மயிலாடுதுறையில் சிறுவன் அடித்து கொலை! ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்

மயிலாடுதுறையில் சிறுவன் அடித்து கொலை! ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கும் மங்கநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையேயான தண்டவாளத்தில் காயங்களுடன் மூவலூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜ்குமார்(20)என்பவர் இறந்து கிடந்தார்.

அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற ராஜ்குமார் இரவு வீடு திரும்பவில்லை.  மறுநாள் காலை அவர் தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த விசாரணையில் கபிலர் என்பவரும் ,17 வயது சிறுவன் ஒருவரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது . அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கபிலரும் பள்ளி மாணவரும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாகவும்  ராஜ்குமாரையும் ஈடுபட வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ராஜ்குமாரை மஞ்சளாறு பாலத்தின் தண்டவாளத்திற்கு  அழைத்து சென்று மதுவை ஊற்றி கொடுத்து அதிக போதைக்கு உள்ளாக்கி உள்ளனர்  அச்சமயத்தில் அவரின் ஆடைகளை கழற்றிவிட்டு ஓரின சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர் .

அப்போது அங்கு இருந்து ராஜ்குமார்  தப்பிக்க முயன்ற போது, கபிலர் பீர் பாட்டிலால் ராஜ்குமார் தலையில் அடித்தும் கல்லால் அடுத்தும் துன்புறுத்துயுள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் இறந்து விட்டார்.

உடனே இவர்கள் இருவரும் ராஜ்குமார் உடலை தண்டவாளத்தில் தூக்கிபோட்டுவிட்டு, ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டதாக பொய்கூறினர். போலிசாரின் விசாரணையின் போது இவர்களின் நாடகம் வெளியானது.  அதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Comment