இந்த பருப்பில் கூட உப்புமா செய்யாலமா? நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!
தேவையான பொருள்கள்;அரை டம்ளர் இட்லி அரிசி , கால் டம்ளர் துவரம் பருப்பு , மூன்று பச்சை மிளகாய்,தேவையான அளவு உப்பு , ஒரு வெங்காயம் அதன் பிறகு தாளிக்க, கடுகு, உளுந்து, கடலைபருப்பு எடுத்து கொள்ள வேண்டும்.
செய்முறை;முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் சரியான அளவில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு பச்சை மிளகாயை மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அரிசி, பருப்பு இரண்டையும் தனி தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும் . இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் அதை ஒரு பாத்திரத்திலோ இட்லி தட்டிலோ ஊற்றி ஆவியில் வேகவிட வேண்டும் .
வேக வைத்ததை ஆற விட்டு உதிர்த்து கொள்ள வேண்டும். உதிர்க்கும் போது கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தடவி கொள்ளலாம். அதனையடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்து கொள்ள வேண்டும். அதில் அரைத்த பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கியதும், உதிர்த்த இட்லியை அதில் போட்டு நன்கு கலக்க வேண்டும் .சுவையான துவரை இட்லி உப்புமா தயார் ஆகி விடும்.