ஒல்லியான பின்னலை தடிமனாக மாற்ற “தேங்காய் எண்ணெய் +தேன்”.. இவ்வாறு பயன்படுத்துங்கள்!

0
133
#image_title

ஒல்லியான பின்னலை தடிமனாக மாற்ற “தேங்காய் எண்ணெய் +தேன்”.. இவ்வாறு பயன்படுத்துங்கள்!

கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருந்தால் பெண்களுக்கு அழகு இன்னும் கூடும். ஆனால் காலம் மாறிவிட்டது. உணவு பழக்க வழக்கமும் தான். அதனால் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இளநரை, முடி கொட்டல், பேன், ஈறு, பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகளை அதிகப் பெண்கள் சந்தித்து வருகின்றனர்.

இதில் முடி கொட்டல் பாதிப்பு 100க்கு 90 சதவீத பெண்களுக்கு தீராத பிரச்சனையாக இருக்கின்றது. இதை தேங்காய் மூலம் சரி செய்ய முடியும்.

*தேங்காய் எண்ணெய்
*வெங்காயச்சாறு

ஒரு கிண்ணத்தில் உங்கள் முடிக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி 2 ஸ்பூன் அளவு வெங்காயச்சாறு கலந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.

*தேங்காய் எண்ணெய்
*தேன்
*கற்றாழை ஜெல்

தேங்காய் எண்ணெயில் 1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் ப்ரஸ் கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கி கூந்தலின் வேர்ப்பகுதியில் படும்படி தடவி ஊறவைத்து தலையை அலசி வந்தால் பின்னல் அடர்த்தி அதிகமாகும்.

*தேங்காய் எண்ணெய்
*செம்பருத்தி தூள்
*வெட்டிவேர்

செம்பருத்தி பூ(இதழ்) மற்றும் செம்பருத்தி இலையை உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் கொள்ளவும். அதோடு சிறிது வெட்டிவேரை சேர்த்து ஊற விட்டு தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.