முதல்வருக்கு வாட்ஸ் அப்பில் வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ச்சியில் கட்சி தலமையகம்!
கடந்த மாதம் ஜூலை 21 ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் விமானம் ஒன்று பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாராகியது . அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அனைவரையும் மிரட்டினார். அதனையடுத்து விமானம் பாதுகாப்பாக தர இயக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் ஆகியவர்கள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தார்கள். மேலும் வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் அந்த வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து வெடிகுண்டு வதந்தியை கிளப்பிய பயணி கைது செய்யப்பட்டார். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவு வெளியானது.
இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ் அப் உதவி எண்ணிற்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. இன்னும் மூன்று நாட்களுக்குள் உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கு வெடிகுண்டு வைக்கப் போகிறோம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது என காவல்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பல துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர்.