#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை கன்பார்ம் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
334
#BREAKING: Rain forecast for next 3 days in Tamil Nadu - Chennai Meteorological Center informs!!
#BREAKING: Rain forecast for next 3 days in Tamil Nadu - Chennai Meteorological Center informs!!

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை கன்பார்ம் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கோடை காலம் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது.கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் படு பயங்கரமாக உள்ளது.கடும் வெயிலால் முக்கிய நீர் நிலைகள் வற்றத் தொடங்கி விட்டது.

இதனால் பெரும்பாலான இடங்களில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கி விட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் மழை குறித்து புதிய அப்டேட் ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கிறது.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் நாளை(ஏப்ரல் 21) முதல் செவ்வாய்(ஏப்ரல் 23) வரை தென்காசி,திருநெல்வேலி,விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருதப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை தெரிவித்துள்ளது.

Previous articleஆபரண தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! கோல்ட் வாங்க இது தான் சரியான நேரம்!!
Next articleஅமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..??