ற மனோபாவம் ஆபத்தானது. இது தமிழ் சமூகத்துக்கு அவமானம் என்றார். தவெக தலைவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது அவரது தனிப்பட்ட முடிவு எனக் கூறினார். இன்றைய கல்வி வணிகமாக மாறியதால் அரசியல் பற்றிய புரிதல் குறைந்து விட்டதாகவும், தமிழ் மக்கள் பகுத்தறிவுடன் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தினார்.

மீண்டும் ஸ்பாட்டுக்கு வரும் விஜய்.. நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி!!

0

TVK: தமிழக அரசியல் களத்தில் புதிய அலையாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். கரூரில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து 3 நாட்களுக்கு பின் காணொளி ஒன்றை வெளியிட்ட விஜய் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன் என்றும், 20 லட்சம் நிவாரணமும் வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து ஆறுதல் கூறினார் விஜய்.

இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் சம்பவத்தை பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக பேசலாம். ஆனால் எண்களின் வருத்தம் அந்த 41 பேரின் உயிரிழப்பு தான். பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு விஜய் முழு பொறுப்பையும் ஏற்பார் என்றும் தெரிவித்தார். சிபிஐ சம்மன் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த சம்மன் இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை என்றும், சம்மன் வந்தால் நானும், புஸ்ஸி ஆனந்தும் நீதிமன்றத்தை அணுகி உரிய விளக்கத்தை அளிப்போம் என்று கூறினார்.

மேலும், விஜய் மக்கள் சந்திப்பை விரைவில் அறிவிப்பார். நீதிமன்றம்  வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் தகுந்த முறையில் அடுத்த பிரச்சாரம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இனிமேல் தான் விஜய் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வை அறிவிப்பார் என்றும் கூறினார். கரூர் சம்பவம் நிகழ்ந்த பிறகு விஜய் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பார், இனிமேல் அரசியல் கூட்டங்களை நடத்த மாட்டார் என்று அனைவரும் கூறி வந்தனர். ஆனால் இந்த நிகழ்வு விஜய்யை மேலும் பலப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். விஜய்யின் அடுத்த கட்ட அரசியல் பயணம் எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கொள்கையில் தடுமாறும் சீமான்.. திணறும் தம்பிகள்.. வேட்பாளர் தேர்வில் சிக்கல்!!

0

NTK: 2010இல் ஆரம்பிக்கபட்ட நாம் தமிழர் கட்சி, 2016 ஆம் ஆண்டில் தான் தனது முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 4,58,104 வாக்குகளுடன் ஒன்பதாம் இடம் பெற்றது. இதற்கு பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டு அதனுடைய தனிபெரும்பான்மையை உறுதி செய்து வந்தது. அதோடு அக்கட்சியின் கொள்கையையும் தவறாமல் கடைப்பிடித்து வந்தது.

ஆனால் தற்போது அதில் மாற்றம் தென்படுகிறது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோர் வாக்கு வாங்கி அதிகளவில் உள்ளது. அதனால் அந்த தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்பவரை வேட்பாளராக சீமான் அறிவித்துள்ளார். மேலும் பிராமண சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு இம்முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சென்ற தேர்தலில் இவர்களுக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சீமானின் இந்த செயலுக்கு கட்சி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல் பரவியுள்ளது. இவரின் சாதி வாரியான வேட்பாளர் தேர்வு முறை கட்சியில் உள்ளவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சாதியற்ற சமூகம், பெண்களுக்கு முன்னுரிமை போன்ற சீமானின் கருத்துக்கள் தான் அவர் அரசியல் களத்தில் நான்காவது இடத்திற்கு வர உதவியது. ஆனால் தற்போது சீமான் அந்த கொள்கையிலிருந்து பின்வாங்குவதாக தெரிகிறது என கட்சி தொண்டர்கள் கூறுகின்றனர். 

