Home Blog Page 83

சிபிஐ என்ற ரிமோட் மூலம் விஜய்க்கு பாதகமான அறிக்கையை பெற முயற்சிக்கும் பாஜக.. சூழ்ச்சி வலையில் விஜய்!!

0

TVK BJP: செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது திமுகவின் கோட்டையாக அறியப்படும் கரூரில் நடைபெற்றதால், இது திமுகவின் சதி வேலை என்று தவெகவினர் கூறி வந்தனர். தவெகவின் அரசியல் அறியாமை மற்றும் விஜய் தாமதமாக வந்தது தான் இதற்கு காரணம் என்று திமுகவினர் கூறி வர, இதனை விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

பிறகு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்த தவெக சிபிஐ கோரி மனு தாக்கல் செய்ய, உச்ச நீதிமன்றம் அதற்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் விஜய் இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஆனால் சிபிஐ பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறது என்று ஏற்கனவே ஒரு முறை விஜய் கூறியிருக்க தற்போது அதனை வரவேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் பாஜக ஒரு பார்வையில் விஜய்க்கு உதவுவது போல காட்டிக்கொண்டாலும், மற்றொரு புறம் விஜய்க்கு எதிராக செயல்படுவதற்காகவே சிபிஐ விசாரணையை கோரி இந்த வழக்கை தான் வசப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சிபிஐயை தன் கையில் வைத்திருக்கும் பாஜக அதன் மூலம் விஜய்யிக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சிபிஐ விசாரணைக்கு விஜய் மகிழ்ச்சி தெரிவித்தற்க்கு காரணம் கரூர் சம்பவம் அவருக்கு எதிராக திரும்பி விட கூடாது என்பதற்காக தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.

தொடங்கியது பாஜகவின் பிரச்சாரம்.. வெற்றிநடை போடும் தமிழனின் பயணம்!!

0

BJP: சென்னை அண்ணாநகரில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக சார்பாக மிகப்பெரிய தொடக்க விழா இன்று நடைபெற்றது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, என பலரும் பங்கேற்றனர்.

அப்போது உரையாற்றிய அண்ணாமலை, பாஜக – அதிமுக கூட்டணி வரவிருக்கும் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெறும். மழை, வெயில், புயல் எதுவானாலும் அடுத்த நான்கு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் காசை வைத்து தேர்தலில் வெல்லலாம் என நினைக்கிறார். ஆனால் மக்கள் அதற்கு தகுந்த பதிலை கொடுப்பார்கள் என்றார். மேலும் அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கரூரில் 88 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர்.

ஆனால் அதற்கு திமுக அரசு எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக 1500 போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். ஆனால் மக்களின் உயிரைக் காக்க யாரும் முன்வரவில்லை. இதுவே திமுக ஆட்சியின் முகம் என கடுமையாக விமர்சித்தார். 2026-ஆம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி இருக்கையில் அமர வைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார். இது தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கம்.

சினிமா உலகில் நடிப்பவர்கள் அரசியலை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. மக்கள் இப்போது விழித்துள்ளனர் என்றும், ஸ்டாலினை நேரடியாக குறிவைத்து முதல்வருக்கு ஆய்வு கூட்டம் நடத்தத் தெரியாது. ஆனால் வெளிநாடுகளிலும் டெல்லியிலும் தேவையில்லாமல் சண்டை போடுகிறார். திமுக ஆட்சியில் முதல்வர் பேண்ட் போடுவது, உதயநிதி நாயோடு போட்டோ எடுப்பது இதுவே ஆட்சியாக மாறியுள்ளது என்று கடுமையாக தாக்கினார்.

இந்த நிகழ்வின் மூலம் பாஜக தனது 2026 தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக ஆரம்பித்துள்ளது. தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் எனப்படும் இந்த சுற்றுப்பயணம் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தையும் தொடும் விதமாக நடத்தப்படவுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

திமுகவை அகற்ற கொள்கை எதிரியுடன் கூட்டணி வைக்கும் விஜய்.. விஜய்யின் அதிரடி முடிவால் முழிக்கும் ஸ்டாலின்!!

