என்ன பட்ஜெட் போட்டிங்க..? தமிழ்நாட்டுக்கு கால்கிலோ அல்வாதானா! ஸ்டாலின் விமர்சனம்..!!

0
144

என்ன பட்ஜெட் போட்டிங்க..? தமிழ்நாட்டுக்கு கால்கிலோ அல்வாதானா! ஸ்டாலின் விமர்சனம்..!!

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து, திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பற்றிய தகவலை அச்சேற்றும் பணிகள் சில தினங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதியமைச்சக ஊழியர்களுக்கு அல்வா கொடுத்து தொடங்கி வைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எந்த பயனும் இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்துவது போல் உள்ளது என்றும், வேலைவாய்ப்பு இன்மை, பொருளாதார தேக்க நிலை மற்றும் கிராமப்புற வளர்ச்சி உட்பட நாட்டின் எந்த பிரச்சினைகளைப் பற்றியும் கொஞ்சம் கூட கவலைப்படாத நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது என்றும் சாடினார்.

மேலும், பாஜக விரும்புகின்ற இந்து கலாச்சாரத்தை திணிக்கும் வகையில் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பட்ஜெட் பற்றிய ஸ்டாலின் பேச்சானது, எதுவுமே இல்லையே அப்போ கால்கிலோ அல்வாதானா என்று காமெடியாக சொல்வது போல் இருந்தது. இதைப்போலவே, பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கான எந்த திட்டமும் இல்லை எனவும், பழைய அறிவிப்புகளை புதியது போன்று உள்ளதாகவும், எல் ஐ சி பங்குகளை விற்பது குறித்து பெரிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வருமான வரி குறைப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதால் அதை வரவேற்கிறேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். பட்ஜெட்டுக்கான மதிப்பெண் 1 லிருந்து 10  வரை அளிப்பதாக இருந்தால், எத்தனை தருவீர்கள் என்ற கேள்விக்கு 1 லிருந்து 0 வரை ஏதாவது மதிப்பு இருந்தால் நீங்களே போட்டுக் கொள்ளலாம் என்று கிண்டலாக தெரிவித்தார்.

Previous articleநஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபிஸ் ரூம் வரவும்:ரஜினிக்காக அழகிரி டிவீட்!
Next articleகோலிக்குப் பதில் ரோஹித் ஷர்மா:மீண்டும் அணியில் பண்ட்!மாற்றங்களோடு களமிறங்கும் இந்தியா !