உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

Photo of author

By Parthipan K

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

Parthipan K

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 17 வயதான மாணவி பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.இவரது இன்ஸ்ட்டாகிராமில் இருந்த புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங்க் செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை கண்டு அதிர்ச்சியான மாணவி விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட நபரை பிடிப்பதற்காக போலீசார், மைலாப்பூர் சபைர் க்ரைம் பிரிவுடன் இணைந்து விசாரணையை தொடர்ந்தனர்.இன்ஸ்ட்டாகிராமின் ஐபி முகவரியை கொண்டு விசாரித்ததில், அது சேலம் மாவட்டம் அஸ்தம்ப்பபட்டியைச் சேர்ந்த பரசுராமன் (19) என்பது தெரிய வந்தது.

அதாவது, பரசுராமனின் குடும்பம் மாணவிக்கு மிக நெருக்கமான உறவினர் என்று தெரிய வந்தது.பரசுராமனின் தந்தை அப்பகுதியில் பிரபலமான தொழிலதிபர்.பரசுராமன், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங்க் செய்து ரசிப்பதை வழக்கமாக்கியுள்ளார். அதன்படி உறவுக்கார பெண்ணின் புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து அவருக்கே அனுப்பி மிரட்டியது தெரிய வந்தது.

சென்னை மாணவியின் புகைப்படங்களை மார்பிங்க் செய்து மிரட்டிய பரசுராமனை போலீசார் கைது செய்தனர்.பரசுராமன் மீது போக்சோ மற்றும் ஐடி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம் என்று போலீசார்
தெரிவித்தனர்.