புதிய பரிமாணத்துடன் கொண்டு வரப்படும் பேருந்துகள்!! தமிழக அரசின் சூப்பரான அறிவிப்பு!!

0
140
Buses brought with a new dimension!! Tamil Nadu government's great announcement!!
Buses brought with a new dimension!! Tamil Nadu government's great announcement!!

புதிய பரிமாணத்துடன் கொண்டு வரப்படும் பேருந்துகள்!! தமிழக அரசின் சூப்பரான அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகள் அனைத்துமே சரியான வசதிகள் இல்லாமல், பராமரிக்காமல் உள்ளது. மேலும், மிகவும் பொறுமையாக செல்கிறது என்று தமிழக மக்கள் ஏராளமான புகார்களை கூறி வருகின்றனர்.

இதனால் தமிழக அரசு புதிய திட்டங்களை தினமும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதாவது, அரசு பேருந்துகளை சீரமைத்து தனியார் பேருந்துகள் போல சிறப்பாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

மேலும், புதிய பேருந்துகளை வாங்குவதற்கும், சில ஏசி பேருந்துகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து தற்போது 450  அரசு பேருந்துகளை வாங்குவதற்கு டெண்டர் வழங்கி உள்ளது.

இவ்வாறு டெண்டர் விடப்படும் போது அனைத்து பேருந்துகளுக்கும் புதிதாக மஞ்சள் நிறம் அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வெள்ளி மற்றும் நீல நிறத்தில் இருக்கும் பேருந்துகள் அனைத்தும் தற்போது மஞ்சள் நிறத்திற்கு மாறி வருகிறது.

மேலும், பேருந்துகளில் தலையணை வசதி கொண்ட படுக்கைகள், சார்ஜிங் பாயிண்ட்டுகள், மற்றும் இருக்கை கவர்களில் துணிகளுக்கு பதிலாக ரெக்சின்கள் கொண்ட சீட் அமைக்கப்பட உள்ளது.

மேலும், பேருந்துகளில் இன்னும் அதிகளவு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று டிஎன்எஸ்சிடி கடந்த மாதம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளது.

பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிப்பது தற்போது முடிவடைய இருக்கிறது. எனவே, விரைவாக இந்த பேருந்துகள் அனைத்தும் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள பராமரிப்பு செய்யப்படாத பேருந்துகள் அனைத்தும் விரைவாக சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும், ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்கவும், ஐநூறு பழைய பேருந்துகளை சீரமைக்கவும் மொத்தம் ஐநூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் பச்சை நிறத்துடன் துவங்கப்பட்ட பேருந்துகள், அதன் பிறகு நீல நிறமாக மாற்றப்பட்டு, தற்போது மஞ்சள் நிறமாக மாற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்துகளுக்கான பணிகள் சென்னை, திருச்சி, கரூர் மாவட்டங்களில் விரைவாக நடைபெற்று வருகிறது.

Previous articleஇனி வாட்ஸ் அப் உரையாடலை பேக்கப் எடுக்கலாம்!!வாட்ஸ் அப் புதிய அப்டேட்!!
Next articleவிவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! ஆகஸ்ட் வரை கால அவகாசம் நீடிப்பு!!