விளம்பரத்தையே நம்பி நடக்கும் அரசு இது.. தேர்தலை குறி வைக்கும் சசிகலா!!

0

DMK ADMK: நீண்ட நாட்களாக வெளியில் தலை காட்டாமலிருந்த சசிகலா தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆளுங்கட்சியை பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, 2026 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என உறுதியளித்தார். திமுக அரசின் செயல்பாடுகள், குறிப்பாக நெல் கொள்முதல் முறையில் ஏற்பட்ட குளறுபடிகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.  தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் கொள்முதல் சரிவர நடைபெறவில்லை.

லாரி ஒப்பந்தத்தை ஒரே ஒரு நிறுவனத்துக்கே வழங்கியதால் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. ஜெயலலிதா ஆட்சியில் மாவட்ட வாரியாக ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் அப்போது பணிகள் சிறப்பாக நடந்தன. ஆனால் தற்போதைய திமுக அரசு நிர்வாகத்தில் தோல்வியடைந்துள்ளது. நுகர்வோர் கழகத்தில் ஒரு ஆண்டில் ஐந்து மேலாண்மை இயக்குநர்களை மாற்றியதால் நிர்வாகம் திணறுகிறது என்றார். மேலும், நெல் கொள்முதல், அரிசி அரவை ஆலைகள் இயக்கம் உள்ளிட்ட துறைகளில் முழுமையான அலட்சியம் நிலவுகிறது.

திமுக அரசு விளம்பரத்தை மட்டுமே நம்பி செயல்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லை. அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவதால் தட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார். மேலும் அவர், 2026 தேர்தலில் மக்கள் திமுக ஆட்சியை மாற்றி, ஜெயலலிதா பாணியில் நல்ல நிர்வாகத்தை மீண்டும் நிறுவுவார்கள். அதனை நான் உறுதியாக கொண்டு வருவேன் என்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி ஒரு முக்கிய திருப்பு முனையாக அமையுமென்று பார்க்கப்படுகிறது. 

சின்னத்தை கையிலெடுக்கும் விஜய்.. “திமுக-வுக்கு வரும் அடுத்த தலைவலி”!!

0

TVK: தமிழக அரசியல் களமானது 2026 தேர்தலுக்கு பின் பல்வேறு மாற்றங்களை சந்திக்க உள்ளது. அதிலும் வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை நான்கு முனை போட்டிகளையும் தாண்டி பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதிலும் விஜய்-க்கு இருக்கும் வரவேற்பானது மற்ற அலாதியானது. அதிலும் திமுக தான் இவரது அரசியல் எதிரி எனக் கூறியுள்ளதால் அவரை முடக்குவதற்கு பல சந்தரப்பங்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்படி அவர்களுக்கு ஏற்றவாறு அமைந்தது தான் கரூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் சந்திப்பு, மற்ற மாவட்டங்களில் இல்லாத உயிரிழப்புக்கள் இங்கு தான் அரங்கேறியது.

இதற்கு பின்னணியில் பல்வேறு காரன்கள் சொல்லப்பட்டாலும், போதிய பாதுகாப்பு இல்லை என்பதும் மற்றொரு, பக்கம் ஆளும் கட்சியின் தலையீடு உள்ளதையும் பார்க்க முடிகிறது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த போது இவ்வளவு மும்முரம் காட்டாதவர்கள், விஜய்யினுடைய மக்கள் சந்திப்பின் உயிரிழப்பிற்கு மட்டும் பல்வேறு நடவடிக்களை முன்னெடுத்தனர். மீண்டும் விஜய் எந்த மாவட்டத்திற்கும் சென்று தலை தூக்க கூடாது என்பதில் தெள்ளந்தெளிவாக உள்ளனர்.

இவையனைத்தும் ஆளும் கட்சியானது விஜய் யின் வளர்ச்சியை குறித்து அஞ்சுவது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் அதனையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தனது அரசியல் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது விஜய் தனக்கு சின்னம் ஒதுக்க கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தேர்தலில் சின்னம் ஒதுக்க கோரி சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு 7 மாதங்களுக்கு முன்பாகவே மனு அளிப்பது கட்டாயம்.

