தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு?! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!

0
140

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அன்பில் கஜேஷ் பொய்யாமொழி பதில் அளித்து உள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் கூறிய நிலையில் தற்போது வைரஸ் தோற்று மிகவும் குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி முதல் புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

மேலும், கொரோனாவானது குறைந்து வரும் நிலையில், மாணவர்களுக்கு பள்ளி திறந்த நாள் முதல் வகுப்புகள் நடைபெறும் என அந்த மாநில முதல்வர் ரெங்கசாமி அறிவித்து உள்ளார்.தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வந்தது. ஆனால், மாணவர்களின் உயிரைக்காட்டிலும், படிப்பு முக்கியமானது அல்ல என தமிழக முதல்வர் அறிவித்தார்.

இந்த நிலையில் மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், கல்வி டிவி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்தார். அப்பொழுது பேசிய அமைச்சர், புதுவையைப் போலவே தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வினை செய்து முதல்வருக்கு அறிக்கை தரப்படும்.

அதன்பின் முதல்வர் கூறும் வழிகாட்டுதலின்படி, பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்வோம் என தெரிவித்து உள்ளார்.மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் ஏற்று பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கையினை விடுத்துள்ளது.

author avatar
Jayachithra