Brain Booster: அடி முட்டாளையம் பயங்கர புத்திசாலியாக மாற்றும் ஊட்டச்சத்து பால்! இதை எப்படி தயாரிப்பது?

Photo of author

By Divya

Brain Booster: அடி முட்டாளையம் பயங்கர புத்திசாலியாக மாற்றும் ஊட்டச்சத்து பால்! இதை எப்படி தயாரிப்பது?

நமது உடலில் மூளை முக்கிய உள்ளுறுப்பாகும்.அதை கூரிமையாக வைத்துக் கொள்ள அனைவரும் விரும்புவார்கள்.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் சிந்தனைகள் தெளிவாக இருக்கும்.

நம் உடல் இயக்கம்,சிந்தனைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்.ஆனால் தெளிவற்ற சிந்தனைகளால் நாம் சில செயல்களை செய்யும் பொழுது நம்மை முட்டாள் என்று பிறர் அழைக்கிறார்கள்.இதற்கு காரணம் நம் மூளை சரியாக வேலை செய்யாதது தான்.

மூளையில் பெரு மூளை,சிறு மூளை என இரு வகைகள் இருக்கிறது.நாம் செய்யக் கூடிய அனைத்து விஷயங்களும் மூளையின் கட்டளையால் நடக்கிறது.அப்படி இருக்கையில் நம் மூளையை கூர்மையாகவும்,ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்ற வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)பால்
2)வால்நட்
3)மஞ்சள் தூள்

செய்முறை:-

5 வால்நட்டை வாணலியில் போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் அரைத்த வால்நட் பொடி மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இனிப்பு சேர்க்காமல் குடிக்க வேண்டும்.

வால்நட்: இதில் அடங்கியிருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம்,வைட்டமின் ஈ,ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மூளையில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மஞ்சள்: இதில் இருக்கின்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மூளை செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது.நினைவாற்றலை பெருக்க உதவுகிறது.