3 வது நாள் பாரா ஆசியப் போட்டி!!! தங்கம் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்!!! 

0
37
#image_title
3 வது நாள் பாரா ஆசியப் போட்டி!!! தங்கம் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்!!!
மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனா நாட்டின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகின்றது. மூன்றாவது நாளான நேற்று(அக்டோபர்25)  ஈட்டி எறிதல், ஆண்களுக்கான 1500 ஓட்டம், பெண்களுக்கான 1500.மீட்டர் ஓட்டம் ஆகிய விளையாட்டுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.
அதன்படி ஈட்டி எறிதல் 64 எப் பிரிவில் இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் சுமித் அன்டில் அவர்கள் 73.29 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இந்த போட்டியின் மூலமாக தன்னுடைய உலக சாதனையான 70.83 மீட்டர் என்ற சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்தார். தங்கம் வென்ற சுமித் அன்பில் அவர்கள் கடந்த 2015ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் முட்டிக்கு கீழ் உள்ள கால் பகுதியை இழந்தவர் ஆவார்.
மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் அவர்கள் ஈட்டி எறிதல் 64 எப் பிரிவில் 62.06 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இதன் மூலமாக புஷ்பேந்திர சிங் அவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதே போல இந்தியாவை சேர்ந்த சுந்தர் சிங் குர்ஜார் அவர்கள் ஈட்டி எறிதல் 46எப் பிரிவில் கலந்து கொண்டு 68.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். இதன் மூலம் சுந்தர் சிங் குஜ்ஜார் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இந்தியாவை சேர்ந்த கிழங்கு மற்றும் அஜீத் சிங் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
இதே போல ஈட்டி எறிதல் 37/38 பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஹானே 55.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். இதன் மூலம் ஹானே தங்கப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த அன்குர் தாமா அவர்கள் கலந்துகொண்டு 4 நிமிடம் 27.70 விநாடிகளில் 1500 மீட்டர் தூரத்தை கடந்தார். இதன் மூலம் முதலிலடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் அன்குர் தாமா அவர்கள் ஏற்கனவே 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றிருந்தார். இதன் மூலமாக ஒரே ஆசியப் போட்டியில் இரண்டு தங்கம் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதே போல பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவை சேர்த்த வீராங்கனை ரக்சிதா ராஜூ அவர்கள் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தையும் வீராங்கனை கிலகா லலிதா அவர்கள் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
மூன்றாவது நாள் முடிவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டியின் பதக்கம் பட்டியலில் இந்தியா 15 தங்கம், 20 வெள்ளி, 29 வெண்கலம் என்று மொத்தமாக 64 பதக்கங்களுடன் 6வது இடத்தில் உள்ளது.  சீனா 118 தங்கம் உள்பட 300 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.