BREAKING: மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ் பள்ளிகள் விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது.
இன்புளூயன்சா ஏ வைரஸ் இன் துணை வகையானா இந்த வைரஸ் எச்3என்2 என கூறப்படுகின்றது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயது உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல புதுவையில் புதிய வைரஸ் பரவல் காரணமாக தற்போது சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வைரஸ் பரவலால் மாணவ மாணவிகள் காய்ச்சலால் அதிக அளவு பாதிக்கப்படுவதால் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும் என நேரு எம்எல்ஏ சட்டசபையில் வலியுறுத்தினார்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்பப்பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரை 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது என சட்டசபையில் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வு வரும் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதினால் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ஆம் தேதி வரை இறுதித் தேர்தல் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே 25ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை வைரஸ் தொற்று பாதிக்காத வகையில் இருக்கவே இந்த கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.