இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் ஒன்னவே போட்டுக்கலாமா??உலக சுகாதார அமைப்பு கூறியது என்ன??
இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம் என்ற கருத்துக்கள் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், இது மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அதற்கான சரியான விளக்கமும் தந்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகின்ற நிலையில் மற்றொருபுறம், கொரோனா வைரஸ் ஒலிக்க அதற்கு தேவையான மருந்துகள், சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகள் குறித்த நிறைய செய்திகளும் தினம் தினம் வெளியாகி வருகிறது.
தாய்லாந்து போன்ற ஒருசில நாடுகளில் இரண்டு தடுப்பூசிகளையும் ஒரே நேரத்தில் போட்டுகொண்டத்தால் (அதாவது வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால், இரண்டு ஊசிகளை கலந்து ஒன்றாகவே போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகி கொண்டிருக்கிறது.ஆனால், இது சரியானதல்ல என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்த சூழலில், இரண்டு வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை ஒரே நேரத்தில் போட்டுக்கொள்ளலாம் என்று சொல்வதும், அதற்கு சிபாரிசு செய்வதும் மிகவும் ஆபத்தைதான் ஏற்படுத்தும். இதற்கான உரிய தரவுகள், ஆய்வுகள் செய்தபிறகே, இரண்டு ஊசிகளை பயன்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டும்’ என்று உலக சுகாதார அமைப்பு தெரித்துள்ளது.