எலும்புக்கு வலிமை சேர்க்கும் உளுத்தம்மாவு புட்டு – எப்படி சுவையாக செய்வது?

Photo of author

By Gayathri

எலும்புக்கு வலிமை சேர்க்கும் உளுத்தம்மாவு புட்டு – எப்படி சுவையாக செய்வது?

உளுத்தம் பருப்பில் நிறைய நார்ச்சத்து உள்ளது. மேலும் அதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். உளுத்தம் பருப்பை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும்.

சரி வாங்க… எப்படி உளுத்தம் பருப்பை வைத்து புட்டு செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு (வறுத்தது) – 2 கப்

தண்ணீர் (கொதித்தது) – தேவைக்கேற்ப

உப்பு – தேவையான அளவு

உளுத்தம் மாவு (வறுத்தது) – கால் கப்

தேங்காய்த் துருவல் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வறுத்த உளுத்தம் மாவு, வறுத்த கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து, அதில் கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீர் சேர்த்து பிசைய வேண்டும்.

பின்னர், பிசைந்த மாவை மிக்ஸியில் போட்டு ஒரு சுழற்று சுழற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாவில் தேங்காய்த் துருவல் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இதை இட்லி தட்டிலிட்டு 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சத்தான உளுத்தம் மாவு புட்டுரெடியாகிவிடும்.