சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்! போலிசார் விசாரணை!

Photo of author

By Parthipan K

கோயம்புத்தூர்,தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்த காமாட்சி-பிங்கி தம்பதியினர்க்கு 4 வயதில் கபிலேஷ் என்ற மகன் இருந்தார்.

காமாட்சி-பிங்கி இவர்களின் திருமணம் காதல் திருமணமாகும்.பிங்கி அசாம் பகுதியை சார்ந்த பெண் ஆவார்.
திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கிடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது,இதனால் பிங்கி கணவர் காமாட்சியிடமிருந்து பிரிந்து லிங்கேஷ் என்பவருடன் வடவள்ளி எனும் பகுதியில் கடந்த 6 மாதமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

கபிலேஷ் தன்னுடைய தாயுடனே வாழ்ந்து வந்து இருக்கிறான்,நேற்று கபிலேஷ் க்கு மூச்சு திணறல் ஏற்பட,உடனே அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு தீவிர சிசிக்கையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைப் பலனின்றி பலமணி நேரப் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தார்.சாப்பிடும் போது
சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கியதால் தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், உயிரிழந்தாகவும் தகவல் கூறப்பட்டது.

இதன் பின்,மருத்துவமனைக்கு வந்த சிறுவனின் தந்தை காமாட்சி இந்த மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக கூறி அருகே உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளார்,இதனையடுத்து விசாரணையில் ஈடுப்பட்ட போலிசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுவனின் உடலை தந்தை காமாட்சியிடம் ஒப்படைத்து, இதுகுறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.