BODY PAIN: உடம்பில் உள்ள வலியை உடனே விரட்டும் எனர்ஜி மில்க்!! ஒரு டைம் குடித்தாலே போதும்!

Photo of author

By Divya

BODY PAIN: உடம்பில் உள்ள வலியை உடனே விரட்டும் எனர்ஜி மில்க்!! ஒரு டைம் குடித்தாலே போதும்!

மனிதர்களுக்கு உடல் உழைப்பு என்பது முக்கியமான ஒன்று.ஆனால் அளவிற்கு மீறிய உடல் உழைப்பால் உடல் வலி ஏற்படும் அபாயம் உள்ளது.இந்த உடல் வலியால் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் போய்விடும்.

உடல் வலி ஏற்படக் காரணம்:

*மன அழுத்தம்
*சர்க்கரை நோய்
*நிமோனியா
*காய்ச்சல்
*உடலில் திரவம் தேங்குதல்
*தூக்கமின்மை

இவ்வாறான உடல் வலியை விரட்டும் வீட்டு வைத்தியம் இதோ.இதை செய்தால் உடனே பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

1)ஜவ்வரிசி
2)பார்லி
3)கருப்பு உளுந்து
4)கருப்பு எள்
5)ஏலக்காய்

செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி,ஒரு தேக்கரண்டி பார்லி,ஒரு தேக்கரண்டி கருப்பு உளுந்து மற்றும் ஒரு தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து மிதமான தீயில் வறுத்தெடுக்கவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும்.பின்னர் அதில் ஒரு முழு ஏலக்காய் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி 2 நிமிடங்களுக்கு சூடாக்கவும்.பிறகு அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பாலை ஒரு கிளாஸில் ஊற்றி சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டால் சில மணி நேரத்தில் உடலிலுள்ள வலிகள் மாயமாகி விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:

1)பட்டை
2)மஞ்சள்
3)சுக்கு
4)பால்
5)தேன்

செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு துண்டு பட்டை மற்றும் ஒரு துண்டு தோல் நீக்கிய சுக்கு சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வறுத்து ஆறவிட்டு பொடியாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த பொடி மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்தால் உடல் வலி முழுமையாக குணமாகும்.