அதிகரிக்கும் இன்புளுயன்சா!! கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழ்நாடு மருத்துவ துறை!!
நாடு முழுவதும் தற்போது இன்புளூயன்சா எச்3என்2 என்ற வைரஸ் மூலம் காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த புதிய வகை வைரஸ் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயது மேற்பட்ட முதியோரை அதிகம் தாக்கும் என்ற தகவலால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சலால், நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 7 பேர் மரணித்துள்ளனர். இந்த மரணங்களையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
தமிழகத்தையும் விட்டுவைக்காத இந்த இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ், தற்போது பரவி வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது.
இதனிடையே இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை, பொதுமக்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என, தமிழ்நாடு மருத்துவ மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இன்புளூயன்சா எச்3என்2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருந்தால், அவர்கள் கட்டாயம் ஆர்டிபிசி என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும், காய்ச்சல் பாதிப்பு உள்ள நபர்கள் தங்களை தாங்களே ஏழு நாட்களுக்கு தனிமை படுத்தி கொள்ள வேண்டும், அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த எச்3என்2 வைரஸால் பாதிப்பிற்குள்ளான நபர்களுக்கு, லேசான இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பின் அவர்களை ஏ என்றும், தீவிர காய்ச்சல் மற்றும் இரும்பல் இருப்பின் அவர்களை பி வகை என்றும் கூறப்படுகிறது.
இந்த இன்புளூயன்சா எச்3என்2 வைரஸில் சி வகையில் அதிகப்படியான தொண்டை வழி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம், ரத்த அழுத்த குறைபாடு, தீவிர நெஞ்சு வலி, உடையவர்களுக்கு கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், குழந்தைகளுக்கும் இதே போல இருந்தால் அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மற்றும் ஆய்வகங்களில் பணிபுரிவோர், கட்டாயம் என் 95 என்ற அணிய வேண்டும் எனவும், மற்ற பொதுவான நபர்கள் மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட முக கவசத்தை அணியலாம் என்றும்.
அணைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் ப்ளு காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் எனவும், குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள், பலவகையான இணை நோய் உள்ளவர்கள், 65 வயதிற்கு மேற்பட்ட வயதானோர், அதே போல் 8 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள், இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.