பேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

பேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

திமுக அரசு தேர்தலின் போது வெளியிட்ட அறிவிப்பில் அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. தற்போது அந்த அறிவிப்பானது நடைமுறையில் இருகின்றது. கட்டணமில்லாத பயண சீட்டு வழங்குவதால் மகளிர்களை நடத்துனர்கள் மரியாதையின்றி  நடத்துவதாக புகார் எழுந்து வருகிறது.

மேலும் பேருந்து நிலையத்தில் ஒருவர் மற்றும் நின்று கொண்டுயிருந்தால் பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றனர் என்றும் புகார் எழுந்து வருகிறது. பேருந்தில் இருந்து  ஒருவர் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மகளிர்கள் இறங்கும் பொழுது பேருந்து நிற்கும்  இடத்தில் நிற்காமல் பேருந்து நிலையத்திலிருந்து சற்று தூரம் சென்று  நிற்க கூடாது என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மேலும் முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள்    பயணம் செய்யும் பொழுது அவர்களுக்கு அமர இருக்கைகள் கிடைக்க உதவி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. பயணிகள் ஏறியவுடன் பேருந்தின் கதவை மூடிய நிலையில் இயக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.  பள்ளி ,கல்லூரி மாணவர்கள் மற்றும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் இருந்து ஏறும்பொழுதும், இறங்கும் பொழுதும் கூர்ந்து கவனித்து அவர்களை குறித்த இடத்தில் இறக்கி விட வேண்டும் எனவும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மேலும்  பேருந்தை இயக்கும்பொழுது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இருவரும் கைபேசியை பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. பேருந்து நிறுத்தம் வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னதாகவே பேருந்து நிறுத்தும்  இடத்தின் பெயரை  கூற வேண்டும் பயணிகள் தயாராகி விடுவார்கள் எனவும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலே  கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.