கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!.

0
168

கட்சியின் முக்கிய பிரமுகரே இந்த கீழ் தனமான செயலை செய்யலாமா?..வைரலாகும் வீடியோ!!.

உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வில் முக்கிய பிரமுகராக இருப்பவர் தான் வர்த்தகர் வினிதா அகர்வால்.மனைவி மற்றும் கணவருர் இருவரும் சேர்ந்து 2 மருத்துவர்களிடம் ரூ.1.8 லட்சம் கொடுத்து ஒரு குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார்.ஆனால் அது சில நாட்களுக்கு முன்பு அது கடத்தல் குழந்தை என பின்னரே தெரிய வந்துள்ளது.அகர்வால் தம்பதிக்கு ஒரே ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என கவலையுடன் இருந்து வந்துள்ளனர்.

இதை அறிந்த பெற்றோர்கள் இதற்காக வேறொருவரின் குழந்தையை வாங்க முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து டாக்டர்களின் பின்னணியில் ஒரு கும்பலே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் மற்றும் கடத்தல் நபர் உள்பட 8 பேர் கொண்ட கடத்தல் கும்பலை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.அதன்பிறகு குழந்தை மீட்டு உரிய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.அந்த குழந்தையை ஒப்படைக்கும் வீடியோ காட்சிகளையும் மேலும் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டனர்.

அதன்படி ரயில்வே நிலையத்தில் தனது தாயாருடன் இரவு நேரத்தில் 7 மாத குழந்தை படுத்து உறங்கி கொண்டிருக்கின்றது.அந்த வழியே ஒரு மர்ம நபர் கடந்து செல்கிறார். அவ்வழியே செல்லும் போதெல்லாம் அந்த குழந்தையை நோட்டம் போட்டு சென்றிருக்கிறார். மீண்டும் அந்த பகுதிக்கு வரும் அந்நபர் குழந்தையை எடுத்து கொண்டு நின்று கொண்டிருந்த ரெயில் ஒன்றை நோக்கி ஓடுகிறார். இந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளன.

இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் அந்த குழந்தை, ரெயில் நிலையத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பா.ஜ.க. பிரமுகரின் வீட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது. கடத்தலில் ஈடுபட்ட நபர் தீப் குமார் என தெரிய வந்துள்ளது. அவர்களுடன் தொடர்புடைய 2 டாக்டர்கள் ஹத்ராஸ் மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு சில சுகாதார பணியாளர்களுக்கும் தொடர்பு உள்ளது என தெரிகிறது.மேலும் அதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Previous articleஸ்ரீமதியின் வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு ! கொலை அல்ல தற்கொலை?
Next article9 வருடங்களுக்கு ஒரே நாளில் விஜய் அஜித் படங்கள்… பொங்கல் ரேஸில் அஜித் 61 & வாரிசு!