Breaking: கள்ளத்தனமான மது விற்பனை!! எனக்கு ஆதரவே அமைச்சர் தான்.. போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகி!!
தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி முதல்வர் குடும்பத்திற்கே அதிக அளவு வருமானத்தை ஈட்டி தருவது இந்த ஒயின் ஷாப் தான். அந்த வகையில் இத்துறையின் பொறுப்பில் இருக்கும் செந்தில் பாலாஜி மாதந்தோறும் தவறாமல் ஸ்டாலின் குடும்பத்தினரிடம் கணக்கை சொல்லி வருமானத்தையும் ஒப்படைத்து விடுகிறாராம். இதனால்தான் செந்தில் பாலாஜி மீது எந்த ஒரு புகார் வந்தாலும் மேலிடம் அதனை கண்டு கொள்வதில்லை. மற்ற நிர்வாகிகளை காட்டிலும் இவர் கணக்கு காட்டுவதில் புள்ளியாக இருப்பதால், இவர் மேல் நல்ல அபிப்பிராயம் உள்ளதாம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உரிமம் இல்லாத நடத்தப்படும் மதுபான கடைகள் மூலம் இவர் ஆதரவுடன் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி இவ்வாறு உரிமம் இல்லாத கடைகளில் மதுபானம் விற்பனை நடத்துவதற்கு அந்த ஊர் போலீசாரும் துணை நிற்கின்றனர்.அவர்களையும் திருப்தி படுத்தம் அளவிற்கு இதற்கென்று ஓர் குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது.அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் மதுபான கடை ஒன்று உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது. இதனை அந்த உள்ளூர் காவல்துறை கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் தனிப்படை போலீசார் அக்கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர் ஆய்வு மேற்கொண்டதில் மதுபான கடையானது உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அக்கடையில் மதுபானம் விற்று வந்த பரிமளம் என்ற நபரை போலீசார் கைது செய்ய முற்பட்ட பொழுது, அங்கு திமுக நிர்வாகி ஒருவர் வந்து காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். காவல்துறை அதிகாரி கைது செய்ய முயன்ற அக்கடை வியாபாரியை, இந்த திமுக நிர்வாகி கைது செய்யக்கூடாது எனக்கு அமைச்சர் வரை ஆள் இருக்கு என மேற்கொண்டு தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்தார். பின்பு போலீசார் அந்த மது வியாபாரியை விட்டு விடக் கூடாது என்பதற்காக அவரது சட்டையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
இதனை கண்ட திமுக நிர்வாகி மதியழகன், அந்த போலீசாரை செருப்பைக் காட்டி மிகவும் கொச்சையாக பேச ஆரம்பித்து விட்டார். உடனடியாக உடனிருந்த ஒரு போலீஸ் அதிகாரி அவர் பேசியதை வீடியோ எடுக்க ஆரம்பித்தார். இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட திமுக நிர்வாகி மதியழகன் உடனடியாக அந்த மதுபான விற்பனையாளரை அடிப்பது போல் நாடகமாட தொடங்கினார். மேற்கொண்டு மதுபானம் விற்று வந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேற்கொண்டு தனிப்படை போலீசாரை அவதூறாக பேசிய திமுக நிர்வாகி மதியழகன் மீது புகார் அளித்தும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தற்பொழுது வரை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.