10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை!
கொரோனா தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. முதல் அலையின் போது எந்தவித முன்னேற்பாடும் இன்றி இருந்ததாலும் தடுப்பூசி நடைமுறைக்கு வராது காரணத்தினாலும் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு இரண்டாம் அலையில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதன் பற்றாக்குறையால் மக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்தது.
அப்பொழுது தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.அதுமட்டுமின்றி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டது.நாளடைவில் தொற்று பாதிப்பானது குறைய தொடங்கியது.இரண்டு அலைகளும் கடந்து மக்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கை தற்போது தான் வாழ ஆரம்பித்தனர்.
தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானாக உறு மாற்றம் அடைந்து அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.தொற்று அதிக அளவு மக்களை பாதிக்காமல் இருக்க மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர்.
மேலும் சிறார்களுக்கு தற்பொழுது தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.மேலும் தொற்று பரவாமல் இருக்க 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தற்பொழுது பொதுத்தேர்வு நடக்க உள்ளதால் அவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து வருகின்றனர்.அந்தவகையில் 10 11 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இவர்கள் பள்ளிக்கு வருவதினால் தொற்று அதிக அளவு பரவக்கூடும் என்பதால் 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களின் நேரடி வகுப்பை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
அந்த மனு விசாரணை நடைபெற்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்-லைன் வழிக் கல்வி முறையை நடைமுறைப் படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை தமிழக அரசு ஏற்று ஆன்-லைன் வழிக் கல்வி முறையை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.