சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025
Home Blog Page 9

திமுக வெறும் 20 தொகுதிகளில் தான் வெற்றி! படு தோல்வியை சந்திக்கும் என அண்ணாமலை பேச்சு 

தமிழகத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசியல் சூழலில் பரபரப்பான நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து, திமுகவை குறிவைத்து சுடச்சுட பேசியுள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் அண்ணாமலை கூறியதாவது:

“திமுகவுக்கு வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாக 20 தொகுதிகளில் தான் அவர்கள் வெற்றிபெற முடியும். மக்கள் மனதில் திமுக ஆட்சி மீதான வெறுப்பு உருவாகியுள்ளது. அவர்கள் மீண்டும் ஆட்சி பெறக்கூடாது என்ற எண்ணம் பொதுமக்களில் தெளிவாக தெரிகிறது.”

அதனைத் தொடர்ந்து, திமுக எடுத்த கருத்துக் கணிப்பு (Survey) பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

“20 இடங்களிலும் வெற்றிபெறும் அளவுக்கே இருக்கிற கட்சி சர்வே எதற்காக எடுக்கிறது? மக்கள் உணர்வுகள் மாற்றம் அடைந்துள்ளன. திமுகவின் தோல்வி இந்த முறை உறுதி.” என அவர் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் சகோதரர் மற்றும் விஜய் குறித்து பதில்

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சகோதரர் சத்தியநாராயணராவ், விஜய் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், அண்ணாமலை புத்திசாலி என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது

“ரஜினியின் சகோதரர் என்னுடைய திறமையை பாராட்டினாலும், விஜய் குறித்து அவர் கூறிய கருத்துகள் அவருக்கே உரியது. விஜய் ஒரு கட்சி தொடங்கி உள்ளார். அவர் களத்திற்கு வந்து உழைத்தால் அதனால் கிடைக்கும் வெற்றி வாய்ப்பு அல்லது தோல்வி அவருடையதே” என்று குறிப்பிட்டார்.

திமுக கூட்டணியில் பிளவு

அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணியை (NDA) வலுப்படுத்தும் நோக்கத்தில் பேசினார்.

“தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்பதே மக்கள் விருப்பம். புதிய கட்சிகள் வரவேண்டும், ஒவ்வொரு கூட்டணியும் தெளிவாக ஒரு வடிவம் பெறவேண்டும். திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் விரைவில் விலகும் சூழ்நிலை உருவாகும்.”

TNPSC தேர்வில் பாடத்திட்ட மீறல் குற்றச்சாட்டு

அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை கூறியதாவது:

“TNPSC தேர்வில் பல கேள்விகள் பாடத்திட்டத்துக்கு வெளியே கேட்கப்பட்டுள்ளன. இது மாணவர்களின் திறனை சோதிக்கும் நேர்மையான முறையாக இல்லை. இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் செயலாக இது இருக்கிறது.”என்று கூறினார்.

தமிழக அரசியல் அரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அண்ணாமலையின் கூற்றுகள், தேர்தல் முன் அரசியல் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கின்றன. திமுக வெற்றி பெறும் தொகுதிகள் வெறும் 20 என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ள அவர், விஜய், ரஜினி, TNPSC, மற்றும் கூட்டணிக் விவகாரங்களை ஒட்டுமொத்தமாக தீவிரமாக விமர்சித்துள்ளார்.

எடப்பாடி-யுடன் கை கோர்ப்பாரா சீமான்.. நாதக நிர்வாகி பரபர பேச்சு!!

