ஆவின் நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் தயார் செய்யப்படுகின்றன , அதை ஆவின் பாலகத்தில் மட்டுமின்றி பிற சூப்பர் மார்கெட்டிலும் விற்பனை செய்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டில் மட்டும், 574 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன, அதை இன்னும் அதிகமாக்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் நினைத்துள்ளது.
சென்னையில் மட்டும் 3000-க்கும் மேற்பட்ட பாலகங்கள் இயங்கிவரும் நிலையில், பலரும் அதில் ஆவின் பொருட்களை மட்டும் விற்பனை செய்யாமல். மற்ற நிறுவனத்தின் பால், இதர பொருட்கள் விற்பனை செய்வதாகவும்.
டீ கடை, மதிய உணவகம், போன்றவற்றை நடத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே ஆவின் பாலகம் என்ற பெயரில் மற்ற பொருட்களை விற்கும், பாலகதிற்கு மட்டும் அடுத்த மாதத்திலிருந்து ஆவின் பொருட்கள் சப்ளை நிறுத்தப்படும்.
மேலும் அவ்வாறு விற்றவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, புதிய விற்பனையாளர் களுக்கு உரிமம் வழங்கப்படும். எனவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.