National

வாய், தலை-2, கண்கள்- 4 பிறந்த அதிசய கன்று! குவிந்த மக்கள்!

உத்தரப்பிரதேசத்தில் இந்த அதிசயமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாக இந்த அரிய சம்பவம் எங்கோ ஒரு முறை தான் நடக்கும். இம்முறை உத்தரபிரதேசத்தில் உள்ள அரவிந்த் என்பவரின் வீட்டில் ஒரு பசுவுக்கு நான்கு கண்கள் இரண்டு வாய் இரண்டு தலை கொண்டு கன்று ஒன்று பிறந்துள்ள சம்பவம் அங்கு தெய்வீக அருள் என கருதப்படுகிறது.

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சன்டாலி என்ற கிராமத்தில் வசித்து வரும் அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசுவிற்கு அதிசய கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. அந்த கன்றுக்குட்டிக்கு இரண்டு வாய் இரண்டு காதுகள் நான்கு கண்கள் இரண்டு தலைகள் உள்ளது. இப்படி பிறந்தோம் பசுவும் கன்றும் நலமாகவே உள்ளன.

அப்பகுதி மக்கள் இது ஒரு தெய்வீக அதிசயமாக கருதுகின்றனர். அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் இது ஒரு இயற்கை அதிசயம் மற்றும் கடவுளின் பேரருள் என்று கூறுகின்றனர்.


இதுகுறித்து கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த கிராமத்திற்கு வந்து அந்த அரிய நிகழ்வை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து சண்டாவாலி தலைமை கால்நடை மருத்துவர் சத்யபிரகாஷ் பாண்டே கூறுகையில், கரு வளர்ச்சி ஆகும் பொழுது உயிரணுக்களில் அசாதாரணமான வளர்ச்சி இதுபோன்ற சம்பவங்களை உருவாக்கும். அதன்படி கர்ப்பப்பையில் வளரும் கரு வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் பொழுது செல்கள் பல பகுதிகளாக பிரித்து இந்த செயல்பாட்டின் மூலம் சில சமயங்களில் உயிரணுக்கள் அதிகப் படியான வளர்ச்சி அடைவதால் இந்த இரண்டு தலைகள் உருவாகியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் இது தெய்வீக அதிசயம் அல்ல என்று கூறினார்.

கரு உருவாவது தெய்வ பாக்கியம் என்று கருதும் மக்களுக்கு 2 தலை 2 காதுகள் நான்கு கண்களுடன் பிறந்த கன்று குட்டி நிச்சயமாக ஒரு தெய்வீக அதிசயம்தான்.

Leave a Comment