0

NTK ADMK: எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்து பல ஆண்டுகளாக கட்சிக்குள்ளிருந்த மூத்த நிர்வாகிகள் கூட்டணி கட்சி என பலவற்றை இழந்து வருகிறார். அதிலும் இவர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் இவருடன் கூட்டணி வைக்கலாம் என்று திட்டம் தீட்டிய பெரும்பாலானோர் அதனை கை விட்டுவிட்டனர். தற்போது திமுக-விற்கு எதிராக ஒரு அணியை திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அந்த சுற்றுப்பயணத்திற்கு திமுக கூட்டணி கட்சிகளான விசிக சிபிஎம் உள்ளிட்டவைகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஏனென்றால் இவர்கள் திமுகவுடன் கூட்டணியிலிருந்தாலும் மறைமுகமாக அவர்களை பற்றி சாடி பேசுவதுண்டு. அதனால் எடப்பாடி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்கள் கலந்துக்கொள்ள வில்லை. இதற்கு அடுத்ததாக ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கலந்துக் கொள்ள வேண்டும். அதில் தமிழக வெற்றிக் கழகம் அடங்கும் என கூறியிருந்தார். மேலும் நாம் தமிழருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தற்போது இது ரீதியாகத் தான் இடும்பாவனம் கார்த்திக் பேசியுள்ளார். அதில், அதிமுக கடந்த மக்களவை தேர்தலின் போதே இதேபோல அழைப்பு விடுத்தனர். ஆனால் அதனை ஏற்கவில்லை, திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். இவை இரண்டும் குட்டையில் ஊறிய மட்டைகள் தான் எனக் கூறினார். நாதக தனித்து தான் போட்டியிடும். அதேபோல விஜய்க்கும் பாஜக அல்லது அதிமுக வுடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணம் உள்ளது.

இதில் தமிழகத்திற்கு அதிமுக திமுக என இரு திராவிட கட்சிகளும் தமிழகத்திற்கு தேவையில்லை. மேலும் நாதக தனித்து தான் போட்டியிடும். அதனால் எடப்பாடி அழைப்புக்கு நாங்கள் செல்ல மாட்டோம் என நேரடியாகவே கூறியுள்ளார்.

வைகோவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாஞ்சில் சம்பத் சொன்ன செய்தியை கண்டு அதிர்ந்த அரசியல் களம்!

0

1993ஆம் ஆண்டு வைகோவின் பேச்சை பார்த்து அவருடன் தன்னை மதிமுக கட்சியில் இணைத்து கொண்டவர் நாஞ்சில் சம்பத். 2012 ஆம் ஆண்டு வரை வைகோவுடன் பயணித்தார் நாஞ்சில் சம்பத். பின்னர் 2012 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆரம்பம் முதலே வைகோவுடன் பயணித்ததால் வைகோவை பற்றிய எல்லா விஷயங்களும் நாஞ்சில் சம்பத்துக்கு அத்துப்படி.

அந்த வகையில் அண்மையில் வைகோவை பற்றி பேட்டி கொடுத்த நாஞ்சில் சம்பத் அவரை வெளுத்து வாங்கியுள்ளார். வைகோ பாஜகவிடம் விலை போய்விட்டார் என்றும், அவருடைய மகனுக்கு அமைச்சர் பதவி, 12 சீட்டுகள் பேசி முடிவெடுத்துவிட்டார் என்றும் பேட்டி கொடுள்ளார்.

தன்னுடைய மகன் துரை வைகோவிற்காக மதிமுகவை பாஜகவிடம் வைகோ அடகு வைத்துவிட்டார். மகனின் மந்திரி பதவி தான் முக்கியம் என்று வைகோ யோசித்துவிட்டார். வைகோவிடம் 10000 கோடி சொத்துக்கள் இருக்கிறது. கட்சிக்காக உழைத்தவர்களை விட மகன் தான் முக்கியம் என்கிற முடிவை வைகோ எடுத்துவிட்டார்.

வைகோவின் சுயநலத்தால் எல்லோரும் மதிமுகவை விட்டு விலகிவிட்டார்கள். மதிமுகவில் இருக்கும் உறுப்பினர்களை வெறும் ரெண்டு மினி பஸ்ஸில் ஏற்றிவிடலாம். மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் விரைவில் திமுகவில் சேர்ந்துவிடுவார், வைகோ மதிமுக கட்சிக்கு முடிவுரை எழுதிக்கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் கூடிய விரைவில் மதிமுகவில் உள்ள எல்லா உறுப்பினர்களும் தங்களை திமுக கட்சியில் இணைத்துக்கொள்வார்கள். அது தான் இங்க நடந்துகிட்டு இருக்கு என்று வைகோவையும், அவருடைய மகன் துரை வைகோவையும் வெளுத்துவிட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.

எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுங்கள்! எடப்பாடி அழைப்புக்கு சீமான், விஜய் கொடுத்த reaction இதுதான்!

0

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை எதிர்க்கட்சிகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. எடப்பாடி தன்னுடைய பங்குக்கு இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார். விஜய் கூடிய விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார். அன்புமணி ராமதாஸ் மக்களை சந்தித்து பொதுக்கூட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகிறார்.

தமிழகத்தில் திமுகவை ஆட்சியை விட்டு அகற்றவேண்டும் என்பதற்காக எல்லா எதிர்கட்சியினரும் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே ஆயத்தமாகிவிட்டன. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அண்மையில் திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டவேண்டும் என்றால் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், விஜய், சீமான் போன்றோர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்றும் நேரடியாகவே கூட்டணிக்கு அழைப்பு கொடுத்தார்.

இந்நிலையில் சீமான் நாங்கள் எப்பவும் போல தனித்தே போட்டியிடுகிறோம் என்கிற தொனியில் பேட்டி கொடுள்ளார். அதேபோல தவெக கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா அதிமுக கட்சியை சேர்ந்த நபர்கள் நிறைய பேர் எங்கள் கட்சியில் தங்களை ஏற்கனவே இணைத்துக்கொண்டார்கள். அதிமுக கட்சியில் ஆட்களே இல்லை. அதனால் தான் நாங்க எப்பவும் அதிமுகவை பற்றி விமர்சிப்பதில்லை என்று பேட்டி கொடுள்ளார்.

குரான் மீது ஆணையாக பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்றும், பாஜக கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று தவெகவின் அதிமுக நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக விலகிவிட்டார் ஆதவ் அர்ஜுனா. எடப்பாடி பழனிசாமி இப்படி வாய்விட்டு கூட்டணிக்கு அழைத்தும் இவர்கள் முரண்டு பிடிப்பது அதிமுகவினரை கடுப்பாக்கியுள்ளது.

மோசமான வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தும் இந்தியாவின் 10 மாநிலங்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

0

“காலி பந்த் கார் அபியான்” எனும் பிரச்சாரத்தை 2014 முதல் 2025 வரை Dr. சுனில் ஜாக்லான், தனது Selfie with Daughter Foundation மற்றும் மஹரிஷி தயானந்த் பல்கலைக்கழகம் மூலமாக நடத்தினார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது, இந்தியாவின் நகர மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் 70,000 பேர் – மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்தவர்கள், போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இவர்களிடமிருந்து வீட்டில் மற்றும் தினசரி வாழ்வில் மோசமான வார்த்தைகள் எவ்வளவு பயன்படுகின்றன என்பதைக் கண்டறியும் வகையில் தகவல் திரட்டப்பட்டது.

முக்கியக் கண்டுபிடிப்புகள்:

  • டெல்லி மாநிலம் 80% விகிதத்துடன் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதில் பெரும்பாலான மோசமான வார்த்தைகள் பெண்களைக் குறிவைத்து பயன்படுத்தப்படுகின்றன.

  • வடகிழக்கு மாநிலங்கள் 20% முதல் 30% வரை குறைவான விகிதத்தில் உள்ளன.

  • காஷ்மீர் மாநிலம் 15% விகிதத்துடன் மிகக் குறைவாகவே இருப்பதாக தெரியவந்தது.

