உலக நாடுகள் தவித்து வரும் நிலையில் வடகொரியா இப்படி செய்யலாமா?

Photo of author

By Parthipan K

வடகொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் நீர்மூழ்கி ஏவுகணை சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பான செயற்கைக்கோள் படங்களை வெளியிட்ட அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், வட கொரியாவின் சின்போ கப்பல் தளத்தில் அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், பராமரிப்பு பணியாக கூட இருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ள அதிகாரிகள், கண்டிப்பாக ஏவுகணை சோதனைக்கான சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கு இல்லை என தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, சின்போ கப்பல் தளம் அருகாமையில் நீர்மூழ்கி கப்பல் ஒன்று நங்கூரமிட்டுள்ளதும் சந்தேகத்தை வலுவடைய செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.