Holiday: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு!!
சேலம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. பல ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. இந்த வருடம் திருப்பணிகள் நடைபெற்று நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் கோவிலில் கொடிமரம் ஏற்றி பிரதிஷ்டை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரமாக வெள்ளிக் கவசத்தில் தோற்றமளித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அருகில் இருக்கும் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது.
நேற்று அம்பாள் கண் திறப்பு வழிபாடானது நடைபெற்றது. இன்று 11 மணிக்குள் கோபுரங்களில் கலசங்கள் பொருத்தப்பட்டு விடும், நாளை அதிகாலையிலேயே கால பூஜை நடைபெற்று கும்பாபிஷேக விழா தொடங்கும் என கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர். குறிப்பாக காலை 8 மணிக்குள்ளேயே கும்பாபிஷேகம் விழா நடைபெற்று முடிந்து விடும் என தெரிவித்துள்ளனர்.
மேற்கொண்டு இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வதால் எந்த ஒரு அசாம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க காவல்துறை உள்ளிட்ட பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பல ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்த குடமுழுக்கு விழாவால் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மக்கள் பலர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நாளை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி குடமுழுக்கு விழாவால் சேலம் மாநகரில் போக்குவரத்திலும் மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.