  • ஆச்சரியமான விவரம்: பெண்கள் 30% விகிதத்தில் அவமானகரமான வார்த்தைகளை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

மோசமான வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தும் இந்திய மாநிலங்கள் – Top 10 பட்டியல்:

டெல்லி – 80%

துரிதமான வாழ்க்கை முறை, போக்குவரத்து நெரிசல், போட்டித் தன்மை போன்றவை மக்கள் மன அழுத்தத்தில் வாக்கியங்களை மூச்சுவிட முடியாத வார்த்தைகளால் நிரப்ப வைக்கும்.

பஞ்சாப் – 78%

பஞ்சாபியர்கள் துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் பேசும் பழக்கமுடையவர்கள். நண்பர்கள் மத்தியில் கூட, நகைச்சுவையோ, அன்போ அடங்கிய கெட்ட வார்த்தைகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

உத்தரப்பிரதேசம் – 74%

தொகுதிக் கூட்டங்கள், அரசியல் ரேலிகள், தெரு கலகங்கள் ஆகியவற்றில் அவமதிப்பு மொழி பாவனை அதிகம் உள்ளது.

பீகார் – 74%

பீகாரில், உணர்வுப் பார்வை மிகுந்த மக்கள் திறந்தவெளியில் சண்டை, விவாதங்களில் கெட்ட வார்த்தைகளை பொதுவாக பயன்படுத்துகிறார்கள்.

ராஜஸ்தான் – 68%

இங்கு சில கிராமப்புறங்கள் மற்றும் குடும்பச் சண்டைகளில், மிதமான கெட்ட வார்த்தைகள் சாதாரண உரையாடலில் கூட பாவிக்கப்படுகின்றன.

ஹரியானா – 62%

உடல், ஆண்மைத்தன்மை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாக கெட்ட வார்த்தைகள் பேசப்படுகின்றன. இது மாவட்ட வழக்குகள் மற்றும் மரபு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

மஹாராஷ்டிரா – 58%

மும்பை, புனே போன்ற நகரங்களில் பெரும் போக்குவரத்து, அழுத்தம், மற்றும் திட்டவட்டமான தெருவழக்கு மொழி காரணமாக இந்த வகை வார்த்தைகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

குஜராத் – 55%

பொதுவாகக் கோமாளித்தனமான, மிருதுவான பழக்கவழக்கங்களுடன் இருப்பினும், இளம் தலைமுறையினர், சமூக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு கலாசாரம் மூலம் பாட்டி பாணியை விரும்புகின்றனர்.

மத்திய பிரதேசம் – 48%

இங்கு உள்ள தொலைதூர கிராமங்கள் மற்றும் குறைந்த எழுத்தறிவுள்ள பகுதிகளில், அசம்பாவித வார்த்தைகள் பகிரங்கமாக பேசப்படுகின்றன.

உத்தரகாண்ட் – 45%

அமைதியான வாழ்வியல் கொண்ட மக்கள் வாழும் மாநிலமாக இருந்தாலும், குடியேற்றம், நகரமயமாக்கல் மற்றும் அண்டை மாநிலங்களின் கெட்ட வார்த்தைப் பயன்கள் காரணமாக இதிலும் சில அளவிலான தாக்கங்கள் உள்ளன.

காஷ்மீர் – 15% (மிகக் குறைவான பயன்பாடு)

காஷ்மீரில் மக்கள் மிகவும் மிருதுவாகவும் மரியாதையுடனும் பேசுகிறார்கள். மத அடிப்படையிலான ஒழுக்கம், குடும்பமைய வாழ்க்கைமுறை மற்றும் உணர்ச்சிப் கட்டுப்பாடுகள் இதற்குக் காரணம்.

இந்த பட்டியல் வெறும் விளம்பரப் பிரச்சனைக்காக அல்ல, மறுபக்கம் இது குடும்பங்களில் மற்றும் சமூகத்தில் மரியாதை மற்றும் மரபு மதிப்பை வலியுறுத்தும் நோக்கத்துடன் மென்மையான உரையாடலை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.

மென்மையாக பேசுதல் ஒரு மரியாதையும், நாகரிகத்தையும் பிரதிபலிக்கிறது!

மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்ட எடப்பாடி அதனை நிராகரித்த விஜய் வெளியான அதிரடி ட்வீட்!

0

சென்னை :இப்போது ஆளுங்கட்சியாக திமுக இருக்கும் நிலையில் கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகள்  போட்டியிடுகின்றன .மேலும் அதற்க்கான சுற்றுப்பயணகள் செல்வது மற்றும் மக்களை சந்திப்பது போன்ற வேலைகளையும் வெகு விரைவாக பார்த்து வருகின்றன.இவ்வாறு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  மக்களை சந்தித்த போது திமுகவிற்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என்று கூறியது நாம் அறிந்தவை .

 

அவமானம் தாங்கமுடியாமல் மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்த ராணுவ வீரர்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயகோபால். இவர் உத்தராகண்ட் மாநிலத்தில் ராணுவ எல்லை பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு ஜெர்மின் என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு அழகான இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்ததால் கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விஜயகோபாலுடன் வாழ பிடிக்கவில்லை என்று சொல்லி ஜெர்மின் விவாகரத்து கேட்டு ஜீவனாம்சம் விஜயகோபால் தரவேண்டும் என்று சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெர்மின் இரவு நேரத்தில் வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரவு நேரத்தில் முகத்தில் கருப்பு துணியை கட்டிகொண்டு வந்து ஜெர்மினை சரமாரியாக கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இந்நிலையில் ஜெர்மின் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் இந்த கொலையில் விஜயகோபாலுக்கு தொடர்புள்ளது என்று சொல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

பின்னர் உத்தராகண்டில் உள்ள விஜயகோபாலை சாயல்குடி வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை அளித்தார். என்னுடைய மனைவி என்னை விட்டு பிரிந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வருகிறார். சொந்தமாக நான் கட்டிய வீட்டையும் ஜெர்மனின் பெயரில் வீடு இருப்பதால் வீட்டை பிடிங்கிக்கொண்டார். அதேபோல விவாகரத்து கேட்டு மாதம் 17000 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று என் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார்.

என் மனைவி ஜெர்மினுக்கு ஊரில் பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பு உள்ளது. இதை எல்லாம் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்னுடைய குடும்பதிற்கு மிகப்பெரிய அவமானத்தை ஜெர்மின் ஏற்படுத்தி விட்டார். அதனால் தான் கூலிப்படையை அனுப்பி என்னுடைய மனைவியை கொலை செய்ய சொன்னேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் விஜயகோபால். சொந்த மனைவியை கணவர் கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவத்தால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி ஆகியுள்ளனர்.

கள்ளத் தொடர்பால் சிக்கி சீரழிந்த குடும்பம்! மருத்துவமனையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் கணவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தை கேள்விப்பட்டிருப்போம். கொலை செய்த கணவர் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். அவர் எதனால் தனது மனைவியை குத்தி கொலை செய்தார் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவர் சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்தபோது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

பின்னர் சென்னையில் ஒரு நபருடன் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் செய்து வந்துள்ளார். இதனை அறிந்த விஷ்ரூத் தனது மனைவியை கண்டித்து சென்னையில் இருந்து குளித்தலைக்கு கூட்டி வந்துள்ளார். குளித்தலையில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக சுருதி வேலை செய்து வந்துள்ளார். இங்கும் இன்னொரு நபருடன் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டு உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஷ்ரூத் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சிகிச்சை பெறுவதற்காக ஸ்ருதியை குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருந்தும் தன்னுடைய ஆத்திரம் தீராத விஷ்ரூத் மருத்துவமனைக்கே சென்று மனைவி சுருதி இறக்கும் வரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தாயும் இறந்து தந்தையும் போலீசாரால் கைது செய்யப்பட்டதால் குழந்தைகள் இருவரும் அனாதையாகி உள்ளனர். இந்த சம்பவம் குளித்தலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிவ் இன் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி! புதுப்பேட்டையில் பரபரப்பு!

