25 விழுக்காடு மட்டுமே இயங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

Photo of author

By Parthipan K

நோய்ப்பரவல் காலத்தில் விமானப் பயணங்கள் குறித்த அச்சத்தால் வழக்கநிலை திரும்பும் அறிகுறிகள் தென்படவில்லை என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் குருஸ் தெரிவித்தார். பிரிட்டிஷ் ஏர்வேஸ்  நிறுவனம், அடுத்த சில மாதங்களுக்குத் தாக்குப்பிடிக்க, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் விமானச்சேவையில் 25 விழுக்காடு மட்டுமே இயங்குவதால் பல்லாயிரம் வேலைகளை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாய் அவர் கூறினார். நிறுவனத்தின் 100 ஆண்டு வரலாற்றில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான நெருக்கடி இது என்று குறிப்பிட்ட திரு அலெக்ஸ், நிறுவனத்தைக் காப்பாற்ற அரும்பாடுபடுவதாகக் கூறினார்.