வியாழக்கிழமை, செப்டம்பர் 18, 2025
Home Blog Page 8

பாஜக கொடுக்கும் ஆதரவு.. ஒருங்கிணையும் அதிமுக!! செங்கோட்டையன் திட்டம் செல்லுபடியாகுமா??

0

ADMK BJP: கடந்த சில நாட்களுக்கு முன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வில், ஓ.பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி 10 நாட்கள் காலக்கெடுவை எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்திருந்தார். இதனால் கோபமடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும்  நீக்கினார்.

அ.தி.மு.க-வில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீரென டெல்லி பயணம் செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை சந்தித்துள்ளார். அண்மையில் செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்து செய்தியாளரால் கேள்வி எழுப்பட்ட போது, நான் யாரையும் சந்திக்க டெல்லி செல்லவில்லை, இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன.

அதனால் மன நிம்மதிக்காக கடவுள் ராமரை தரிசிக்க செல்வதாகக் கூறினார். இந்நிலையில், செங்கோட்டையன் அமித்ஷாவை நேரில் சந்தித்தது, அ.தி.மு.க-பாஜக கூட்டணியில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் கூட செங்கோட்டையன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். தன்னுடைய 10 நாள் கெடு தொடரும் என்றும் அறிவித்திருந்தார்.

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. பா.ஜ.க தரப்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பு அ.தி.மு.க வில் பிரிந்த அணிகளை மீண்டும் ஒருங்கிணைப்பதில் பா.ஜ.க ஆதரவு தேவைப்படுவதை சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில் செங்கோட்டையன் மீண்டும் பதவி வகிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து கூறுகின்றன. இது அ.தி.மு.க-வுக்குள் புதிய அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த அமித்ஷா.. செங்கோட்டையனுக்கு வாய்ப்பு தந்த பாஜக தலைமை!!

0

ADMK BJP: அதிமுகவில் எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு மேலாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. அதிலும் எடப்பாடிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்திய போது அப்பட்டமாக செங்கோட்டையனை ஒதுக்கியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற கூட்டு தொடரிலும் அதன் வெளிப்பாட்டை பார்க்க முடிந்தது. அச்சமயத்தில் எடப்பாடி பேட்டி ஒன்றில், நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இருக்கவில்லை என்று செங்கோட்டையனை சாடி பேசியிருந்தார்.

அதேசமயம் இவரும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்து வந்தார். அச்சமயமே செங்கோட்டையன் புதிய கூட்டணியை உருவாக்கப் போகிறார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் நாளடைவில் இருதரப்பும் சற்று அமைதியான நிலையில் இருந்ததால் சமரசமாகிவிட்டதாக நினைத்தனர். இடைவிடாது இரு தரப்பு மோதலானது மீண்டும் தலை ஓங்க ஆரம்பித்து தற்போது செங்கோட்டையனை எடப்பாடி கட்சியை விட்டே வெளியேற்றி உள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என கூறியதோடு, எடப்பாடிக்கு பத்து நாள் கெடு விதித்ததுதான். ஆனால் நேற்று செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளது எடப்பாடிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அதிமுக பாஜக கூட்டணி வைத்ததிலிருந்து பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்த முக்கிய தலைவர்கள் யாரும் தற்போது இணக்கமாக இல்லை. இதற்கு எடப்பாடி போட்ட கண்டிஷன் தான் காரணம் என கூறுகின்றனர்.

அதன்படி தான் ஓபிஎஸ்ஸும் ஓரங்கட்ட பட்டார். ஆனால் பொதுவெளியில் அவர்களுடன் நட்புறவுடன் இருப்பது போல் பாஜக காட்டிக் கொள்கிறது. அந்த வகையில் தனது கட்சியை விட்டு வெளியேற்றிய செங்கோட்டையனை பாஜக சந்திக்க ஏன் இடம் கொடுக்க வேண்டும், இது கூட்டணியை பாதிக்காதா என்று கேள்வியை முன் வைக்கிறாராம். இதனால் பாஜக முக்கிய தலைமீது பெரும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் எடுத்த மூவ்.. ஆடிப்போன தலைமை!!