அதிலும் தேர்தல் ஆணையம் தரும் இலவச சின்னங்களில், 10 சின்னங்களை தேர்வு செய்ய வேண்டும். மேற்கொண்டு 3 புதிய சின்னத்தையும் அவர்களாகவே பரிந்துரை செய்யலாம். ஆனால் பரிந்துரை செய்யப்படும் சின்னத்தை யாரும் பயன்படுத்திருக்கவும் கூடாது. தமிழக வெற்றிக் கழகம் தனக்கென 3 சின்னங்களை பரிந்துரை செய்யுமா என்பதை நவம்பர் அல்லது அதன் தொடர்ச்சி மாதங்களில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கரூர் சம்பவத்தை பற்றி பேச அருவருப்பாக இருக்கிறது.. சீமான் ஆவேசம்!!

0

TVK NTK: நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்படத்திலிருந்தே தனித்து களம் கண்டு வருகிறது. திமுகவை தனது அரசியல் எதிரியாக கருதி செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி தனது பிரச்சாரம், பொதுக்கூட்டம் என அனைத்திலும் திமுகவை வஞ்சித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆனால் தற்போது புதிதாக தொடங்கப்பட்ட கட்சியான தவெகவையும் அந்த வரிசையில் சேர்த்து கொண்டது. சமூக வலைதளங்கள், கட்சி கூட்டங்கள் என அனைத்திலும் விஜய்யை சரமாரியாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் நேரில் ஆறுதல் கூறும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இது குறித்து சீமான் அவர்களிடம் இன்று கோவையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பது விஜய்யின் தனிப்பட்ட விஷயம். இதில் நான் கருத்து கூற ஒன்றுமில்லை என்று கூறிய அவர், தொடர்ந்து கரூர் நிகழ்வை பற்றியே பேசி கொண்டிருப்பதை அருவெறுப்பாக நினைக்கிறேன்.

தமிழகத்தில் எவ்வளவோ வீர மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த சம்பவத்திற்கெல்லாம் அரசு பொறுப்பேற்கிறதா? ஒரு நடிகரை பார்க்க சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை, அதனை லட்சம் நிவாரணம் போன்றவற்றை வழங்குகிறார்கள் என்று தனது ஆதங்கத்தை  வெளிப்படுத்தினார். மேலும் நான் ஒன்றும், ஏசி அறையிலிருந்து வெளியே வரவில்லை, சிறை வாசத்திலிருந்து வந்தேன் என்று கடுமையாக தனது விமர்சனத்தை முன் வைத்தார். 

பாஜக-தவெக கூட்டணி.. முடிவு விஜய் கையில்.. நயினாரின் ஓபன் டாக்!!

0

TVK BJP: தமிழக அரசியலில் புதிய அலையாக உருவெடுத்துள்ளது தான் தமிழக வெற்றிக் கழகம். கட்சி ஆரம்பித்த போது இருந்த ஆதரவும், ஆர்ப்பரிப்பும் தற்போது வரை குறையவில்லை என்றே சொல்லலாம். இதனை கண்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. அதற்கான பேச்சு வார்த்தையும் அனைத்து தரப்பிலிருந்தும் நடைபெற்று வருகிறது.

கரூரில் நடந்த சம்பவத்திலிருந்தே இன்னும் வெளியே வராத விஜய் தற்போது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை ஒத்தி வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விஜய்யின் குரலாக ஒழித்து வருவது பாஜகவும், அதிமுகவும் தான். ஆனால் விஜய் பாஜகவை கொள்கை  எதிரி என்று கூறியதால் அவர்களுடன் கூட்டணி வைக்க யோசிக்கிறார். ஆனால் பாஜகவோ அவரை விடாமல் துரத்தி வருகிறது.

தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் பாஜக- விஜய் கூட்டணி குறித்து கேட்ட போது அதை பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டுமென்று கூறினார். மேலும், விஜய் கூட்டணிக்கு வந்தால் சேர்த்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார். பாஜக விஜய் கூட்டணிக்கு காத்திருக்கிறது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வரும் சமயத்தில், நயினாரின் இந்த பதில் அதனை உறுதி  செய்துள்ளது. ஆனால் விஜய் தரப்பு இது குறித்து எந்த பதிலும் அளிக்காததால், விஜய் என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

விவாதங்களை கிளப்பிய ராமதாஸின் பதில்.. கூட்டணி கணக்குகளால் சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

0

DMK PMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், மக்கள் சந்திப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற நடவடிக்கைகளில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் இரு வேறு திசையில் பயணித்து வருவதால் பாமகவின் வாக்கு வங்கி சிதற கூடும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது அன்புமணி திமுகவை கடுமையாக எதிர்த்து வருவதால் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என்று கூறப்பட்ட சமயத்தில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் அன்புமணியை நேரில் சந்தித்து அதனை உறுதி செய்தார்.

ஆனால் ராமதாஸ் இன்னும் அவருடைய நிலைப்பாட்டை உறுதி செய்யவில்லை. எனினும் அன்புமணி அதிமுக உடன் நெருக்கம் கட்டி வருவதால் ராமதாஸ் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என்ற கருத்தும் நிலவியது. மேலும் ராமதாஸ் திமுகவிற்கு சாதகமாக நிறைய விஷயங்கள் செய்வதும், அவர்களுக்கு ஆதரவாக பேசுவது போன்ற பல செயல்பாடுகளில் ஈடுபட்டார். இவையெல்லாம் அவர் திமுகவில் இணைவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் அவருடைய வாதம் அமைந்துள்ளது.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திமுக உடனான கூட்டணி குறித்து கேட்ட போது, திமுக உடனான கூட்டணி என்பது போக போகத்தான் தெரியும் என்று கூறி முடித்தார். இந்த பதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. திமுக உடன் கூட்டணி இல்லையென்றால் அதனை ஓபனாக சொல்லி இருக்கலாமே. போக போக தான் தெரியும் என்பது கூட்டணிக்கான அடித்தளமாகவே பார்க்கப்படுகிறது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

திமுகவிற்கு அடித்த ஜாக்பாட்.. குஷியில் ஸ்டாலின்.. ஆக்க்ஷனில் இறங்கிய ஓபிஎஸ்!!

0

DMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கபட்டார். பிறகு தனது பதவியை ராஜினாமா செய்த இவர், என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறினார். இவருக்கு பிறகு சசிகலாவின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். இவர் இந்த பதவிக்கு வந்த பிறகு சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த டிடிவி தினகரன் அமமுக கட்சியை துவங்கினார். ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். பின்னர் ஓபிஎஸ்யும், தினகரனும் நல்ல நட்புறவில் இருந்தனர். இவர்கள் இருவரின் ஒரே குறிக்கோள் இபிஎஸ் வீழ்த்த வேண்டுமென்பது தான். இந்நிலையில் ஓபிஎஸ், அவரது பேட்டியில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்ததால் அவர் விஜய்யுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது புதிய திருப்பமாக சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் திமுகவிற்கு சாதகமாக பேசியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. அதிமுக, பாமக, போன்ற கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. ஆனால் திமுக அரசு கூட்டணியை சரியாக கையாள்கிறது. இப்படி இருக்க அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்புக்கு அதிகளவில் வாய்ப்பிருப்பதாக மக்கள் பேசி கொள்கிறார்கள், நான் கூறவில்லை என்று சூசகமாக பதிலளித்தார். இவரின் இந்த பதில் திமுக பக்கம் அவர் மெல்ல மெல்ல சாய்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இவர் கூடிய விரைவில் திமுகவில் இணைவார் என்ற கருத்தும் நிலவுகிறது.