கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி!! அரை இறுதிக்கு முன்னேறிய வீராங்கனை!!
கனடா நாட்டின் கல்காரி நகரில் கனடாவின் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவிற்காக களமிறங்கிய பி.வி.சிந்து, சீன நாட்டின் வீராங்கனையான காவோ பேங் ஜீ என்பவரை எதிர்த்து விளையாடினார்.
இவர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 21-13 மற்றும் 21-7 என்ற நேர் செட் கணக்கில் காவோ பேங் ஜீயை வெற்றி பெற்றார்.
இதன் மூலம் பி.வி.சிந்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேற உள்ளார். இந்த சுற்றில் ஜப்பானின் வீராங்கனையான அகானே யகுமசியை எதிர்த்து விளையாட உள்ளார்.
இதேபோல் இந்திய வீரரான லட்சயா சென் என்பவர் தன்னுடன் போட்டியிட்ட ஜூலியன் கர்ராகி என்பவரை 21-8, 17-21 மற்றும் 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தற்போது லட்சயா சென் அரை இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளார்.
இந்த அரை இறுதி சுற்றில் ஜப்பானின் கென்டா நிஷிமோடா என்பவருடன் மோத உள்ளார். இந்த கனடாவின் ஓபன் சுற்றுகள் நாளை முடிவடைய இருக்கிறது.