0

ADMK BJP: அதிமுக கட்சிக்குள் உட்கட்சி மோதல் தீவிரமடைந்த நிலையில் அடுத்தடுத்த நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையன் எடப்பாடிக்கு விதித்த கெடு முடிவதற்குள் அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டார். மேற்கொண்டு தனி அணி உருவாகும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். செங்கோட்டையனுக்கு பின்னணியில் சசிகலா தினகரன் ஓபிஎஸ் என அனைவரும் இருப்பது தெரிகிறது. இதனால் ஒன்றுபட்ட அதிமுகவை விரும்புபவர்கள் ஒரு புதிய கூட்டணியை கூட அமைக்கலாம்.

ஆனால் ஒன்றுபட்ட அதிமுக தான் வேண்டும் என்பதில் செங்கோட்டையன் தீவிரமாக இருப்பதாக தெரிவித்தார். திடீரென்று ஹரிதுவார் கோவிலுக்கு மன நிம்மதிக்காக டெல்லி செல்கிறேன் என செய்தியாளர்கள் முன்னிலையில் கூறியிருந்தார். ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்துள்ளார். ஏன் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு பாஜக முக்கிய தலையை சந்திக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது?? பாஜக- வோ அதிமுகவுடன் கூட்டணி வைத்ததிலிருந்து முன் நெருக்கம் காட்டிய அனைத்து நிர்வாகிகளையும் ஒதுக்கி வைத்து வருகிறது.

அப்படித்தான் ஓபிஎஸ்-க்கு மோடியை காண நேரம் கூட ஒதுக்கவில்லை. இதனின் ஒட்டுமொத்த வெளிப்பாடு தான் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது. அப்படி இருக்கையில் கட்சியிலிருந்து நீக்கிய செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ரீதியாக செங்கோட்டையன் பதிலளிக்கும் போது தான் என்னவென்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

செங்கோட்டையனின் அடுத்த வியூகம் என்ன? ஒருங்கிணைப்பு பணியா? புதிய கட்சியா?

0

எம்.ஜி.ஆர். முதல் ஜெயலலிதா வரை அ.தி.மு.க வில் பிரபலமானவராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கிய செங்கோட்டையன், தற்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும், அந்த எண்ணத்தில் தான் அவ்வாறு கூறினேன், ஆனால் அதற்காக கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை. முறைப்படி என்னுடைய கருத்துக்கு மாற்று கருத்து இருந்தால், அவர்கள் என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்யவில்லை, இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும், பொறுப்புகளில் இருந்து நீக்கியது வேதனை இல்லை மகிழ்ச்சியே என்றும் கூறி இருந்தார்.

செங்கோட்டையனுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ.பன்னிர்செல்வம் போன்ற அ.தி.மு.க-வின் முன்னாள் தலைவர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் பிற கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களும், அவருக்கு ஆதரவு அளித்த வண்ணம் உள்ளனர். இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்வோம் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மேலும் என்னுடைய 10 நாள் கெடு தொடரும் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சில மூத்த தலைவர்கள் செங்கோட்டையனின் பதவி பறிப்பு கட்சியின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் முடிவு என்றும் கூறியுள்ளனர். அ.தி.மு.க-வில் நிலவும் பதவி பறிப்பு, கட்சியின் நிலைத்தன்மையை வெளிபடுத்துவதாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால் மக்களுக்கு அ.தி.மு.க மேல் இருக்கும் நம்பிக்கையும், தேர்தல் நேரத்தில் எதிர்மறையான தாக்கத்தையும் உண்டாக்கும் என்றும் விமர்சித்துள்ளனர்.

செங்கோட்டையனின் டெல்லி பயணம்! பழனிசாமிக்கு எதிரான சதித்திட்டமா… பாஜக தலைவர்களை சந்திக்கும் நோக்கமென்ன?

0

அ.தி.மு.கவிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவையில் இருந்து டெல்லி-க்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடி, அமித்ஷா போன்ற பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களை காணத்தான் டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், இந்த பயணம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நான் யாரையும் சந்திக்க செல்லவில்லை, இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன, அதனால் மன நிம்மதிக்காக கடவுள் ராமரை தரிசிக்க செல்கிறேன் என்று கூறினார்.

