BLOOD SUGAR: தினமும் இந்த பானம் 100 மில்லி குடியுங்கள்!! இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வையுங்கள்!!
மன அழுத்தம்,அதிகளவு இனிப்பு உண்ணுதல்,முறையற்ற தூக்கம்,உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.உலகிலேயே இந்தியாவில் தான் இரத்த சர்க்கரை நோயாளிகள் அதிகளவு உள்ளனர் என்பது நிதர்சமான உண்மை.இந்த இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
வேம்பு ஜூஸ்
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை
2)தண்ணீர்
செய்முறை:-
ஐந்து கொத்து வேப்பிலையை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் இந்த வேப்பிலையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.இந்த ஜூஸை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வரவும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
துளசி + புதினா சாறு
தேவையான பொருட்கள்:-
1)துளசி
2)புதினா
3)தண்ணீர்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 1/4 கைப்பிடி அளவு துளசி மற்றும் 10 புதினா இலைகளை போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யவும்.
பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.இந்த சாற்றை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
இலவங்கம் + பட்டை பானம்
தேவையான பொருட்கள்:-
1)பட்டை
2)இலவங்கம்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு துண்டு பட்டை மற்றும் இரண்டு இலவங்கத்தை போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
வெந்தய பானம்
தேவையான பொருட்கள்:-
1)ஊற வைத்த வெந்தயம்
2)தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஊற வைத்து வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.