0

TVK BJP: கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் ஏற்பட்ட துயரம், தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தனி நபர் ஆணையம் அமைக்க பின்னர் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் விஜய் தரப்போ சிறப்பு புலனாய்வு குழுவில் நம்பிக்கை இல்லையென கூறி சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தது. இதனால் உச்ச நீதிமன்றம் இதனை சிபிஐ கைக்கு மாற்றியது. இதனை தொடர்ந்து விஜய் தனது சமூக வலைத் தள பக்கதில் நீதி வெல்லும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் விஜய் இதற்கு முன் ஒரு முறை SIT இருக்க CBI எதற்கு என்று ஒரு போராட்டத்தில் கூறியிருந்தார். ஆனால் இப்போது அவர் இவ்வாறு கூறியிருப்பது பாஜக கூட்டணியில் அவர் இணைந்து விட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் பின்னால் பாஜக உள்ளது என்பதையும் இது தெளிவுப்படுத்துகிறது. விஜய் தனது அனைத்து பிரச்சாரங்களிலும் திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறி வருகிறார்.

இதனால் இவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்று எதிர்பார்த்த சமயத்தில், கரூர் விவகாரத்திலிருந்து தப்பிப்பதற்காக பாஜகவுடன் சேர்ந்துள்ளார் என்றும் ஒரு தரப்பு கூறி வர, இன்னொரு தரப்பு திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக, அதிமுக, இருப்பதால் தவெகஉடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் திமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர கூடாது என்பதற்காக கொள்கை எதிரி என்று கூறி வந்த பாஜக உடன் விஜய் கூட்டணி அமைக்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.

விஜய்யுடன் இணையும் அண்ணாமலையின் புதிய கட்சி.. டீலிங்கை ஓகே செய்த விஜய்!!

0

BJP TVK: முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போது இபிஎஸ், அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற நிபந்தனையை முன் வைத்ததன் அடிப்படையில் அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பிறகு பாஜக விவகாரங்களில் அண்ணாமலை அவ்வளவாக தலை காட்டாமல் இருந்தார்.

இதனால் இவர் பாஜகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார் என்ற தகவலும் பரவியது. இதன் பிறகு இவருக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் 1 ஆண்டுக்கு மேலாகியும் அதற்கான பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறாததால் வருத்தத்தில் இருந்த அண்ணாமலை அவரது ஆதரவாளர்களை வைத்து புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற செய்தியும் பரவி வருகிறது. மேலும் நயினாருடன் ஏற்பட்ட வாக்குவாதமும் இவர் கட்சி துவங்குவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இவரின் இந்த கட்சி கூடிய விரைவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய போகிறது என்றும் சொல்லப்படுகிறது. தவெக ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், கரூர் சம்பவம் தவெகவிற்கு பூகம்பமாக வெடித்துள்ளது. இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், சிபிஐ பாஜக வசம் இருப்பதால் விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது.

ஆனால் இதற்கு விஜய்யிக்கு விருப்பம் இல்லாதது போல் தெரிகிறது. இந்நிலையில், இதனை பயன்படுத்த கொண்ட அண்ணாமலை விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதில் முதல் இரண்டரை வருடம் நீங்கள் முதலமைச்சராகவும், அடுத்த இரண்டரை வருடம் நான் முதலமைச்சராகவும் இருக்கிறேன் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறார்.

இதற்கு விஜய், அண்ணாமலைக்கு இருக்கும் இளைஞர்கள் பட்டாளமும், தவெகவிற்க்கு இருக்கும் இளைஞர் பட்டாளமும் ஒன்று சேர்ந்தால் சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 150க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து விடலாம் என்ற நினைத்து இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.

கரூர் விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கிறது.. சிபிஐ விசாரணையை முதலில் கோரியது பாமக தான்!!

0

PMK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நடைபெற்ற பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் குழு அமைக்கப்பட்டது. இதற்கு பிறகு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரிக்கப்பட்டது.

