விவசாயிகளுக்கு மத்திய அமைச்சரவை அளித்த மகிழ்ச்சியான அறிவிப்பு

0
56
ஒரே நாடு ஒரே உரம் திட்டம்
ஒரே நாடு ஒரே உரம் திட்டம்

விவசாயிகளுக்கு மத்திய அமைச்சரவை அளித்த மகிழ்ச்சியான அறிவிப்பு

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மானிய விலையில் உரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரே நாடு ஒரே உர திட்டத்தின் மூலம் மானிய விலையில் உரம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் மானிய விலையில் உரம் வழங்க ரூ .51,875 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

2023 மார்ச் 31 ஆம் தேதி வரை மானிய விலையில்  உரம் வழங்கப்படும் என பாரத பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் என்பிகே  போன்ற எல்லா உர நிறுவனங்களும் பாரத் என்ற பொது பெயரில்தான் உரத்தை விற்க  வேண்டும்.  மேலும் உர மானியத் திட்டத்தை குறிக்கும் முத்திரை பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஊர்வரக் பரியோஜனா என்ற முத்திரைதான் உர மூட்டைகளில்  பயன்படுத்தவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் நிறுவனங்கள் தங்கள் பெயர் பிராண்ட் மற்றும் பிற தொடர்புடைய தயாரிப்பு தகவல்களை தங்கள் பைகளில் மூன்றவாது பட்டியில் மட்டுமே காட்ட அனுமதிக்கப்படுகிறது.