இது வாங்கினால் இது ஃப்ரீ!! தக்காளி விலையினால் கடைக்காரர்களின் விநோத அறிவிப்பு!!
நாடு முழுவதும் தற்போது அனைத்து காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை தாறு மாறாக உயர்ந்து வருகிறது.
ஆரம்பத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை பத்து அல்லது இருபது ரூபாய் என்று இருந்த காலங்கள் தாண்டி இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 100 தாண்டி 200 தொடக்கூடிய நிலைமையில் உள்ளது.
இதனால் மக்கள் பெரும் இன்னலில் சிக்கி வருகின்றனர். இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், தக்காளிக்கு பாதுகாப்பு வழங்குவது முதற்கொண்டு அதை இலவசமாக தருவது வரை ஏராளமான சம்பவங்கள் தினம்தோறும் நடந்து வருகிறது.
அந்த வகையில், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு ஷுகடை அதிபர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், அவருடைய கடையில் ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை காலணிகள் வாங்குவோருக்கு ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவரைத்தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அசோக் நகரில் மொபைல் போன் கடை உரிமையாளர் ஒருவர், தன்னிடம் ஒரு ஆண்டிராய்டு போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி இலவசம் என்று ஒரு விநோத அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
எனவே, மக்கள் காலணிகள் அல்லது ஸ்மார்ட் போன் வாங்க செல்கிறார்களோ இல்லையோ தக்காளி வாங்க செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், தக்காளி விலை உயர்வதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாவிலைக்கடைகளிலும் தக்காளி வழங்கப்பட்டு வருகிறது. காய்கறிகளில் தக்காளியின் விலை உயர்ந்தது மட்டுமல்லாமல், பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய் என்று மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்த காய்கறிகளின் உயர்வில் இருந்து மீளாத மக்களுக்கு மேலும், அதிர்ச்சியை தரும் விதமாக மளிகை பொருட்களின் விலையும் பெருமளவில் உயர்ந்துள்ளது.எனவே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பெரும் முயற்சி செய்து வருகிறது.