வெட்டி வீசும் மாம்பழத்தோல் இப்படியெல்லாம் பயன்படுமா?

0
171
#image_title

வெட்டி வீசும் மாம்பழத்தோல் இப்படியெல்லாம் பயன்படுமா?

மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு பெரும்பாலான மக்கள் மாம்பழத்தின் தோலை மட்டும் தூக்கி எறிந்து விடுவார்கள். இவ்வாறு தூக்கி எறியப்படும் இந்த மாம்பழத் தோலில் எத்தனை மருத்துவ குணங்கள் உள்ளது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

வெயில் காலம் வந்துவிட்டதால் மாம்பழ விற்பனையும் அதிகமாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் மாம்பழத்தை அதிகம் விரும்பி உண்பவர்களை விட மாம்பழத்தை உண்ணாதவர்கள் கூட மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு மாம்பழத்தை மட்டும் தின்றுவிட்டு அதன் தோலை எறிந்து விடுவார்கள். இந்த தோலில் எவ்வளவோ மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை சிலர் மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த பதிவில் தூக்கி எறியப்படும் மாம்பழத் தோலில் உள்ள சில மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம்.

மாம்பழத்தோலின் நன்மைகள்

முகத்தின் சுருக்கங்களில் இருந்து நிவாரணம்:

முகத்தில் சுருக்கங்களால் அவதிப்படுபவர்களுக்கு மாம்பழத் தோல் சிறந்த ஒரு மருந்து. அதற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்றால் முதலில் மாம்பழத் தோலை நன்றாக உலர வைக்க வேண்டும். அதன் பிறகு நன்றாக அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். இவ்வாறு சொய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து முகம் பொலிவாக மாறும்.

புற்று நோயை குணப்படுத்தும் மருந்து

மாம்பழத் தோலும் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்துகளில் ஒன்று. புற்று நோயை குணப்படுத்தும் இயற்கையான கூறுகள் மாம்பழத் தோலில் காணப்படுகிறது. மாம்பழத் தோலை சாப்பிடும்போது உடலில் உள்ள இறந்த செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. இது உடல் எடையை குறைக்கவும் உதவி செய்கின்றது.

இயற்கையான உரம் மாம்பழத் தோல்

மாம்பழத் தோலில் தாமிரம், ஃபோலேட், விட்டமின்கள் பி6, சி, ஏ ஆகியவை அதிகமாக உள்ளது. இந்த சத்துகளுடன் தாவரங்களுக்கு கிடைக்கும் நார்ச்சத்துகளும் மாம்பழத் தோலில் உள்ளது. மேலும் மாம்பழத் தோலை கரிம உரமாகவும் பயன்படுத்தலாம்.

முகத்தில் உள்ள பருக்களை போக்க

நமது முகத்தில் உள்ள பருக்களை போக்கவும் மாம்பழத் தோல் உதவியாக இருக்கின்றது. பருக்கள் மறைய மாம்பழத் தோலை அரைத்து பேஸ்டாக செய்து அதை பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் பருக்கள் படிப்படியாக குறையும்.

ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் நிறைந்தது

மாம்பழத் தோல்களில் ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் ஃபிரீ ரேடிக்கல்கள் மூலம் ஏற்படும் தீங்கினால் விளையும் பாதிப்பை குறைக்க உதவியாக இருக்கிறது. இந்த ஃபிரீ ரேடிக்கல்கள் தோல், இதயம், கண்கள் ஆகிய பாகங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்புகளை எல்லாம் மாம்பழத் தோல்கள் மூலம் கட்டுப்படுத்தலாம்.