அதோடு செப்டம்பர் 9 ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக பரவிய தகவலையும் அவர் மறுத்துள்ளார். ஆனால் அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்து என்னவென்றால், அ.தி.மு.க-வில் உட்கட்சி பிரச்சனைகள் அதிகரித்து வரும் வேளையில், செங்கோட்டையன் டெல்லிக்கு செல்வது நரேந்திர மோடி, அமித்ஷா போன்ற முக்கிய தலைவர்களை சந்தித்து தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடத்துவதற்காக தான் இருக்கும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

மற்றொரு கோணத்தில் பார்த்தால் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை சார்ந்திருப்பதால் பா.ஜ.கவினரிடம் அ.தி.மு.க கூட்டணியை வெளியேற்றுமாறு கூற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அ.தி.மு.க பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமி கட்சி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, பா.ஜ.க தலைவர்கள் அவரிடம் ஆலோசனை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்கவும்  இந்த பயணம் காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு பதிலடி கொடுத்த ஈ.பி.ஸ் ! திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளிய த.வெ.க… மூன்றாம் இடத்தில் இருக்கும் அ.தி.மு.க….

0

அ.தி.மு.க பல ஆண்டுகளாக தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் விளங்கும் அரசியல் கட்சியாகும்.பலமுறை தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், தேர்தலில் தோற்றாலும் சிறந்த எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது அதன் செல்வாக்கு குறைந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மறைவிற்க்கு பிறகு அ.தி.மு.க பல்வேறு உட்கட்சி பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் த.வெ.க விற்கும், தி.மு.க விற்கும் தான் நேரடி போட்டி என்றும், தனது பிரதான அரசியல் எதிரி தி.மு.க தான், என்றும் சமீபத்தில் த.வெ.க தலைவர் கூறியிருந்தார்.

இது குறித்து அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-யிடம் செய்தியாளர் கேள்வியெழுப்பிய போது, தமிழகத்தில் ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய திராவிட கட்சிகளான திகழும் அ.தி.மு.க விற்கும், தி.மு.க விற்கும் தான் போட்டி என்று உறுதியாக கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மெஜாரிட்டி தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.

ஆனால் அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்து என்னவென்றால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சியான தி.மு.கவிற்கும், புதிதாக ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே போட்டி நிலவ 80% வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மூன்று அல்லது நான்காவது இடத்திற்கு செல்ல  வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்கு செல்ல மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால், அக்கட்சியின் உட்கட்சி பிரச்சனைகளால் மக்களுக்கு அ.தி.மு.கவின் மேல் ஏற்பட்ட அதிருப்தியும், செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியதால், அவரின் முகமாக அறியப்பட்டு வரும் கொங்கு மண்டல பகுதியில் வாக்கு வங்கியில் ஏற்பட போகும் மாற்றமுமே காரணமாக அமையும் என அவர்கள் கூறுகின்றனர்.

செங்கோட்டையனுக்கு பெருகும் ஆதரவு! எடப்பாடிக்கு கிளம்பும் எதிர்ப்பு – அதிமுகவில் வெடிக்கும் பூகம்பம்

0

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற அவரின் கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதே சமயம் அ.தி.மு.க பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பும் பெருகி வருகிறது. எம்.ஜிஆர் காலம் முதல் இன்று வரை அறியப்பட்டு வரும் செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியது அவரின் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக எடப்பாடி பழனிசாமி தேனி அருகே சுற்று பயணம் மேற்கொண்டபோது அவரின் வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் “அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று கோஷமிட்டனர். இதனால் பிரச்சாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

செங்கோட்டையனின் பதவி பறிப்பு தொடர்பாக பேசிய ஓ.பன்னிர்செல்வம், செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று கூறி இருக்கிறார். அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலளார் சசிகலா செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியது “சிறுப்பிள்ளை தனமான செயல், இது கட்சியின் நலனுக்கு உகந்தது அல்ல”, ஒற்றுமையே கட்சி மீட்புக்கு வழிகாட்டும் என்றும் வலியுறுத்தினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.டி.வி தினகரன் “கெடுவார் கேடு நினைப்பார் என்பது போல எடப்பாடி பழனிசாமியின் செயல் இருக்கிறது, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது அவருக்கு பின்னடைவு இல்லை, அவரை நீக்கியவர்களுக்கு தான் பின்னடைவு என்று சாடியிருந்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.கவின் உரிமை மீட்பு குழு சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை உடைக்க பலர் செயல்பட்டு வருவதகவும், அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது என்று ஆவேசமாக பேசியுள்ளார். செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது 2026 சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை செங்கோட்டையன் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் ?  அரசியல் வட்டாரத்தில் கேள்விகள்!

