முன்னோர்கள் பயன்படுத்திய நீங்கள் மறந்து போன இந்த கஞ்சியை தினமும் குடித்தால் இத்தனை நன்மைகளா? 

0
229
#image_title

முன்னோர்கள் பயன்படுத்திய நீங்கள் மறந்து போன இந்த கஞ்சியை தினமும் குடித்தால் இத்தனை நன்மைகளா? 

நமது முன்னோர்கள் குடித்து வந்த இந்த கஞ்சியை தினமும் குடிப்பதால் நமக்கு இழந்து போன சக்திகள் மீண்டும் கிடைப்பதோடு கெட்ட கொழுப்புகள் குறைந்து நல்ல கொழுப்புகள் அதிகரித்து உடல் எடை கணிசமான அளவில் குறையும்.

குடல் ஆரோக்கியமாக செயல்பட்டு செரிமான பிரச்சனைகள் வரவே வராது. சிறுநீரக பிரச்சினை, மற்றும் தண்ணீர் தாகத்தை குறைக்கும். உடல் சூட்டை குறைக்கும். எலும்புகளை வலிமையாக்கும். மூட்டு வலி, எலும்பு தேய்மானம் இதெல்லாம் வரவே வராது. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் என அனைவருக்கும் மிகவும் நல்லது.

இத்தகைய ஆரோக்கியம் வாய்ந்த பானத்தை செய்முறையை பார்ப்போம்.

** அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் பார்லி அரிசியை சேர்த்து வறுக்கவும். அதில் மேலும் 10 மிளகு சேர்த்து நன்கு வறுத்து ஆற விடவும்.

** நன்கு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நன்கு பவுடராக்கி காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

** அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். 2 பல் பூண்டினை தோல் நீக்கி துண்டாக்கி போடவும். அடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அரைத்து வைத்த பார்லி பவுடரை சேர்த்து,  தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கி ஒரு டம்ளரில் ஊற்றி பருகலாம்.