ஆகாச கருடன் கிழங்கை இவ்வாறு கட்டினால் மட்டுமே கண் திருஷ்டி ஒழியும்!

Photo of author

By Divya

ஆகாச கருடன் கிழங்கை இவ்வாறு கட்டினால் மட்டுமே கண் திருஷ்டி ஒழியும்!

‘கண் திருஷ்டி’ இந்த பெயரை கேட்டாலே அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படும். காரணம் கண் திருஷ்டி இருக்கும் வீட்டில் நிம்மதி என்ற ஒன்று இருக்காது. கஷ்டங்கள் மட்டுமே நிறைந்து இருக்கும்.

கண் திருஷ்டி உள்ள வீட்டில் சண்டை சச்சரவு மட்டுமே அதிகம் ஏற்படும். வீட்டில் பீடை, தரித்திரம் பிடித்தது போல் உணர்வு ஏற்படும். சுப காரியங்கள் நடைபெறுவது அரிதானவையாக மாறிவிடும்.

இந்த கண் திருஷ்டி நீங்க வேண்டும், யாருடைய கண் திருஷ்டியும் வீட்டின் மீது படக்கூடாது என்பதற்காக தான் வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை அறுத்து குங்குமம் தடவி வைக்கிறோம். சிலர் வீட்டு வாசலில் கற்றாழையை தொங்க விடுவார்கள். ஒருசிலர் ஆகாச கருடன் கிழங்கை கட்டி வைப்பார்கள்.

இந்த ஆகாச கருடன் கிழங்கை கட்டி வைத்தால் கண் திருஷ்டி நீங்கி விடுமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். ஆகாச கருடன் கிழங்கை கட்டி வைப்பதில் முறையாக செய்தால் மட்டுமே கண் திருஷ்டி நீங்கும்.

அதற்கு முதலில் ஆகாச கருடன் கிழங்கை வாங்கி வந்து மஞ்சள் கலந்த நீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஆகாச கருடன் கிழங்கில் 27 இடத்தில் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு அதை எடுத்து வீட்டு வாசலில் கட்டி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே கண் திருஷ்டி முழுமையாக நீங்கும்.