இதன் மேல் உடன்பாடில்லாத விஜய் தரப்பு சிபிஐ விசாரணையை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இது தமிழக அரசுக்கு பேரிடியாக இருந்தாலும், விஜய் தரப்பு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த உத்தரவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி இது பேசிய போது, கரூரில் நடைபெற்ற சம்பவம் முழுக்க முழுக்க சதி வேலை என்றும் கரூர் விபத்துக்கு முதல் முதலில் சிபிஐ விசாரணையை அமைக்க கோரியது பாமக தான் என்பதை இந்த நேரத்தில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் கூறினார். பரப்புரை கூட்டத்திற்கு வந்தவர்கள் என அனைத்து தரப்பினரும், பொறுப்பின்றி செயல்பட்டது மிகவும் வருத்தத்திற்குரியது.

இந்த விபத்து நடந்து சில நாட்களிலேயே தமிழக அரசு மிகவும் பதற்றத்தோடு இருந்தது சந்தேகத்திற்க்கு வழிவகுத்தது. மேலும் கரூர் விபத்து தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றும் கூறினார். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும், குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

விஜய்க்காக ஒரே மேடையில் மோதிக்கொண்ட நயினார் அண்ணாமலை.. நயினார் கொடுத்த பதிலடி!!

0

BJP: இன்னும் 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக-பாஜக ஓராண்டிற்கு முன்பே கூட்டணி அமைத்துவிட்டது. சுமார் 160 தொகுதிகளுக்கும் மேல் இபிஎஸ் பிரச்சாரம் செய்து விட்டார்.

மீதமிருக்கும் தொகுதிகளுக்கு தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி இந்த முதல் பிரச்சாரம் நேற்று மதுரையில் தொடங்கியது. இந்த நிகழ்வில் பல்வேறு பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அண்ணாமலை மக்கள் தியேட்டருக்கு போங்க, படம் பாருங்க, விசில் அடிங்க. ஆனால் ஒரு நடிகன் நல்லாட்சி தருவான் என்று நினைக்க வேண்டாம் என்று பேசினார்.

இவர் இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டது விஜய்யை தான் என்பதை அங்கிருந்த அனைவரும் அறிந்து கொண்டனர். இவருக்கு பின் பேசிய நயினார் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் திமுகவை ஆட்சியை விட்டு அகற்ற முடியும், அனைவரும் என்றால் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன் என்று அண்ணாமலைக்கு பதிலடி தருமாறு பேசினார். கரூர் விபத்து நிகழ்ந்த போது விஜய்க்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை இப்போது அவரை எதிர்ப்பதை அனைவரும் விமர்சித்து வருகின்றனர். விஜய்யை ஆதரிப்பதில் அண்ணாமலைக்கு, நயினாருக்கும் இருக்கும் சச்சரவு பெருகி கொண்டு போகிறது என்பது இந்த மூலம் தெளிவாகிறது.

கூட்டணிக்கு மட்டும் வாங்க.. அதிகார பகிர்வு எல்லாம் இருக்காது.. விஜய்க்கு இபிஎஸ் செக்.. கலை கட்டிய தேர்தல் களம்!!

0

ADMK TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் கட்சிகளனைத்தும் கூட்டணி கணக்குகளையும், தேர்தல் வியூகங்களையும் வகுக்க தொடங்கிவிட்டது. அனைத்து தமிழக கட்சிகளும் மக்களை சந்தித்து அவர்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தவெக சார்பில் கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், அதனை ஏற்காத தவெக தரப்பு சிபிஐ விசாரணையை கோரி மனு தாக்கல் செய்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்ததுடன், சிபிஐ விசாரணைக்கும் உத்தரவு பிறப்பித்தது. இதனால் தவெக தலைவர் விஜய் மகிழ்ச்சியில் இருந்தார்.

ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பெரும்பாலும் மத்திய அரசின் கீழ் இயங்குவதால் தமிழக அரசின் பிடியிலிருந்து தப்பி மத்தியில் அரசின் சதி வலையில் மாட்டிக் கொண்டார் விஜய். இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதன் மூலம், பாஜக-அதிமுக கூட்டணியிலிருப்பதால் அதிமுக விஜய்யிடம் கூட்டணிக்கு நீங்கள் வந்து தான் ஆக வேண்டும். ஆனால் ஆட்சி பங்கோ, அதிக தொகுதிகளோ, முதல்வர் பதவியோ தர முடியாது என்று திட்ட வட்டமாக கூறியுள்ளது.

