கால்சியம் சத்து நிறைந்த ஸ்வீட்!! இதை சாப்பிட்டால் எலும்பு எக்கு போல் வலிமை பெறும்!!
குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் எலும்பு ஆரோக்கியம் முக்கியம்.ஆனால் ஒருசிலருக்கு சத்து குறைபாடு ஏற்பட்டு நடப்பது,நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வது.ஓடுவது,நிற்பது போன்ற செயல்களை செய்யும் பொழுது அதிகளவு உடல் வலி ஏற்படும்.
இதற்கு காரணம் எலும்புகளில் ஏற்படும் கால்சியம் குறைபாடு தான்.உடல் இயக்கத்திற்கு எலும்பு வலிமை அவசியம் ஆகும்.ராகியில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் அதை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது எலும்பு வலிமை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)ராகி மாவு – 1 கப்
2)வெல்லம் – 1 கப்
3)உப்பு – 1/4 தேக்கரண்டி
4)தேங்காய் துருவல் – 1 கப்
செய்முறை:-
அகலமான கிண்ணத்தில் ஒரு கப் ராகி மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.பிறகு இளஞ்சூடான தண்ணீர் தேவையான அளவு மாவில் ஊற்றி கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அரை மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவி வைத்துக் கொள்ளவும்.ஒரு தட்டில் பொடித்த வெல்லம் ஒரு கப் மற்றும் துருவிய தேங்காயை போட்டு மிக்ஸ் செய்யவும்.
அதன் பிறகு ஒரு வாழை இலையில் கொழுக்கட்டை மாவை சிறு உருண்டையாக வைத்து தட்டிக் கொள்ளவும்.அதில் தேங்காய் + வெல்லம் மிக்ஸ் ஒரு உருண்டை வைத்து தங்களுக்கு பிடித்த வடிவத்தில் கொழுக்கட்டை மாவை பிடித்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் இட்லி தட்டு வைத்து அதன் மேல் கொழுக்கட்டை வைத்துள்ள வாழை இலையை வைக்கவும்.பிறகு மூடி போட்டு 15 முதல் 20 நிமிடங்களுக்கு வேகவிட்டு எடுத்தால் ஆரோக்கியம் நிறைந்த ராகி கொழுக்கட்டை தயார்.