0

அ.தி மு.க வின் முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையன் செப்டம்பர்-5 ஆம் தேதி, செய்தியாளர் சந்திப்பில் “கட்சியில் இருந்து பிரிந்த முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் இல்லையென்றால் அதற்கான பணிகளை என்னை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்வோம்” என்று கூறியிருந்தார்.

ஒருங்கிணைப்புக்காக அ.திமு.க பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதற்காக முன்னால் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார். அவரோடு சேர்த்து அவருடைய ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டது.

கட்சியின் மத்திய செயலாளாராக இருப்பவர் தலைமை மீது கேள்வி எழுப்புவதா? என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன் என்னுடைய கருத்தை கேட்காமல் என்னை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டனர். இது தர்மத்திற்கு புறம்பானது, இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டுமென்று என்று விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “எனது ஒருங்கிணைப்பு பணி தொடரும்” என்றும் கூறி இருந்தார். இது தொடர்பாக செங்கோட்டையன் அவருடைய ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். செப்டம்பர் 9 யில் முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பில் அவர் ஓ.பன்னிர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் மூவரையும் ஒரு அணியாக சேர்த்து செயல்படப்போகிறாரா, இல்லை தனி கட்சி தொடங்க போகிறாரா, இல்லை அ.ம.மு.க கட்சியில் இணைய போகிறாரா என்ற பல கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

அ.தி.மு.க உள்கட்சி குழப்பம் … 2000 நிர்வாகிகள் ராஜினாமா – செங்கோட்டையனுக்கு பெரும் பலம்!

0

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் 7 பேரின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க வின் முன்னால் எம்.பி. சத்தியபாமா-வும் தனது பதவியை ராஜினாமா செய்யயுள்ளதாக தகவல் வெளியான நிலையில் நேற்று அவரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

உட்கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க-வின் பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக செங்கோட்டையனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்பொது சத்தியபாமா-வும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் பலரும் தங்களையும் பதவியில் இருந்து நீக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளை சேர்ந்த சுமார் 2000 நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் வேண்டுகோளுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்கலாம் இருப்பது, அவர் தலைமையின் மீது அவருக்கு இருக்கும் பயத்தை காட்டுகிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் அ.தி.மு.க வரும் சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்க முடியாத தோல்வியை தழுவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.

செங்கோட்டையன் அதிரடி நீக்கம்.. எடப்பாடி கொடுத்த பதிலடி!!

0

ADMK: அதிமுகவின் மூத்த தலைவரும் முக்கிய நிர்வாகிமான செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் இதனால் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை இணைக்க வேண்டும் எனக் கூறி பத்து நாட்கள் கெடு விதித்துள்ளார். இந்த பத்து நாட்களில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் அதிமுக பிளவு குறித்து அதிருப்தியில் இருப்பவர்களை வைத்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க முயற்சி செய்வோம்.

அதுமட்டுமின்றி எடப்பாடியின் சுற்றுப்பயணம் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் எனக் கூறியுள்ளார். இதனால் கட்சிக்குள் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இவரை அடுத்து தினகரனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியே வந்ததோடு செங்கோட்டையனை போலவே இவரும் முக்கிய அறிவிப்பு குறித்து பேசுவதாக கூறியிருந்தார். அக்கணமே அனைவரும், இவர்கள் இணைந்து ஏதோ ஒரு கூட்டணியை அமைக்க தாயராகி விட்டனர் என வியூகிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதுபோலவே இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தினகரன் கூறியதாவது, செங்கோட்டையன் எடுத்த முயற்ச்சியானது மிகவும் நல்லது அவருக்கு உறுதுணையாக இருப்போம் என கூறியதோடு, பாஜக எங்களை துக்கடா கட்சியாக பார்க்க நினைக்கிறது. அதுமட்டுமின்றி நயினார் நாகேந்திரன் வந்த பிறகு தான் ஓபிஎஸ் வெளியேற நேரிட்டது என்றெல்லாம் பேசினார்.

இவர்களின் இந்த பேட்டியின் பரபரப்பு குறைவதற்குள் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். அதில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது ஒட்டு மொத்த அரசியல் நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.