இல்லையென்றால் சிபிஐ விசாரணை உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்துள்ளது. இபிஎஸ், இதையெல்லாம் பாஜக மேலிடம் சொல்லி தான் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பது தான் அரசியல் சூழலில் பரபரப்பாக உள்ளது.

இனி பெரிதாக லாபமில்லாத 10 கல்லூரி படிப்புகள்! ஹார்வர்ட் அதிர்ச்சி அறிக்கை 

0

ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது – கணினி அறிவியல், பொறியியல், வணிகம் போன்ற சில பாரம்பரிய பட்டப்படிப்புகளின் மதிப்பு காலப்போக்கில் குறைந்து வருகிறது.

வேலைத் துறையில் வேகமாக மாறும் திறன்கள் இதற்கு காரணம்.
தொடர்ச்சியான திறன் மேம்பாடு (upskilling) இப்போது அவசியமானது, ஏனெனில் அனைத்து பட்டங்களும் நீண்டகால வேலை வாய்ப்பை உறுதி செய்யாது.

முன்பு உறுதியான பாதை, இன்று சவாலானது

முன்னொரு காலத்தில் வணிகம் முதல் பொறியியல் வரை எந்த பட்டப்படிப்பும் வெற்றிக்கு வழி என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால், இன்றைய வேகமான தொழில்நுட்ப மாற்றம், தானியக்கமடைந்த வேலைகள் ஆகியவை கல்வி சான்றிதழ்களின் மதிப்பை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது.

பட்டத்தின் கண்ணியம் போதாத நிலை

ஹார்வர்ட் பொருளாதார நிபுணர் டேவிட் ஜே. டெமிங் மற்றும் ஆய்வாளர் கடீம் நோரே 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் —
கணினி அறிவியல், பொறியியல், வணிகம் போன்ற பயன்பாட்டு துறைகளில் கிடைக்கும் வருமானம் காலத்துடன் வேகமாக குறைகிறது என்று கண்டறிந்தனர்.

முன்பு “தங்கச் சான்றிதழ்” எனக் கருதப்பட்ட பட்டங்கள், இப்போது தங்கள் பிரகாசத்தை இழந்து வருகின்றன.தொழில் உலகில் வேகமாக நடக்கும் மாற்றங்களுக்கு இணைந்து தன்னைத்தானே மேம்படுத்தாதவர்கள் பின் தள்ளப்படுகிறார்கள்.

பிரபல MBA பட்டங்களும் இதற்கு விலக்கல்ல —
2025 தொடக்கத்தில் ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூல் உள்ளிட்ட நிறுவனங்கள்
உயர் நிலை வேலை வாய்ப்புகளைப் பெற MBA பட்டதாரிகளே சிரமப்படுவதாக தெரிவித்துள்ளன.

மனிதநேயம் சார்ந்த படிப்புகள் – ஆர்வம் குறைவு

பயன்பாட்டு அறிவியல் துறைகள் தங்கள் சவால்களை சந்திக்கும்போது,
மனிதநேய (Humanities) மற்றும் சமூகவியல் (Social Sciences) துறைகள் மாணவர் சேர்க்கையில் மெதுவாக சரிவை எதிர்கொள்கின்றன.2013 முதல், ஹார்வர்ட் தரவுகள் காட்டுவது – மாணவர்கள் STEM மற்றும் வேலை சார்ந்த பாடப்பிரிவுகளுக்கே அதிகம் மாறி வருகின்றனர்.

இது மாணவர்களின் விருப்பம் மட்டுமல்ல, நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளும் மாறிவிட்டதை குறிக்கிறது.2022 ஆம் ஆண்டு ஹார்வர்ட் வெளியிட்ட “Degree Reset” அறிக்கையில் — நிறுவனங்கள் இனி பொதுவான பட்டங்களை விட, குறிப்பிட்ட திறன்கள் (Data Analytics, Digital Skills) கொண்டவர்களையே விரும்புகின்றன என்று குறிப்பிடப்பட்டது.