0

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும், லோகராஜ் என்னும் நபருக்கும் 10 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்துள்ளது. அந்த நேரத்தில் வரதட்சணையாக 43 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கமாக பணம், பீரோ, கட்டில் மெத்தை போன்ற பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரதட்சணை கேட்டு கலைச்செல்வியை லோகராஜ் கொடுமை படுத்தியுள்ளார். இதனால் கணவரை பிரிந்து கலைச்செல்வி தனிமையில் வாழ்கிறார். இது சம்மந்தமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜீவனாம்சம் வேண்டும் என்று கலைச்செல்வி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் லோகராஜுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு புதுப்பேட்டையில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்துவந்துள்ளார். இந்த சம்பவத்தை பற்றி அறிந்த கலைச்செல்வி புதுப்பேட்டையில் உள்ள லோகராஜின் வீட்டுக்கு சென்று லோகராஜூவும், அவருடைய தொடர்பில் இருந்த பெண்ணும் இருந்த வீட்டை வெளியில் இருந்து பூட்டி பொதுமக்கள் மற்றும் போலீசாரை அழைத்து கூச்சல் போட்டுள்ளார்.

காதலியுடன் வீட்டில் தனிமையாக இருக்கும் நேரத்தில் மனைவி வந்து வீட்டை பூட்டியதால் லோகராஜ் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி விட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த கணவரை பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டார் கலைச்செல்வி. என்னுடன் விவாகரத்து வாங்காமல் இவர் எப்படி வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்த முடியும் என்று கேட்டு கலைச்செல்வி பிரச்சனை செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலைச்செல்வியை சமாதானம் செய்து அந்த இடத்தில இருந்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இஸ்லாமிய வாக்கு கிடைக்காது.. திமுக பக்கம் தாவிய அதிமுக மூத்த தலை!! திக்குமுக்காடும் எடப்பாடி!!

0

ADMK DMK: அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் தான் அன்வர் ராஜா. எம்ஜிஆர் இறந்த காலத்திலிருந்து கட்சியை விட்டு வெளியேறும் வரை அதிமுகவிற்கு பெரும் ஆதரவு கொடுத்துள்ளார். பல்வேறு சூழ்நிலைகளிலும் கட்சிக்கு பக்கபலகமாக இருந்துள்ளார். இவர் பாஜகவின் மத வேறுபாடு காரணமாக அதன் கூட்டணியை முழுமையாக எதிர்த்தார். இதனால் 2021 ஆம் ஆண்டு இவரை அதிமுகவில் இருந்தும் நீக்கினர். மேலும் எடப்பாடி தவிர்த்து சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல 2023 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தற்போது சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக பாஜக இணைந்துள்ள நிலையில் மீண்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியை விட்டு விலகிவிட்டார். பாஜகவின் மதப் பிரிவினை மையப்படுத்தி பல இஸ்லாமியர்கள் எதிர்ப்புதான் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அன்வர் ராஜா அதிமுகவை விட்டு வெளியேறி திமுகவுடன் இணைந்து கொண்டார்.

இவ்வாறு அவர் எதிர்க்கட்சியை நோக்கி பச்சை கொடி அசைத்து உள்ளது எடப்பாடிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இவருக்கு சிறுபான்மையினரின் வாக்குகளும் கிடைப்பதில் சற்று சந்தேகம் தான். இதனை சரி செய்யும் வகையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் கொடுத்த குல்லாவை வாங்கி அணிந்து கொண்டார். ஆனால் இப்படி ஒப்பேத்தி கொடுப்பதால் எதுவும் மாறப் போவதில்லை.

முன்னதாகவே பாஜக, கூட்டணி ஆட்சி என்று கூறி வருவதை கட்சி நிர்வாகிகள் முழுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்சமயம் அன்வர் ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வெளியேறுவது அதிமுகவை அதுல பாதாளத்திற்கு கொண்டு செல்லும்.