“பேட்டிங் சிறப்பு… பவுலிங்தான் சொதப்பல்… “ கேப்டன் ரோஹித் ஷர்மா புலம்பல்!

0
78

“பேட்டிங் சிறப்பு… பவுலிங்தான் சொதப்பல்… “ கேப்டன் ரோஹித் ஷர்மா புலம்பல்!

இந்திய அணி நேற்று நடந்த டி 20 போட்டியில் ஆஸி அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா  ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் 208 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்த இலக்கை 19.2 ஓவர்களில் எட்டியது. அந்த அணியின் கேமரூன் கிரின் மற்றும் மேத்யு வேட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் கடினமான இலக்கை எட்டியது. இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் மிக மோசமாக இருந்தது.

இதுபற்றி போட்டி முடிந்த பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “ நாங்கள் சிறப்பாக பேட் செய்தோம். 200 ரன்களுக்கு மேல் என்பது வீழ்த்தக் கூடிய ரன்கள்தான். ஆனால் நாங்கள் சிறப்பாக பந்துவீசவில்லை. களத்தில் கிடைத்த சில வாய்ப்புகளையும் தவறவிட்டோம். ஆனால் எங்கள் குறைகளைக் கண்டறியும் ஒரு போட்டியாக அமைந்தது. ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பேட்டிங் செய்தார்” எனக் கூறினார்.

இந்திய பவுலர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் 8 ஓவர்களில் 101 ரன்களை விட்டுக்கொடுத்தது பெறும் பின்னடைவாக அமைந்தது.