அடேங்கப்பா இந்த ஆப்பின் மூலம் மாதவிடாய் காலத்தில் தெரிந்து கொள்ளலாமா? மிஸ் பண்ணாம பாருங்க!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் வாட்ஸ்அப் பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
தற்போது வாட்ஸ் அப் செயலியில் பெண்களுக்காக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனமானது பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக்கிய அப்டேட்களை மட்டுமே வெளியிடுகிறது. இந்தப் புதிய அப்டேட்ஸ் பெண்களின் மாதவிடாய் ஆர்வத்தை கண்காணித்து உதவும் வகையில் ட்ராக்கரை அறிமுகம் செய்துள்ளது. பெண்களுக்கான சுகாதார பிராண்டான சிரோனா ஹைஜீன், வாட்ஸ்அப் உடன் இணைந்து, இந்தியாவின் முதல் பீரியட் டிராக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெண்கள் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் இன் மூலம் கண்காணிக்க முடியும்.
9718866644 என்ற எண்ணெய் பதிவு செய்யவேண்டும் பதிவு செய்தபின் இந்த எண்ணிற்கு ஹாய் என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். பீரியட் ட்ராக்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் சிரோனா உங்களுக்கு கடைசியாக எப்போ மாதவிடாய் ஏற்பட்டது.
இரத்தப்போக்கு எப்படி இருந்தது என தனிப்பட்ட விவரங்களில் கேள்வி கேட்கும். சிரோனாவிடம் சில கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும். சிரோனாவிடம் முழு விவரங்களை கொடுத்த பின் உங்களுக்கு அடுத்த மாதவிடாய் எப்போ ஏற்படும் என்றும் கருமுட்டை உருவாக்கம் – கருவுறுவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும் நாட்கள் – அடுத்த மாதவிடாய் காலம் உள்ளிட்டவை விரிவாக வரும். இதன் மூலம் பயனரின் மாதவிடாய் தேதியை நினைவூட்டூதல் மற்றும் வரவிருக்கும் சுழற்சி தேதிகளைப் வாட்ஸ்அப்பில் தெரிந்து கொள்ளலாம். சிரோனாவின் இந்த முயற்சி பெண்களுக்கு மிகுந்த பயனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.