குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரக்க வில்லையா!! அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

0
41

குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரக்க வில்லையா!! அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்க இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலர் அவர்களுக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடுவார்கள். இதனால் தாய்ப்பால் குறைவாக சுரக்கும். மேலும் தாய்ப்பால் கெட்டியாவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதை சரி செய்வதற்கு சில தாய்மார்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு ஆங்கில மருந்துகள் இல்லாமல் இயற்கையான முறையில் எவ்வாறு தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தாய்ப்பால் அதிகமாக சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்…

* தாய்ப்பால் சுரப்பை அதிகமாக்க வெந்தயம் சிறப்பான மருந்து பொருள் ஆகும். வெந்தயத்தை பெண்கள் குழந்தை பிறப்பதற்கும் குழந்தை பிறந்த பின்னரும் தாய்மார்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

* தாய்ப்பாலை அதிகமாக்கும் பொருள்களில் வெற்றிலை சிறப்பான ஒரு பொருள் ஆகும். இந்த வெற்றிலைகளை நெருப்பில் காட்டி அதை மார்பகங்களில் வைத்து கட்டினால் தாய்ப்பால் சுரக்கும்.

* தாய்ப்பால் அதிகமாக சுரக்க பாகற்காயின் இலைகளை அரைத்து மார்பகங்களில் பற்று போட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* ஆலம் விழுது மற்றும் ஆழம் விதை இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு அதை பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

* அருகம் புல் சாறு எடுத்து அதனுடன் தேனை கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

* தாய்மார்கள் அனைவரும் பாதம் பருப்பை தொடர்ந்து உண்ண வேண்டும். பாலுட்டும் தாய்மார்களுக்கு பாதம் சிறந்த உணவுவாகும்.

* அதிக மருத்துவ குணம் கொண்ட பூண்டை பாலூட்டும் தாய்மார்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

* முருங்கைக் கீரையை தாய்மார்கள் அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகளவு சுரக்கும்.

* குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் 5 அல்லது 6 கப் பால் குடிக்க வேண்டும். இதன் மூலமாகவும் தாய்ப்பால் அதிகளவு சுரக்கும்.