ஓடிடியில் வெளியாக போகின்ற “போர் தொழில்”!! ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரசிகர்கள்!!
அசோக் செல்வன் அவர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் சுமாரன படங்களில் நடித்து வந்தாலும் கால போக்கில் நல்ல பட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
அந்தவகையில் இப்பொழுது அவர் மிகவும் விறுவிறுப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.அவர் நடிப்பில் வெளியான திரில்லர் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அவர் எடுக்கும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பு பெருகின்றதா என்று முனைப்புடன் செயல்படுகிறார். இப்பொழுது அவருக்கென்றே பலர் ரசிகர்களை தன் பக்கம் வைத்து உள்ளார்.
அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளிவந்த படம் போர்த் தொழில் என்ற திரில்லர் படம் வெளிவந்தது.இதனை விக்னேஷ் ராஜா இயக்கினார். இந்த படத்தில் சரத்துகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கொலை செய்யக்கூடிய ஒரு திரிலர் படமாகவே எடுக்கப்பட்டது. இப்பொழுது அசோகக் செல்வன் தேர்தேடுக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறுகின்றது.அதனால் அவர் இப்பொழுது தேர்தேடுக்கும் காதபாத்திரத்தில் மிகவும் கவனத்துடன் இருக்கிறார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் போர் தொழில் இந்த படம் வெளிவந்து இன்றுடன் 50 வது நாளை கடந்து உள்ளது. மேலும் உலகளவில் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்ய உள்ளது. இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய போர் தொழில் திரைப்படம் தற்பொழுது ஆகஸ்ட் 11 ம் தேதி ஓடிடியில் வெளியாக போகின்றது.இந்த தளத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படமும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.