மதிப்பு இழக்கும் 10 படிப்புகள் (Harvard Report, 2025)

1. பொது வணிக மேலாண்மை (MBA உட்பட) – அதிகமான பட்டதாரிகள் மற்றும் மாறிய வேலை முறை காரணமாக லாபம் குறைவு.
2. கணினி அறிவியல் – ஆரம்பத்தில் உயர்ந்த சம்பளம் இருந்தாலும், தொடர்ந்த திறன் மேம்பாடு இல்லையெனில் மதிப்பு குறைகிறது.
3. இயந்திர பொறியியல் – தானியக்கம் மற்றும் வெளிநாட்டு உற்பத்தி பாதிப்பு.
4. கணக்கியல் – AI மற்றும் Automation மனித பங்களிப்பை குறைக்கிறது.
5. உயிர் வேதியியல் (Biochemistry) – கல்வி துறைக்கு அப்பாற்பட்டு குறைந்த பயன்பாடு.
6. உளவியல் (Psychology) – உயர் படிப்பு இல்லாமல் நேரடி வேலை வாய்ப்புகள் குறைவு.
7. ஆங்கிலம் மற்றும் மனிதநேயம் – மாணவர் சேர்க்கை சரிவு, தெளிவற்ற வேலை வாய்ப்பு.
8. சமூகவியல் மற்றும் சமூக அறிவியல் – வேலை சந்தை இணைப்பு பலவீனம்.
9. வரலாறு (History) – நடுத்தர வயது சம்பள உயர்வு குறைவு.
10. தத்துவம் (Philosophy) – திறன்கள் மதிக்கப்படினும், நேரடி வேலை சந்தை மதிப்பு குறைவு.

புதிய காலத்தின் தேவை – திறன்கள் மற்றும் தழுவும் திறன்

2025 மாணவர் தேர்வு அறிக்கை (Student Choice Report) கூறுவது —
பொறியியல், கணினி அறிவியல், செவிலியப் பாடம் (Nursing) ஆகியவை இன்னும் நல்ல முதலீட்டு வருமானம் தரும் துறைகள்.
ஆனால் எதிர்காலம், படைப்பாற்றல், விமர்சன சிந்தனை, உணர்ச்சி நுண்ணறிவு கொண்டவர்களுக்கே சொந்தமானது.

ஹார்வர்ட் ஆய்வாளர்கள் கூறுவதாவது:

“எதிர்கால கல்வி என்பது ஒரு பட்டம் அல்ல, தொடர்ந்து கற்றுக்கொள்வது தான் வெற்றியின் திறவுகோல்.”

தொழில்நுட்பம், மனிதமையச் சிந்தனை, தொடர்ந்து கற்றல் இந்த மூன்றையும் இணைக்கும் பாடங்கள் பாரம்பரிய துறைகளை விட சிறந்த பயனளிக்கும்.

கல்லூரி பட்டங்கள் அழிந்துவிடவில்லை — ஆனால் அவற்றின் மதிப்பின் வரையறை மாறிவிட்டது. இப்போது வெற்றி பெறுவோர், தங்கள் கல்வியை ஒரு முறை முடிந்தது என்று நினைக்காமல், தொடரும் கற்றல் பயணமாகக் காண்பவர்களாக இருப்பார்கள்.

தொழில்நுட்ப திறன், தழுவும் திறன், படைப்பாற்றல், சமூக அறிவு இந்த நான்கு இணைந்தால் மட்டுமே, ஒரு மனிதன் எதிர்காலத்தில் நிலைத்து நிற்க முடியும்.

வீக் ஆன எடப்பாடி பழனிசாமி.. விஜய்க்காக கொடி பிடிப்பது அதிமுக தொண்டர்கள் அல்ல இபிஎஸ் தான்!!

0

ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலில் அடியெடுத்து வைத்திருக்கும் விஜய் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தனது முதல் மாநாட்டிலேயே கூட்டணி அமைக்க தயார் என்று கூறிய அவர், கூட்டணி குறித்த முடிவை ஜனவரியில் பொங்கலுக்கு பின் தான் அறிவிப்போம் என்று உறுதியாக உள்ளார். இந்நிலையில் கரூர் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் ஏற்பட்ட கூட்டம் அரசியல் தலைவனை பார்க்க வந்த கூட்டம் அல்ல, நடிகரை பார்க்க வந்த கூட்டம் என்று பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் கரூர் சம்பவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசியலாக்குகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த சூழலில் அதிமுகவின் பிரச்சாரத்தில் தவெக கொடி பறந்ததை பார்த்த இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறினார். இது குறித்து இபிஎஸ்க்கு எதிரானவர்கள், விஜய்க்காக கொடி பிடிப்பது அதிமுக தொண்டர்கள் அல்ல இபிஎஸ் தான் என்று கூறி வருகின்றனர்.

