ராஜராஜ சோழனை இந்து என்று சொல்வது கேவலமானது!! சீமானின் பகீர் பேட்டி!!

Photo of author

By Rupa

ராஜராஜ சோழனை இந்து என்று சொல்வது கேவலமானது!! சீமானின் பகீர் பேட்டி!!

Rupa

Calling Rajaraja Chola a Hindu is disgusting!! Seeman's Bagheer interview!!

ராஜராஜ சோழனை இந்து என்று சொல்வது கேவலமானது!! சீமானின் பகீர் பேட்டி!!

மா.பொ சிவஞானம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு சீமான் மாலை போட்டு மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் ஒருவர், இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் ராஜராஜ சோழனை இந்து அரசனாக பேசியது குறித்து கேள்வி கேட்டார். அதற்கு சீமான் கூறியதாவது, வெற்றிமாறன் சொன்னதில் எந்தவித மாற்றமும் இல்லை. அவர் கூறியது உண்மைதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் தான்  திரைகலையை அறிந்திருக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் பொதுப்படையாக மாற்றி கற்றுக் கொள்ளலாம் என்ற அக்கால திராவிட இயக்கங்கள் தான்.

அந்த திராவிட இயக்கத் தலைவர்களாக பேரறிஞர் அண்ணா, ஐயா கலைஞர், எம்ஜி ஆர் ஆகியோர் காணப்பட்டனர். அதன் அடிப்படையில் வெற்றிமாறன் கூறியுள்ளார். குறிப்பாக ராஜராஜ சோழனின் இந்து என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு கூறுபவர்களை இது பார்த்தால் திருவள்ளுவருக்கு காவி வேட்டி போட்டது போல தான் உள்ளது. அந்த காலத்தில் எல்லாம் இந்து நாடு, இந்து மதம் என்பதே கிடையாது. உலக மக்கள் அனைவருக்குமே தெரியும் ராஜராஜ சோழன் சைவ மரபினர் என்பது.

அவர் சிவனை தான் வழிபட்டார். மேலும் 12 திருமறைகளை கரையான் அழிக்காமல் காப்பாற்றி வந்தார். அவ்வாறு இருந்த நிலையில், இந்த காலகட்டத்தில் இது எங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி அதனை கரையான் போல அரித்து வருகின்றனர். சில அரசியல்வாதிகள் தமிழ் வரலாற்றில் யாரெல்லாம் புகழின் உச்சியில் இருந்தார்களோ அவர்களை எல்லாம் தனக்கானவர்கள் என்று மாற்றிக் கொள்கின்றனர். அப்படி பார்த்தால் ஆர் என் ரவி ஒரு ஆன்மீகவாதி, ஆனால் இந்து என்று ஒருபோதும் பேசியதில்லை. மேலும் ராஜராஜன் எங்களுடைய அடையாளம் அவர் கட்டிய கோவில் தமிழர்கள் இனத்திற்கே பெருமை வாய்ந்தது என்று கூறினார்.