ஐந்து நிமிடத்தில் மூச்சுப்பிடிப்பு முதுகு வலி இடுப்பு வலி தீர்வு! வீட்டிலே செய்யலாம் உடனே ட்ரை பண்ணுங்க!
பலர் மூச்சுப்பிடிப்பு முதுகு வலி வாயு தொல்லையால் அவதிப்படுவர். இதற்கு பல மருந்து மாத்திரைகளை எடுத்தும் எதுவும் அவர்களுக்கு பயன் அளிக்காது. அவர் இருப்பவர்கள் இதனை வீட்டிலேயே செய்து பார்க்கலாம் ஐந்து நிமிடத்திலேயே உடனடி தீர்வு கிடைக்கும். சிலர் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் பொழுது முதுகில் அப்படியே மூச்சு பிடித்துக் கொள்ளும். இவ்வாறு பிரச்சனை சந்திப்பவர்கள் இதனை பின்பற்றலாம்.
தேவையான பொருட்கள்:
சாதம் வடித்த கஞ்சி -2ஸ்பூன்
சுக்கு அல்லது சுக்கு பொடி அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி அரை ஸ்பூன்
கற்பூரம் சிறிதளவு
செய்முறை:
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் ஓர் இருக்க தன்மையை கொடுக்கும். மூச்சு பிடிப்பு அதிகமாக உள்ள இடத்தில் தடவினால் அதற்கு உடனடி நிவாரணமாக இருக்கும்.
எடுத்துக்கொண்டு பொருட்களை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதனை ஓர் பாத்திரத்திலோ அல்லது கரண்டியிலையோ மாற்றி அடுப்பில் மிதமான தீயில் சூடு படுத்த வேண்டும். சிறிது நேரத்திலேயே அது சூடாகி அதிலிருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்.
அச்சமயத்தில் அடுப்பை அணைத்துவிட்டு அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மூச்சுப்பிடிப்பு எந்தப் பகுதியில் உள்ளது எடுத்துக்காட்டாக முதுகில் என்றால், அங்கு இதனை தடவ வேண்டும். கை பொறுக்கும் சூட்டில் தடவ வேண்டும்.
ஆறவிட்டு தடவக்கூடாது. பத்து நிமிடம் கழித்து ஒரு துணியை வைத்து நம் போட்ட அந்த பேஸ்ட்டை துடைத்துக் கொள்ளலாம்.இது தசையை பிடித்து சிறிது சிறிதாக இருக்கத்தை விட செய்யும். இதனால் தசைப்பிடிப்பு விரைவிலேயே குணமாகும்.