ஏனேன்றால், புதிய கட்சியுடன் இபிஎஸ் இவ்வளவு இணக்கம் காட்டி வருவது, அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் அவமானமாக சிலர் கருதுகின்றனர். மேலும் கரூர் சம்பவத்திற்கு விஜய் மீதும் தவறு உள்ள பட்சத்தில், திமுக தனது அரசியல் என்ற ஒரே காரணத்தினால் இபிஎஸ் அனைத்து தவறையும் திமுக அரசு மீது சுமத்துவது, எடப்பாடி பழனிசாமி வீக் ஆகி விட்டார் என்பதற்கு எடுத்துக்கட்டாக இருக்கிறது என்றும் சிலர் கூறுகின்றனர். இபிஎஸ்யின் இந்த செயல்முறை ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் பலர் கூறிவருகின்றனர்.

தொடர் சர்ச்சையை எழுப்பிய விஜய்யின் பில்டப் அரசியல்.. பிரபல இயக்குனர் விஜய் மீது கடும் தாக்கு!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையை பலரும் பலவிதமாக விமர்சித்து வந்தனர். விஜய் மக்களோடு மக்களாக கலந்து பேசவில்லை. இன்னும் அரசியல் புரியாதவராகவே இருக்கிறார் என்பது தான் பொதுவாக அனைவரும் விமர்சித்த கருத்து. இந்நிலையில், இயக்குநர் அமீர் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நடத்தை குறித்தும், அவரின் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார்.

அமீர் பேட்டியின் போது, நான் பல முறை முதல்வர் ஸ்டாலினை விமானத்தில் சந்தித்திருக்கிறேன். ஆனால் விஜய் தனி விமானத்தில் தான் பயணம் செய்கிறீர்கள். அதுதான் பெரிய பிரச்சனை. நீங்கள் மக்களோடு கலந்துகொண்டு பயணித்தால் தான் மக்களின் விருப்பங்களை அறிய முடியும். அப்போது தான் உங்கள் பேச்சில் இந்த வார்த்தை வேண்டாம், இந்த கருத்து பொருந்தவில்லை என்று சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் நீங்கள் தனி விமானத்தில் பயணம் செய்து வந்து விடுகிறீர்கள்.

அப்படியானால், மக்களிடம் எப்போது உரையாட போகிறீர்கள்? எனக் கேட்டார். மேலும் அவர், விஜய் இரண்டு வருடங்களுக்கு முன் கட்சியைத் தொடங்கியிருந்தாலும், இதுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தவில்லை. ஒரு அரசியல் தலைவர் மக்களுடன் நேரடியாக உரையாட வேண்டும். பேச்சு வழியாகவே மக்களின் மனதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது, எனவும் குற்றம்சாட்டினார்.

இந்த பேட்டி நடந்து கொண்டிருந்தபோது, அமீரின் பின்னால் கருப்பு சட்டை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் திடீரென தன் கையில் இருந்த விஜய் புகைப்படம் பதிக்கப்பட்ட கீச்செயினை கேமரா முன் காட்டி சிரித்தார். அந்த காட்சி செய்தியாளர் மத்தியிலும், பின்னர் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதனால் சமூக வலைதளங்களில் பலரும் தவெக ஆதரவாளர்களின் நடத்தை குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாற்றுக் கருத்து கொண்டவர்கள் பேசும் போது அவர்களை இப்படி கலாய்ப்பது ஜனநாயக மரியாதைக்கு எதிரானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் அமீரின் பேச்சை எதிர்த்து விஜய்யின் முடிவுகளை நியாயப்படுத்தியிருக்க, சிலர் அவரின் விமர்சனத்தில் உண்மை இருக்கிறது எனவும் கூறி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில், இயக்குநர் அமீர் கூறிய பேச்சும், பின்னணியில் நடந்த கீச்செயின் சம்பவமும், விஜய்யின் அரசியல் பயணத்தைச் சுற்றி புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.