ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!! தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மனு கொடுத்த அமைப்பு!! 

0
38
Supreme Court refused to ban Jallikattu!! The organization filed a petition again against the verdict!!
Supreme Court refused to ban Jallikattu!! The organization filed a petition again against the verdict!!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!! தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மனு கொடுத்த அமைப்பு!! 

ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியதை அடுத்து மறு ஆய்வு செய்ய பீட்டா அமைப்பு மீண்டும் மனு அளித்துள்ளது.

தமிழர் திருநாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. சில காலங்கள் கோர்ட்டின் தடை காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டது. இதை எதிர்த்து மக்கள் கூட்டம் திரண்டு போராட்டத்தில் இறங்கினர். இதன் காரணமாக அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது.

இதனால் தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.  எனவே  ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து, கடந்த மே மாதம் 18-ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை இ்ல்லை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பை  அளித்தனர்.

இதனால் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யகோரி பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த அமைப்பின் சார்பில் வக்கீல் பீரித்தா ஸ்ரீ குமார் கடந்த 1-ஆம் தேதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் இயற்கையான செயல்பண்புகளுக்கும், காளை, எருதுகளின் உடலமைப்பு, குணங்களுக்கும் எதிரானவை. மேலும் சொல்ல முடியாத அளவுக்கு வலி, வேதனையை அளிப்பதுடன், வதைக்கும் உள்ளாகின்றன. 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட கம்பாலா, ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்த்து விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவற்றை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலிக்க தவறிவிட்டது.

ஜல்லிக்கட்டை அனுமதித்து  சட்டத்தை உறுதி செய்து  சுப்ரீம் கோர்ட் மிகப்பெரிய சட்டத் தவறை செய்துள்ளதுடன் நீதியும் தவறியுள்ளது. நாகராஜா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பையும், ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பையும் சுப்ரீம் கோர்ட்டு கருத்தில் கொள்ளவில்லை.

எனவே, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தையும், கம்பாலா போட்டிகளை அனுமதிக்கும் மராட்டிய, கர்நாடக அரசுகளின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதற்கான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.